போராட்டம்.. ஏமாற்றம்.. விரக்தி.. அர்ஜென்டினாவிடம் போராடி தோற்ற இந்திய பெண்கள் ஹாக்கி அணி.. எப்படி?
டோக்கியோ: அர்ஜென்டினாவிற்கு எதிரான செமி பைனல் ஹாக்கி போட்டியில் இந்திய பெண்கள் அணி தோல்வி அடைந்துள்ளது. இந்தியா கடும் போராட்டத்திற்கு பின் இந்த போட்டியில் தோல்வியை தழுவியது. இன்று களத்தில் என்ன நடந்தது என்று இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
ஒலிம்பிக் 2020 தொடரில் இந்திய ஹாக்கி அணிகள் மிகவும் சிறப்பாக ஆடி வருகின்றன. 49 வருடங்களுக்கு பின் முதல்முறையாக இந்திய ஆண்கள் அணி இந்த முறைதான் செமி பைனல் வந்தது. செமி பைனலில் தோல்வி அடைந்த இந்திய ஆண்கள் அணி நாளை வெண்கல பதக்க போட்டியில் ஆட உள்ளது.
இந்த நிலையில் இன்று இந்திய பெண்கள் அணி அர்ஜென்டினாவிற்கு எதிரான செமி பைனல் போட்டியில் ஆடியது. இந்திய பெண்கள் ஹாக்கி ஆடும் அணியில் இன்று நவ்ஜோத் கார், குர்ஜித் கார், தீப் கிரேஸ் எக்கா, மோனிகா, நிஷா, நேஹா, சவிதா, ராணி ராம்பால் (கேப்டன்), வந்தனா, உதித்தா, நவநீத் ஆகியோர் இன்று ஆடினார்கள்.

எப்படி
இந்த போட்டியில் 2வது நிமிடத்திலேயே இந்தியாவின் குர்ஜித் கார் கோல் அடித்து அசத்தினார். கடந்த காலிறுதி ஆட்டத்தில் ஆஸி.க்கு எதிராக குர்ஜித் கார் மட்டுமே கோல் அடித்து இருந்தார். குர்ஜித் கோல்தான் கடந்த போட்டியில் இந்தியா வெல்ல உதவியாக இருந்தது. இன்றும் ஆட்டத்தின் தொடக்கத்திலேயே குர்ஜித் கோல் அடித்து அசத்தினார்.

பெனால்டி
போட்டியின் எட்டாவது நிமிடத்தில் அர்ஜென்டினாவிற்கு பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தது. பெனால்டி கார்னரில் கோல் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டது அர்ஜென்டினா. இந்தியாவின் கீப்பர் சவிதா சிறப்பாக செயல்பட்டு பெனால்டி கார்னர் ஷாட்டை தடுத்தார். முதல் கால் ஆட்டம் முழுக்க இந்தியா ஆதிக்கம் காட்டியது.

ஆதிக்கம்
முதல் கால் ஆட்டத்தில் அர்ஜென்டினாவை கோல் அடிக்க விடாமல் இந்தியா ஆதிக்கம் செலுத்தியது. போட்டியின் 16வது நிமிடத்தில் அர்ஜென்டினாவிற்கு மீண்டும் பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் பெனால்டி கார்னரில் கோல் அடிக்கும் வாய்ப்பை மீண்டும் தவறவிட்டது அர்ஜென்டினா. மூன்றாவது முறையாக மீண்டும் அர்ஜென்டினாவிற்கு பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தது.

கோல்
இதில் 17வது நிமிடத்தில் அர்ஜென்டினா கேப்டன் மரியா கோல் அடித்து அசத்தினார். 23து நிமிடத்தில் அர்ஜென்டினாவில் கோல் போடும் வாய்ப்பை தடுத்தார் சவிதா. 25வது நிமிடத்தில் இந்தியாவிற்கு பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் இந்தியா கோல் போடும் வாய்ப்பை தவறவிட்டது. அடுத்த நிமிடமே வரிசையாக இந்தியாவிற்கு 2 பெனால்டி கார்னர் வாய்ப்புகள் கிடைத்தது.

வாய்ப்பு கிடைத்தது
27வது நிமிடத்தில் அர்ஜென்டினாவிற்கு பெனால்டி கார்னர் வாய்ப்பு: சவிதா மீண்டும் அபாரமாக தடுத்தார். இதன் பின் முதல் பாதி முழுக்க இரண்டு அணிகளும் சமநிலையில் இருந்தது. இரண்டாவது பாதியில் 36வது நிமிடத்தில் அர்ஜென்டினா மீண்டும் கோல் அடித்து 2:1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. அர்ஜென்டினாவிற்கு வரிசையாக பெனால்டி கார்னர் மூலம் கோல் அடிக்கும் வாய்ப்பு கிடைத்ததே இதற்கு காரணம்.

தோல்வி
அதன்பின் கடைசி 10 நிமிடங்கள் இருக்கும் போது இந்தியாவிற்கு மீண்டும் பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் இதிலும் இந்தியா கோல் அடைக்கும் வாய்ப்பை நழுவவிவிட்டது. கடைசி கட்டத்தில் அர்ஜென்டினா தடுப்பாட்டம் ஆடியதால் இந்தியாவிற்கு கோல் அடிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. கடைசி 5 நிமிடத்தில் தொடர்ந்து அர்ஜென்டினா ஆதிக்கம் செலுத்தியது.

எப்படி தோல்வி
கடைசி வரை இன்னொரு கோல் அடிக்க முடியாத நிலையில் அர்ஜென்டினாவிற்கு எதிராக இந்தியா 2:1 என்ற கோல் கணக்கில் தோல்வி அடைந்தது. அதோடு செமி பைனலில் இருந்தும் இந்தியா வெளியேறியது. இனி இந்திய பெண்கள் ஹாக்கி அணி வெண்கல பதக்கத்திற்கான ஆட்டத்தில் ஆட வேண்டும்.


Click it and Unblock the Notifications