10 மீ ஏர் ரைபிள் கலப்பு ஆட்டம்.. இந்தியாவின் 2 ஜோடிகளும் அடுத்தடுத்து தோல்வி.. மொத்தமாக வெளியேற்றம்
டோக்கியோ: 10 மீ ஏர் ரைபிள் கலப்பு ஆட்டத்தில் இந்தியாவின் தீபக் குமார் - அஞ்சும் ஜோடி மற்றும் திவ்யனேஷ் சிங் பன்வார் - இளவேனில் வாலறிவான் ஜோடி தோல்வி அடைந்து அதிர்ச்சி அளித்துள்ளது.
ஒலிம்பிக் 2020 தொடரின் இன்றைய நாள் ஆட்டத்தில் துப்பாக்கி சுடுதல் போட்டியின் இரண்டு பிரிவிலும் இந்திய அணி தோல்வி அடைந்து அதிர்ச்சி அளித்துள்ளது. இன்று காலை 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் அபிஷேக் வர்மா - யாஷாஸ்வினி சிங் ஜோடி தோல்வி அடைந்து வெளியேறியது.
10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் அபிஷேக் வர்மா - யாஷாஸ்வினி சிங் ஜோடி இந்தியா சார்பாக கலந்து கொண்டனர். முதல் சுற்றிலேயே 564 புள்ளிகள் மட்டுமே எடுத்து 17வது இடம் பிடித்து தோல்வி அடைந்தனர்.

தோல்வி
இன்னொரு பக்கம் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் மனு பாக்கர் - சௌரப் சௌத்ரி ஜோடி இரண்டாவது தோல்வி அடைந்து வெளியேறி உள்ளது. இரண்டாவது ரவுண்டில் 4 இடங்களுக்குள் வரும் அணி பைனல்ஸ் செல்லும். இரண்டாவது சுற்றில் வெறும் 380 புள்ளிகள் மட்டுமே இவர்கள் பெற்று 7ம் இடம் பிடித்து மனு பாக்கர் - சௌரப் சௌத்ரி ஜோடி வெளியேறியது.

கலப்பு ஆட்டம்
இந்த நிலையில் இன்னொரு பக்கம் இன்று 10 மீ ஏர் ரைபிள் கலப்பு ஆட்டம் நடைபெற்றது. இதில் திவ்யனேஷ் சிங் பன்வார் - இளவேனில் வாலறிவான் ஜோடி தோல்வி அடைந்தது. முக்கியமாக இளவேனில் வாலறிவான் ஆட்டம் இன்று அவ்வளவு சிறப்பாக இல்லை. இதனால் 626.5 புள்ளிகள் எடுத்து 12வது இடம் பிடித்து இவர்கள் குழு தோல்வி அடைந்தனர்.

தோல்வி
இன்னொரு பக்கம் 10 மீ ஏர் ரைபிள் கலப்பு ஆட்டத்தில் இந்தியாவின் தீபக் குமார் - அஞ்சும் ஜோடி தோல்வி அடைந்தனர். இவர்கள் இருவரும் மொத்தமாக 623.8 புள்ளிகள் மட்டுமே எடுத்தனர். இதனால் இந்த கோடி 18வது இடம் பிடித்து தோல்வி அடைந்தது.

மோசம்
10 மீ ஏர் ரைபிள் கலப்பு ஆட்டத்தில் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற முதல் எட்டு இடங்களுக்குள் வர வேண்டும். ஆனால் இந்தியாவின் இரண்டு அணியும் முதல் எட்டு இடங்களை பிடிக்கவில்லை. சீனாவின் கியான் யாங் ஹார்ன் யாங் குழு 633.2 புள்ளிகள் எடுத்து இதில் முதல் இடம் பிடித்தது.


Click it and Unblock the Notifications