For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பிவி சிந்து முதல் பாக்ஸர் சதீஷ் வரை.. ஒரே நாளில் அடுத்தடுத்து 4 வெற்றி.. நம்பிக்கை தரும் இந்திய படை!

டோக்கியோ: டோக்கியோ ஒலிம்பிக் 2020 தொடரில் இன்று இந்திய வீரர், வீராங்கனைகள் அதிரடியாக நான்கு வெற்றிகளை பதிவு செய்துள்ளனர்.

Recommended Video

PV Sindhu storms into quarter-finals | Tokyo 2020 | Olympics

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியா இதுவரை பெரிதாக சாதனைகளை நிகழ்த்தவில்லை. பளு தூக்குதல் பிரிவில் மட்டுமே இந்தியாவின் மீராபாய் சானு வெள்ளிப்பதக்கம் வென்றார். அதன்பின் வேறு எந்த போட்டிகளிலும் இந்தியா பதக்கம் வெல்லவில்லை.

இதனால் இந்திய அணி பதக்க பட்டியலில் 45வது இடத்தில் பின்தங்கி உள்ளது. இந்த நிலையில்தான் இன்று இந்திய வீரர்கள் காலையில் இருந்து வரிசையாக வெற்றிகளை குவித்தனர்.

பேட்மிண்டன்

பேட்மிண்டன்

இன்று காலையில் பிவி சிந்து பேட்மிண்டன் பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதிக்கு முந்தைய சுற்று போட்டியில் ஆடினார். இதில் டென்மார்க்கின் மியாவை வீழ்த்தி பிவி சிந்து வெற்றி பெற்றுள்ளார். 21- 15, 21- 13 என்ற நேர் செட்களில் பிவி சிந்து வெற்றி பெற்றுள்ளார். இதன் மூலம் அவர் காலிறுதிக்கு தகுதி பெற்றார். இது இவரின் ஹாட்ரிக் வெற்றியாகும்.

வில்வித்தை

வில்வித்தை

இதையடுத்து ஒலிம்பிக் வில்வித்தை போட்டியில் இன்று இந்திய வீரர் அட்டானு தாஸ் சிறப்பாக ஆடினார். இதில் 32 ஜோடி சுற்றில் இந்தியாவின் அட்டானு தாஸ் இன்று காலை வெற்றிபெற்றார். 6-4 என்ற புள்ளி கணக்கில் சீன தைபே வீரர் டெங்கை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளார். இதையடுத்து 1/16 சுற்றில் 6-5 என்ற புள்ளி கணக்கில் தென்கொரிய வீரர் ஜென்க் ஓவை வீழ்த்தி வென்று இவரும் காலிறுதிக்கு தகுதி பெற்றார்.

 ஹாக்கி

ஹாக்கி

அதோடு ஒலிம்பிக் 2020 ஹாக்கி போட்டியில் ஆண்கள் பிரிவில் இந்திய அணி இன்று வெற்றி பெற்றுள்ளது. அர்ஜென்டினாவை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. 4 போட்டிகளில் இந்தியா இதுவரை 3 போட்டிகளில் வென்றுள்ளது. இன்றைய வெற்றி மூலம் இந்திய அணி காலிறுதிக்கு தகுதி பெற்றது.

பாக்சிங்

பாக்சிங்

இதெல்லாம் போக இன்னொரு நல்ல செய்தியாக ஆண்கள் பாக்சிங் +91 கிலோவில் இந்தியாவின் சதிஷ் குமார் ஜமைக்காவின் ரிக்கார்டோ பிரவுனை வீழ்த்தி வெற்றிபெற்றுள்ளார். இதன் மூலம் சதீஷ் குமார் காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார். ரிக்கார்டோவை 4-1 என்ற கணக்கில் வீழ்த்தி சதிஷ் குமார் வெற்றி பெற்றார். ஒரே நாளில் 4 இந்திய குழு காலிறுதிக்கு தகுதி பெற்று அசத்தி உள்ளது.

Story first published: Thursday, July 29, 2021, 18:55 [IST]
Other articles published on Jul 29, 2021
English summary
Olympics 2020: India qualifies to the quarter-final in Men Boxing, Men Hockey, Women Badminton and Men archery in single day.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+