Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

திக்திக் ஆட்டம்.. கோல் மழை.. கலக்கிய இந்திய ஆண்கள் ஹாக்கி படை.. ஜெர்மனியை வீழ்த்தியது எப்படி?

டோக்கியோ: ஒலிம்பிக் ஹாக்கி வரலாற்றில் இந்தியா ஹாக்கி அணி 41 வருடங்களுக்கு பின் பதக்கம் வாங்கி அசத்தி உள்ளது. கடைசியாக 1980 மாஸ்கோ ஒலிம்பிக்கில் வெறும் 6 அணிகள் ஆடிய போட்டியில் இந்தியா தங்கம் வென்றது. அதன்பின் இவ்வளவு ஆண்டுகள் கழித்து இந்தியா மீண்டும் பதக்கம் வென்றுள்ளது.

Recommended Video

India win bronze in men's hockey, beat Germany 5-4 | Tokyo 2020 | Olympics

இன்று ஜெர்மனிக்கு எதிரான போட்டியில் இந்தியா அபாரமாக ஆடி வெற்றிபெற்றது. ஜெர்மனியை இந்திய ஹாக்கி அணி 5:4 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வெற்றிபெற்றுள்ளது. செமி பைனலில் பெல்ஜியத்திடம் வீழ்ந்த இந்திய ஆண்கள் ஹாக்கி அணி தற்போது வெண்கல பதக்க போட்டியில் சிறப்பாக ஆடி வென்றுள்ளது.

குழு போட்டிகளில் ஜெர்மனியை எதிர்கொள்ளாத இந்தியா நேரடியாக வெண்கல போட்டியில் அந்த அணியை வீழ்த்தி உள்ளது. இந்த போட்டியில் இந்தியா வென்றது எப்படி என்று இங்கே பார்க்கலாம்..

ஆதிக்கம்

ஆதிக்கம்

ஆட்டத்தின் தொடக்கத்திலேயே ஜெர்மனி இந்தியாவிற்கு எதிராக ஆதிக்கம் செலுத்தியது. ஜெர்மனி தொடக்கத்திலேயே முதல் கோல் போட்டு முன்னிலை வகித்தது. ஆட்டத்தின் 2வது நிமிடத்திலேயே ஜெர்மனி முதல் கோல் போட்டது. 4வது நிமிடத்தில் இந்தியாவிற்கு பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் இந்தியாவின் ருபிண்டர் கோல் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். ஜெர்மனிக்கு 6வது நிமிடத்தில் மீண்டும் கோல் அடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

கீப்பர்

கீப்பர்

ஆனால் கீப்பர் ஸ்ரீஜீஷ் பந்தை தடுத்தார், இன்று இந்தியாவின் டிபன்ஸ் மோசமாக அமைந்துள்ளது. இந்தியா அஃபன்ஸிவ் ஆட்டம் ஆட நினைத்ததால் இன்று டிபன்ஸ் மோசமாக இருந்தது. முதல் 10 நிமிடங்கள் முழுக்க ஜெர்மனி களத்தில் ஆதிக்கம் செலுத்தியது.

பெனால்டி

பெனால்டி

ஆட்டத்தின் 15வது நிமிடத்தில் ஜெர்மனிக்கு மீண்டும் பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தது. ஆட்டத்தின் 15வது நிமிடத்தில் ஜெர்மனிக்கு மீண்டும் மூன்றாவது பெனால்டி கார்னர் கிடைத்து. அதை தொடர்ந்து நான்காவதாக இன்னொரு பெனால்டி கார்னர் வாய்ப்பும் கிடைத்தது. வரிசையாக பெனால்டி கார்னர் மூலம் ஜெர்மனி ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

கீப்பர் ஸ்ரீஜீஷ்

கீப்பர் ஸ்ரீஜீஷ்

நான்கு முறையும் இந்தியாவின் கீப்பர் ஸ்ரீஜீஷ் பந்தை தடுத்து அணியை காப்பாற்றினார். முதல் கால் ஆட்டத்தில் இந்தியாவிற்கு எதிராக ஜெர்மனி 1:0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது. அதன்பின் ஆட்டத்தின் 16வது நிமிடத்தில் இந்தியா முதல் கோல் போட்டது. இந்தியாவின் சிம்ரான் ஜித் முதல் கோல் போட்டு அசத்தினார். இதன்பின் ஆட்டத்தில் விறுவிறுப்பு கூடியது.

மீண்டும் வெற்றி

மீண்டும் வெற்றி

ஆனால் இந்தியாவிற்கு எதிரான ஆட்டத்தில் ஜெர்மனி மீண்டும் லீட் எடுத்தது. 22வது நிமிடத்தில் மீண்டும் ஜெர்மனி இரண்டாவது கோல் போட்டு முன்னிலை பெற்றது. பின்னர் மீண்டும் 24வது நிமிடத்தில் ஜெர்மனி 3வது கோல் போட்டு அதிக முன்னிலை பெற்றது. 26வது நிமிடத்தில் இந்தியாவிற்கு பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தது. இதை பயன்படுத்தி இந்தியா 2வது கோல் போட்டது. இந்தியாவின் ஹர்திக் சிங் கோல் போட்டு அசத்தினார்.

விறுவிறுப்பு

விறுவிறுப்பு

அதன்பின் ஆட்டம் மிகவும் விறுவிறுப்பாக சென்றது. சரியாக 30வது நிமிடத்தில் இந்தியாவின் ஹர்மன்பிரீத் சிங் கோல் போட்டு அசத்தினார். இதனால் முதல் பாதி ஆட்ட நேர முடிவில் இந்தியா 3: ஜெர்மனி 3 என்று ஆட்டம் சமன் ஆனது.ஆட்டத்தின் 31வது நிமிடத்தில் இந்தியாவிற்கு பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தது. நீண்ட நேரத்திற்கு பின் இந்தியாவிற்கு பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தது.

 பெனால்டி கார்னர்

பெனால்டி கார்னர்

பெனால்டி கார்னர் வாய்ப்பை பயன்படுத்தி இந்தியா 4வது கோல் போட்டது. ருபிண்டர் சிங் 31வது நிமிடத்தில் இந்தியாவிற்காக கோல் போட்டார். ஜெர்மனிக்கு எதிராக இந்தியா 4:3 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது. 34வது நிமிடத்தில் இந்தியா மீண்டும் கோல் போட்டு அசத்தியது. இரண்டாம் பாதி ஆட்டத்தில் இந்திய வீரர்கள் அபாரமான முறையில் ஆடினார்கள். 34வது நிமிடத்தில் இந்தியாவின் ஐந்தாவது கோலை சிம்ரான் ஜித் பதிவு செய்தார்.

வாய்ப்பு மேல் வாய்ப்பு

வாய்ப்பு மேல் வாய்ப்பு

37வது நிமிடத்தில் இந்தியாவிற்கு மீண்டும் கோல் அடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் நூலிழையில் கோல் வாய்ப்பை இந்தியாவின் மன்பிரீத் சிங் மிஸ் செய்தார். 42வது நிமிடத்தில் இந்தியாவிற்கு மேலும் ஒரு பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் இந்தியாவின் ஸ்மித் கோல் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.

44வது நிமிடத்தில் அடுத்தடுத்து ஜெர்மனிக்கு 2 பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அடுத்தடுத்த பெனால்டி கார்னர்களில் ஜெர்மனியால் கோல் அடிக்க முடியவில்லை.

விறுவிறுப்பு

விறுவிறுப்பு

கடைசி கால் ஆட்டத்திலும் இந்தியா ஆதிக்கம் செலுத்தியது. ஆட்டத்தின் கடைசி 15 நிமிடங்கள் விறுவிறுப்பாக சென்றது. அதன்பின் 47வது நிமிடத்தில் பெனால்டி கார்னர் மூலம் ஜெர்மனி 4வது கோல் அடித்தது. இதனால் ஆட்டத்தில் பரபரப்பு தொற்றிக்கொண்டது. 53வது நிமிடத்தில் ஜெர்மனிக்கு மீண்டும் பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தது.இதையும் சேவ் செய்து இந்திய அணியை காப்பாற்றினார் கீப்பர் ஸ்ரீஜேஷ்.

57வது நிமிடம்

57வது நிமிடம்

போட்டி முடியும் நேரத்தில் 57வது நிமிடத்தில் ஜெர்மனிக்கு பெனால்டி கார்னர் கிடைத்தது. ஆனால் கோல் அடிக்கும் வாய்ப்பை ஜெர்மனி நழுவவிட்டது. கடைசி 6 நொடி இருக்கும் போது ஜெர்மனிக்கு பெனால்டி கார்னர் கிடைத்தது. ஆனால் அதை ஸ்ரீஜேஷ் தடுக்க மிகவும் திரில்லான ஆட்டத்தில் இந்திய அணி வென்று வெண்கல பதக்கத்தை தட்டி சென்றது.

Story first published: Thursday, August 5, 2021, 18:39 [IST]
Other articles published on Aug 5, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+