Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஒலிம்பிக் மல்யுத்தம்.. நழுவிய பதக்க வாய்ப்பு.. ரெப்சேஜ் சுற்றிலும் இந்தியாவின் அன்ஷு மாலிக் தோல்வி!

டோக்கியோ: ஒலிம்பிக் 2020 மல்யுத்தத்தின் 57kg பிரிவு- 1/8 ரெப்சேஜ் ஆட்டத்தில் இந்தியாவின் அன்ஷு மாலிக் தோல்வி அடைந்து ஒலிம்பிக்கில் இருந்து வெளியேறி உள்ளார்.

ஒலிம்பிக் மல்யுத்த போட்டிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் இன்று ரெப்சேஜ் பிரிவு ஆட்டங்கள் நடைபெற்றது. இந்தியாவின் அன்ஷு மாலிக் ரெப்சேஜ் முறையில் வெண்கல பதக்கத்திற்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது.

 Olympics 2020: India Anshu Malik loses her repechage round against ROC Valeria Koblova

பைனல் செல்லும் நபரோடு காலிறுதி அல்லது காலிறுதிக்கு முந்தைய சுற்றில் மோதியவருக்கு கொடுக்கப்படும் கூடுதல் வாய்ப்புதான் ரெப்சேஜ். அதாவது காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ஒரு வீராங்கனை இன்னொரு வீராங்கனையிடம் தோல்வி அடைகிறார் என்று வைத்துக் கொள்வோம்.

வெற்றிபெற்ற வீராங்கனை ஒருவேளை பைனல் சென்றால், காலிறுதிக்கு முந்தைய சுற்றில் அவரின் தோல்வி அடைந்த வீராங்கனைக்கு வெண்கல பதக்கத்திற்கான போட்டியில் ஆட வாய்ப்பு வழங்கப்படும். காலிறுதிக்கு முந்தைய சுற்றில் பெலாரசஸ் நாட்டின் ஐரினாவிடம் இந்திய வீராங்கனை அன்ஷு மாலிக் தோல்வி அடைந்தார்.

அதன்பின் செமி பைனலில் வென்ற பெலாரசஸ் நாட்டின் ஐரினா தற்போது பைனல் தேர்வாகி உள்ளார். ஐரினா பைனல் சென்றுவிட்டதால் இந்தியாவின் அன்ஷு மாலிக்கிற்கு வெண்கல பதக்க போட்டிக்கான ரெப்சேஜ் வாய்ப்பு வழங்கப்பட்டது.

ஆனால் இன்று நடந்த மல்யுத்தம் பெண்கள் 57kg பிரிவு- 1/8 ரெப்சேஜ் இந்தியாவின் அன்ஷு மாலிக் தோல்வி அடைந்தார். ரஷ்ய ஒலிம்பிக் கமிட்டியின் வெலேரியாவிடம் 5:1 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தினார்.

இந்த போட்டியில் முதல் சுற்றில் வெலேரியா 1 புள்ளிகளை பெற்று முன்னிலை பெற்றார். இதில் அன்ஷு புள்ளி எதையும் பெறவில்லை. இரண்டாவது சுற்றில் அன்ஷு 1 புள்ளிகளை மட்டும் பெற்றார். ஆனால் வெலேரியா 2 2 புள்ளிகள் பெற்றார்.

இதனால் மொத்தமாக வெலேரியாவிடம் 5:1 என்ற புள்ளி கணக்கில் அன்ஷு தோல்வி அடைந்தார். ஒலிம்பிக் 2020 மல்யுத்தத்தில் இருந்து இதனால் பதக்கம் எதையும் பெறாமல் அன்ஷு வெளியேறினார்.

Story first published: Thursday, August 5, 2021, 18:37 [IST]
Other articles published on Aug 5, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+