ஒலிம்பிக் 25மீ பெண்கள் துப்பாக்கி சூடு.. இந்தியாவின் மனு பாகர், ரகி தோல்வி அடைந்து வெளியேற்றம்!
டோக்கியோ: ஒலிம்பிக் பெண்கள் 25மீ பிஸ்டல் பிரிவு ஆட்டத்தில் இந்தியாவின் மனு பாகர், ரகி சர்னோபாட் தோல்வி அடைந்து வெளியேறி உள்ளனர். 11வது இடம் பிடித்து இந்தியாவின் மனு பாகர் தோல்வி அடைந்தார். 32வது இடம் பிடித்து ரகி சர்னோபாட் தோல்வி அடைந்தார்.
ஒலிம்பிக் 25 மீ பெண்கள் பிஸ்டல் துப்பாக்கி சூடு பிரிவின் தகுதி போட்டிகள் நேற்றும் இன்றும் நடைபெற்றன. இதை மொத்தம் 2 ஸ்டேஜ்களாக பிரித்து உள்ளனர்.இதில் மொத்தம் 60 முறை ஒரு வீராங்கனை சுட வேண்டும்.
துல்லியமான துப்பாக்கி சுடுதலை சோதிக்கும் முதல் ஸ்டேஜ் நேற்று நடைபெற்றது. இந்த முதல் சுற்று முடிவில் இந்தியாவின் மனு பாகர் 5வது இடம் பிடித்துள்ளார்.

ரகி
இன்னொரு பக்கம் இந்தியாவின் ரகி சர்னோபாட் 96, 97, 94 என்று மொத்தம் 287 புள்ளிகள் மட்டுமே பெற்று 25வது இடத்தை பிடித்துள்ளார். முதல் சுற்றில் ஸ்டேஜில் 30 முறையும், இரண்டாவது சுற்றில் 30 முறையும் சுட வேண்டும். நேற்று முதல் சுற்று முடிந்துவிட்டது.

இரண்டாம் சுற்று
இதையடுத்து இன்று வேகமாக துப்பாக்கி சுடுதலை சோதிக்கும் இரண்டாம் சுற்று நடந்தது. இரண்டு சுற்று முடிவில் முதல் எட்டு இடங்களுக்குள் வரும் வீராங்கனைகள் இறுதி சுற்றுக்கு தகுதி பெறுவார்கள். முதல் சுற்றில் மனு பாகர் 5ம் இடம் பிடித்த நிலையில் அவர் மீது அதிக எதிர்பார்ப்பு இருந்தது.

தோல்வி
ஆனால் இன்று மனு பாகர் 96, 97, 97 என்று மொத்தம் 290 புள்ளிகள் பெற்றார். இன்று இவரின் ஆவரேஜ் 9.700 புள்ளிகள் ஆகும். இதனால் இவர் இரண்டு சுற்று முடிவில் 11வது இடம் மட்டுமே பிடிக்க முடிந்தது.

ஆவரேஜ்
அதேபோல் ரகி சர்னோபாட் 96, 94, 96 என்று மொத்தம் 286 புள்ளிகள் பெற்றார். இன்று இவரின் ஆவரேஜ் 9.550 புள்ளிகள் ஆகும். இதனால் இவர் இரண்டு சுற்று முடிவில் 32 வது இடம் மட்டுமே பிடிக்க முடிந்தது. இதனால் இரண்டு பேருமே ஒலிம்பிக் பெண்கள் 25மீ பிஸ்டல் பிரிவு ஆட்டத்தில் இறுதி போட்டிக்கு தகுதி பெறாமல் வெளியேறினார்கள்.


Click it and Unblock the Notifications