ஒலிம்பிக் 2020 வில்வித்தை ரேங்கிங் சுற்று.. மோசமாக சொதப்பிய இந்திய வீரர்கள்.. 3 வீரர்களும் சறுக்கல்!
டோக்கியோ: ஆண்கள் வில்வித்தை ரேங்கிங் சுற்றில் இந்திய வீரர்கள் இன்று மோசமாக சொதப்பினார்கள். 12 சுற்று முடிவில் பிரவீன் ஜாதவ் 31வது இடம், அடானு தாஸ் 35வது இடம், தருண்தீப் ராய் 37வது இடத்தை பிடித்தனர்.
ஒலிம்பிக் 2020 தொடரின் முதல் நாளான இன்று இரண்டு முக்கியமான ரேங்கிங் சுற்று போட்டிகள் நடைபெற்றன. காலையில் இந்திய பெண்கள் வில்வித்தை குழுவின் ரேங்கிங் சுற்று போட்டிகள் நடந்தது. வில்வித்தை போட்டியின் ரேங்கிங் சுற்றுகளில் இந்தியாவின் தீபிகா குமாரி 9வது இடம் பிடித்தார்.
மொத்தமாக 12 சுற்று முடிவில் 663 புள்ளிகளை பெற்று 9வது இடத்தை பிடித்தார்.இந்த ரேங்கிங் சுற்றில் 616 புள்ளிகள் பெற்ற பூட்டானின் கர்மா என்ற வீராங்கனையுடன் குழு சுற்றில் தீபிகா குமாரி மோதுவார். இதையடுத்து ஆண்கள் ரேங்கிங் சுற்று நடந்தது.

இந்தியா
ஒலிம்பிக் 2020 தொடரின் வில்வித்தை ஆண்கள் ரேங்கிங் சுற்று பிரிவு போட்டிகளில் இந்தியா சார்பாக அடானு தாஸ், தருண்தீப் ராய், பிரவீன் ஜாதவ் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் தொடக்கத்தில் தருண்தீப் ராய், பிரவீன் ஜாதவ் கொஞ்சம் சொதப்பலான ஆட்டத்தை ஆடினார்கள். தொடக்கத்தில் நன்றாக ஆடிய அடானு தாஸ் 3வது சுற்றுக்கு பின் சொதப்ப தொடங்கினார்.

முதல் 6 சுற்றுகள்
முதல் மூன்று 3 சுற்றுகளில் 10 இடங்களுக்குள் இருந்த அடானு தாஸ் போக போக பின் தாங்கினார். முதல் 6 சுற்றுகளில் மொத்தமாக தலா 36 முறை இவர்கள் மூவரும் அம்பு எய்தார்கள். இதில் அடானு தாஸ் 329 புள்ளிகளுடன் 31வது இடத்திலும், அதே புள்ளிகளோடு பிரவீன் ஜாதவ் 30வது இடத்திலும், 323 புள்ளிகளோடு தருண்தீப் ராய் 45வது இடத்திலும் இருந்தார்.

மோசம்
முதல் 6 சுற்றுகளில் ஆடவர் பிரிவு மிக மோசமாக சொதப்பி இருந்தது. ஆனால் அதன்பின் 6வது சுற்றில் இருந்து மூன்று பேருமே கொஞ்சம் சிறப்பாக ஆடினார்கள். ஒவ்வொரு சுற்றிலும் 55க்குகுறையாமல் புள்ளிகளை பெற்றனர். தருண்தீப் ராய் மட்டும் தொடர்ந்து 55க்கு குறைவான புள்ளிகளை பெற்று சொதப்பி வந்தார். இதன்பின் வந்த சுற்றுகளிலும் மூன்று பெறும் 55, 54 என்ற அளவிலேயே புள்ளிகளை பெற்றனர்.

எத்தனை
ஆண்கள் வில்வித்தை ரேங்கிங் சுற்று: 12 சுற்றுகளின் முடிவில் இந்திய வீரர்கள் எடுத்த புள்ளிகள்.
- 656 புள்ளிகளோடு பிரவீன் ஜாதவ் 31வது இடத்தில் ஆட்டத்தை முடித்தார்
- அடானு தாஸ் 633 புள்ளிகளுடன் 35வது இடத்தை பிடித்தார்
- 652 புள்ளிகளோடு தருண்தீப் ராய் 37வது இடத்திலும் உள்ளார்

கொரியா
கொரியாவின் கிம் ஜெ டியோக் 688 புள்ளிகளோடு முதலிடம் பிடித்தார். பெண்கள் குழுவிலும் முதல் இடத்தை கொரியாதான் வென்றது. முதல் இடத்தை பெண்கள் குழுவில் கொரியாவின் ஆன் சான் பிடித்தார். இவர் 12 சுற்றுகள் முடிவில் 680 புள்ளிகள் பெற்றார்.


Click it and Unblock the Notifications