For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கடைசி நொடி வரை போராட்டம்.. தீரத்தோடு விளையாடிய இந்திய ஹாக்கி மகளிர் அணி.. தோல்வி அடைந்தது எப்படி?

டோக்கியோ: பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்திய பெண்கள் ஹாக்கி அணி இன்று வெண்கல பதக்கத்திற்கான போட்டியில் தோல்வி அடைந்து வெளியேறியது. மூன்று கால் ஆட்டங்களை தனது கட்டுப்பாட்டில் வைத்து இருந்த இந்தியா நான்காவது கால் ஆட்டத்தில் சறுக்கி தோல்வி அடைந்தது. இந்திய அணி எப்படி தோல்வி அடைந்தது என்று விரிவாக பார்க்கலாம்.

Recommended Video

India Lose Bronze Medal Match to Great Britain 3-4 | Olympics

ஒலிம்பிக் 2020 தொடரில் வெண்கலம் வெல்லும் பொன்னான வாய்ப்பை இந்தியா நழுவவிட்டுள்ளது. கிரேட் பிரிட்டனுக்கு எதிராக 4:3 கோல் கணக்கில் இந்தியா தோல்வி அடைந்துள்ளது. நேற்று ஆண்கள் அணி வெண்கலம் வென்ற நிலையில் பெண்கள் அணி மீது அதிக எதிர்பார்ப்பு இருந்தது.

எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் தொடக்கத்தில் இருந்தே நன்றாக ஆடிய இந்திய பெண்கள் அணி, கடைசி கட்டத்தில் லேசாக சறுக்கி தோல்வி அடைந்தது.

என்ன நடந்தது

என்ன நடந்தது

இன்று ஆட்டத்தின் இரண்டாம் நிமிடத்தில் கிரேட் பிரிட்டனுக்கு பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தது. இரண்டாவது நிமிடத்தில் இந்த பெனால்டி கார்னரில் கோல் அடிக்கும் வாய்ப்பை பிரிட்டன் நழுவ விட்டது . முதல் 10 நிமிடங்கள் வரை ஆட்டம் மிகவும் நிதானமாக சென்றது. முதல் 10 நிமிடங்களில் இரண்டு அணிகளும் கோல் அடிக்கவில்லை.

பெனால்டி

பெனால்டி

10வது நிமிடத்தில் பிரிட்டன் அணிக்கு மீண்டும் பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் இதிலும் கோல் போடும் வாய்ப்பை பிரிட்டன் இழந்தது. இந்திய பெண்கள் அணியின் கீப்பர் சவிதா புனியா சிறப்பாக செயல்பட்டு சேவ் செயதார். ஆட்டத்தின் 12வது நிமிடத்தில் பிரிட்டன் அணிக்கு கோல் போடும் வாய்ப்பு கிடைத்தது.

சவிதா புனியா

சவிதா புனியா

இந்தியாவின் கீப்பர் மீண்டும் கோலை தடுத்தார். முதல் 12 நிமிடத்திற்கு உள்ளேயே 3 கோல்களை சவிதா புனியா சேவ் செய்து அசத்தினார். இரண்டு அணிகளுக்கு இடையிலான முதல் கால் ஆட்டத்தில் கோல் எதுவும் எடுக்கப்படவில்லை. முதல் கால் ஆட்டத்தில் இந்தியாவின் டிபன்ஸ், கீப்பிங் இரண்டும் அபாரமாக அமைந்து இருந்தது. இரண்டாம் கால் ஆட்டத்தின் தொடக்கத்திலேயே பிரிட்டன் அணி கோல் போட்டது

பிரிட்டன் முதல் கோல்

பிரிட்டன் முதல் கோல்

இந்தியாவிற்கு எதிராக 16வது நிமிடத்தில் பிரிட்டன் முதல் கோல் போட்டது. இந்தியாவின் தீப் கிரேஸ் செய்த தவறால் "செல்ப் கோல்" விழுந்தது. இதனால் இந்தியாவிற்கு எதிராக பிரிட்டன் 1:0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது . 17வது நிமிடத்தில் பிரிட்டனுக்கு மேலும் ஒரு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது.கோல் அடிக்கும் வாய்ப்பை மீண்டும் தவறவிட்டது பிரிட்டன்.

பெனால்டி கார்னர்

பெனால்டி கார்னர்

19வது நிமிடத்தில் இந்திய அணிக்கு முதல் பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் பொன்னான கோல் அடிக்கும் வாய்ப்பை இந்தியா இழந்தது. இரண்டாம் கால் ஆட்டத்தில் பிரிட்டன் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது. ஆட்டத்தின் 23வது நிமிடத்தில் பிரிட்டன் அணி இரண்டாவது கோல் போட்டது. இதனால் இந்தியாவிற்கு எதிராக பிரிட்டன் 2:0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. 23வது நிமிடத்தில் இந்தியாவிற்கு இரண்டாவது பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தது.

குர்ஜித் கோல்

குர்ஜித் கோல்

இந்தியாவின் குர்ஜித் கார் கோல் அடித்து அசத்தினார்.இந்தியாவிற்காக முக்கியமான போட்டிகளில் தொடர்ந்து குர்ஜித் கார் கோல் அடித்து அசத்தி வருகிறார். 26வது நிமிடத்தில் இந்தியாவிற்கு இன்னொரு பெனால்டி கார்னர் வாய்ப்பும் கிடைத்தது. இதில் இந்தியாவின் குர்ஜித் கார் மீண்டும் இன்னொரு கோல் போட்டு அசத்தினார். இதனால் இந்தியா vs பிரிட்டன் ஆட்டம் 2:2 என்ற சமன் ஆகியுள்ளது.

மீண்டு வந்தது

மீண்டு வந்தது

பின்னடைவை சந்தித்த இந்திய மகளிர் அணி வேகமாக மீண்டு வந்தது. அதன்பின் வேகம் எடுத்த இந்தியா மீண்டும் இன்னொரு கோல் போட்டது. ஆட்டத்தின் 27வது நிமிடத்தில் இந்தியாவின் கட்டாரியா 3வது கோல் போட்டார். இதனால் பிரிட்டனுக்கு எதிராக 3:2 என்ற கோல் கணக்கில் இந்தியா லீட் எடுத்தது.

வாய்ப்பு

வாய்ப்பு

இந்த நிலையில் இரண்டாம் பாதி ஆட்டத்தில் பிரிட்டனுக்கு மீண்டும் பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தது 32வது நிமிடத்தில் பிரிட்டனுக்கு பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் கோல் அடிக்கும் வாய்ப்பை பிரிட்டன் நழுவவிட்டது. 35வது நிமிடத்தில் பிரிட்டன் பெனால்டி கார்னரில் 3வது கோல் போட்டது. இதனால் ஆட்டம் 3:3 என்ற கணக்கில் சமன் ஆனது. 36வது நிமிடத்தில் இந்தியாவிற்கு பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தது.

மிஸ் செய்தது

மிஸ் செய்தது

ஆனால் இந்தியா கோல் அடிக்க முடியாமல் மிஸ் செய்தது . 39வது நிமிடத்தில் இந்தியா சிறிய ட்ரிங்ஸ் பிரேக் எடுத்தது. 44வது நிமிடத்தில் பிரிட்டன் அணிக்கு மீண்டும் கோல் அடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் இந்திய கீப்பர் சவிதா சிறப்பாக செயல்பட்டு கோலை சேவ் செய்தார். மூன்றாம் கால் ஆட்டத்தில் ஸ்கோர் இந்தியா 3, பிரிட்டன் 3 என்று சமன் ஆனது. ஆனால் 45, 46, 47வது நிமிடங்களில் வரிசையாக பிரிட்டனுக்கு பெனால்டி கார்னர் வாய்ப்பு கடைசி பெனால்டி கார்னரில் பிரிட்டன் கோல் அடித்து 4:3 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது

தோல்வி

தோல்வி

கடைசி 10 நிமிட ஆட்டங்கள் விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது. 51வது நிமிடத்தில் இந்தியாவிற்கு பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் 51வது நிமிடத்தில் இந்தியாவால் அடிக்க முடியவில்லை. கடைசி 2 நிமிட ஆட்டத்தில் இந்தியா கோல் அடிக்க தீவிரம் காட்டியது. கடைசி நொடி வரை இந்தியா தீரத்தோடு ஆடியது. ஆனால் இந்தியாவால் மேலும் ஒரு கோல் அடிக்க முடியவில்லை.

இதனால் ஒலிம்பிக் 2020 பெண்கள் ஹாக்கியில் வெண்கல பதக்கத்திற்கான ஆட்டத்தில் இந்தியா தோல்வி அடைந்தது.கிரேட் பிரிட்டனுக்கு எதிராக 4:3 கோல் கணக்கில் இந்தியா தோல்வி வெளியேறியது.

Story first published: Friday, August 6, 2021, 9:28 [IST]
Other articles published on Aug 6, 2021
English summary
Olympics 2020: How did the Indian women's hockey team lose to Great Britain in today's Bronze medal match.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+