டை பிரேக்கர் வரை சென்ற ஆட்டம்.. 1/32 சுற்றில் வென்ற தருண்தீப் ராய்.. 1/16 சுற்றில் போராடி தோல்வி!
டோக்கியோ: ஆண்கள் வில்வித்தை 1/16 பிரிவு ஆட்டத்தில் இந்திய வீரர் தருண்தீப் ராய் தோல்வி அடைந்து அதிர்ச்சி அளித்துள்ளார்.
ஒலிம்பிக் 2020 தொடரில் ஆண்கள் வில்வித்தை பிரிவின் தனி நபர் ஆட்டங்கள் தற்போது நடைபெற்று வருகின்றன. இதில் ரேங்கிங் சுற்று போட்டிகளில் 37வது இடம் பிடித்த இந்தியாவின் தருண்தீப் ராய் இன்று காலை உக்ரைன் வீரர் ஹன்பினை எதிர்கொண்டார்.
இந்த போட்டியில் மிகவும் சிறப்பாக ஆடிய தருண்தீப் ராய் உக்ரைன் வீரர் ஹன்பினை 6-4 என்ற கணக்கில் வீழ்த்தி இந்தியாவின் தருண்தீப் வெற்றி பெற்றார். அடுத்த 1/16 சுற்றுக்கு தருண்தீப் தகுதி பெற்றார்.

அடுத்த சுற்று
1/32 சுற்று முடிந்து சில நிமிடங்களில் 1/16 தொடங்கியது. இதில் இஸ்ரேலின் ஷன்னி இட்டாயிடம் தருண்தீப் ராய் மோதினார். இந்த ஆட்டம் தொடக்கத்தில் இருந்தே பரபரப்பாக சென்றது. 5 சுற்றுகள் கொண்ட இந்த ஆட்டத்தில் முதல் சுற்றில் ஷன்னி 2 புள்ளிகள் பெற்றார்.

இரண்டாவது சுற்று
இரண்டாவது சுற்றில் தருண்தீப் ராய் 2 புள்ளிகள் பெற்றார். மூன்றாவது சுற்றில் இரண்டு பேருமே தலா ஒரு புள்ளிகள் பெற்றனர். நான்காவது சுற்றில் தருண்தீப் ராய் 2 புள்ளிகள் பெற ஐந்தாவது சுற்றில் ஷன்னி 2 புள்ளிகள் பெற்றார்.

டிரா
இதனால் 5-5 என்ற புள்ளி கணக்கில் ஆட்டம் டிரா ஆனது. இதுபோல டிரா ஆகும் போது ஒரு சூட் அவுட் சுற்று நடத்தப்படும். ஆட்டத்தில் முடிவு தெரியும் வரை அம்புகளை எய்ய வாய்ப்பு கொடுக்கப்படும். இதனால் இன்றைய போட்டியிலும் கடைசியாக ஒரு சூட் அவுட் நடத்தப்பட்டது.

தோழி
இதில் துல்லியமாக அம்பை எய்தி ஷன்னி 10 புள்ளிகள் பெற்றார். தருண்தீப் ராய் 9 புள்ளிகள் மட்டுமே பெற்றார். இஸ்ரேலின் ஷன்னி இட்டாயிடம் தருண்தீப் ராய் 6-5 என்ற புள்ளி கணக்கில் தோல்வி அடைந்து வெளியேறி உள்ளார். வில்வித்தையில் நம்பிக்கை அளித்த தருண்தீப் திடீரென தோல்வி அடைந்தது பலரும் அதிர்ச்சியை அளித்துள்ளது.


Click it and Unblock the Notifications