For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கடைசி நொடி வரை போராட்டம்.. உயிரை கொடுத்து ஆடிய வீரர்கள்.. பெல்ஜியத்திடம் இந்தியா வீழ்ந்தது எப்படி?

டோக்கியோ: பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஹாக்கி செமி பைனல் ஆண்கள் ஆட்டத்தில் இந்தியா தோல்வி அடைந்துள்ளது. இந்திய அணி கடைசி நொடி வரை கடுமையாக போராடியும் கூட இன்று தோல்வியை தழுவியது. இந்திய அணி சறுக்கியது எங்கே?

Recommended Video

ஒட்டுமொத்த India-வை திரும்பி பார்க்க வைத்த வீரர்கள்.. தோல்வியிலும் ஜெயித்த Indian Hockey

பெல்ஜியம் அணிக்கு எதிரான ஹாக்கி செமி பைனல் ஆண்கள் போட்டியில் இந்தியா தோல்வி அடைந்து வெளியேறி உள்ளது. 5:2 என்ற கோல் கணக்கில் இந்தியா தோல்வி அடைந்து பைனல் செல்லும் வாய்ப்பை இழந்தது.இந்திய ஆண்கள் ஹாக்கி அணி 49 ஆண்டுகளுக்கு பின் செமி பைனலுக்கு தேர்வான நிலையில் இன்று நடந்த போட்டியில் போராடி தோல்வி அடைந்தது.

ஹாக்கி

ஹாக்கி

இன்றைய ஹாக்கி போட்டியில் தொடக்கத்தில் இருந்தே ஆட்டம் மிகவும் விறுவிறுப்பாக சென்றது. இரண்டு அணிகளுமே சம பலத்தோடு இருந்ததால் போட்டியில் எந்த நொடியில் யார் கோல் போடுவார்கள் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. பெல்ஜியம் அணிதான் இதில் முதலில் கோல் போட்டது. பெல்ஜியத்தின் லூயிபார்ட் முதல் கோல் அடித்தார். இவர் போட்டி தொடங்கிய இரண்டாவது நிமிடத்திலேயே கோல் அடைந்துவிட்டார்.

பெல்ஜியம்

பெல்ஜியம்

இதனால் ஆட்டம் லேசாக பெல்ஜியம் வசம் சென்றது. ஆனால் இந்திய அணி விடுவதாக இல்லை. இந்தியாவின் ஹர்மன்தீப் சிங் மற்றும் மன்தீப் சிங் இரண்டு பேருமே கோல் அடிக்க மிக தீவிரமாக முயன்றனர். அதன்படியே 7வது நிமிடத்திலேயே மிக அழகான ஷாட் மூலம் ஹர்மன்தீப் சிங் முதல் கோல் அடித்தார். இவர் கோல் அடித்த நொடியே பெல்ஜியம் கொஞ்சம் கலங்கி போனது.

எதிர்பார்க்கவில்லை

எதிர்பார்க்கவில்லை

இதை பெல்ஜியம் அணி கொஞ்சமும் எதிர்பார்க்காத நிலையில் லேசாக ஜெர்க் ஆனது. இதை பயன்படுத்திக்கொண்ட இந்திய அணி மேலும் ஒரு கோலை அடுத்த நிமிடமே போட்டது. இந்தியாவின் மன்பீத் சிங் எட்டாவது நிமிடத்திலேயே அடுத்த கோலை அடித்து இந்தியாவிற்கு லீட் கொடுத்தார். இதன் பின் லேசாக இந்தியாவின் ஆட்டம் சுணங்கியது.

டிபன்ஸ்

டிபன்ஸ்

வீரர்களின் டிபன்ஸ் இரண்டு அணிகளிடமும் மிக சிறப்பாக இருந்தது. முக்கியமாக இந்திய அணியின் டிபன்ஸ் பெரிய அளவில் நம்பிக்கை கொடுத்தது. இதன் காரணமாகவே முதல் பாதியின் இரண்டாம் காலிறுதியில் பெல்ஜியம் அணி இரண்டாவது கோல் அடிக்க முடியாமல் கொஞ்சம் திணறியது. ஆனாலும் 21வது நிமிடத்தில் வாய்ப்பை பயன்படுத்தி பெல்ஜியம் அணி இரண்டாவது கோல் அடித்தது.

சமன்

சமன்

இதனால் ஆட்டம் முதல் பாதியில் சமம் ஆனது. முதல் பாதியில் இந்தியா பெரிதாக பெனால்டி கார்னர்களை சரியாக பயன்படுத்தவில்லை. முக்கியமான முதல் பாதியின் கடைசியில் இந்தியாவிற்கு பெனால்டி கார்னர் கோல் அடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அதை இந்திய அணி சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை. அதன்பின் மீண்டும் இதே வாய்ப்பு இந்திய அணிக்கு கிடைத்தது.

இரண்டாம் பாதி

இரண்டாம் பாதி

இரண்டாம் பாதி ஆட்டத்தின் தொடக்கத்தில் மீண்டும் பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் இதிலும் இந்திய அணி சொதப்பியது. இரண்டு முக்கியமான பெனால்டி கார்னர்களை இந்திய அணி தவறவிட்டது. இது இந்திய அணிக்கு ஒரு வகையில் சரிவை கொடுத்தது. மூன்றாம் கால் ஆட்டத்தில் இந்திய அணியும், பெல்ஜியம் அணியும் கோல் போடுவதற்காக மிக தீவிரமாக முயற்சிகள் செய்தன. ஆனால் இரண்டு அணிகளும் மூன்றாம் கால் ஆட்டத்தில் கோல் போட முடியவில்லை.

முடிந்தது

முடிந்தது

மூன்றாம் கால் ஆட்டத்தில் இரண்டு அணிகளின் டிபன்சும் மிக சிறப்பாக இருந்தது. இதனால் மூன்றாம் கால் ஆட்டம் முழுக்க யார் கோல் அடிப்பார்கள் என்ற கேள்வியோடு திக் திக் என்றே நகர்ந்தது. இதனால் மொத்தமாக மூன்றாம் கால் ஆட்டம் எந்த கோலும் முடிக்கப்படாமல் முடிந்தது. இந்தியா மட்டும் தனது பெனால்டி கார்னரை சரியாக பயன்படுத்தி இருந்தால் 3 கோல்களோடு லீட் எடுத்து இருக்கும்.

மீண்டும்

மீண்டும்

இதையடுத்து ஆட்டம் லேசாக பெல்ஜியம் வசம் செல்ல தொடங்கியது. பெல்ஜியம் அணிக்கு கடைசி 15 நிமிடத்தில் இரண்டு பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தது. அதில் முதல் வாய்ப்பை இந்தியாவின் கீப்பர் ஸ்ரீஜேஷ் சிறப்பாக தடுத்தார். ஆனால் அடுத்த பெனால்டி கார்னரில் பெல்ஜியம் கோல் அடித்தது. கடைசி 15 நிமிடங்களே இருந்த நிலையில் பெல்ஜியம் மூன்று கோல் அடித்து முன்னிலை பெற்றது.

சொதப்பல்

சொதப்பல்

இதன் பின் லேசாக சொதப்பிய இந்திய அணி 50வது நிமிடத்தில் இன்னொரு பெனால்டி கார்னரை பெல்ஜியம் அணிக்கு பரிசளித்தது. ஆனால் இதை இந்தியாவின் கோல் கீப்பர் ஸ்ரீஜேஷ் காப்பாற்றினார். கடைசி 7 நிமிடங்கள் மட்டுமே இருந்த நிலையில் இந்தியாவின் தோல்வி கிட்டத்தட்ட செமி பைனலில் உறுதியானது. அதன்பின் மீண்டும் கிடைத்த வாய்ப்புகளை நழுவ விடாமல் தொடர்ந்த பெல்ஜியம் ஆதிக்கம் செலுத்தியது.

ஆதிக்கம்

ஆதிக்கம்

சரியாக ஆட்டத்தின் 52வது நிமிடத்தில் வரிசையாக இரண்டு பெனால்டி கார்னர் வாய்ப்புகள் பெல்ஜியம் அணிக்கு கிடைத்தது. இதில் பெல்ஜியம் அணி ஒரு கோல் போட்டு 4:2 என்ற கணக்கில் லீட் எடுத்தது. முதலில் இந்த நான்காவது கோல் குறித்த சந்தேகம் இருந்ததால் 3வது நடுவரிடம் சோதனை செய்து பின் கோல் உறுதி செய்யப்பட்டது. பின் ஆட்டம் முடியும் வரை இந்திய அணிக்கு கோல் அடிக்கும் வாய்ப்பு கிடைக்கவே இல்லை.

மீண்டும் பெனால்டி

மீண்டும் பெனால்டி

இதன்பின் மீண்டும் பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தது பெல்ஜியம் மேலும் ஒரு கோல் அடித்தது. இதனால் 5:2 என்ற கோல் கணக்கில் பெல்ஜியம் லீட் எடுத்தது. கடைசி நிமிடம் வரை கூடுதலாக கோல் அடிக்காத இந்தியா 5:2 என்ற கோல் கணக்கில் தோல்வி அடைந்து வெளியேறியது. இந்த போட்டியில் கடைசி நொடி வரை இந்தியா போராடினாலும் கூட பெரிய அளவில் பெனால்டி வாய்ப்புகள் இந்தியாவிற்கு கிடைக்காமல் போனது அணியின் தோல்விக்கு காரணமாக மாறியது.

Story first published: Tuesday, August 3, 2021, 11:11 [IST]
Other articles published on Aug 3, 2021
English summary
Olympics 2020: How Indian men hockey team loses to Belgium in today semi final match?
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+