Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

குட்நியூஸ்.. வில்வித்தையில் இந்திய வீரர் தருண்தீப் வெற்றி.. அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்று அசத்தல்

டோக்கியோ: ஆண்கள் வில்வித்தை 1/32 பிரிவு ஆட்டத்தில் இந்திய வீர்ர் தருண்தீப் ராய் வெற்றி பெற்று அசத்தி உள்ளார்.

வில்வித்தை பிரிவின் குழு ஆட்டங்களில் இந்திய அணி மோசமாக சொதப்பிய நிலையில் இன்று தனிப்பட்ட ஆட்டங்கள் நடைபெற்றன. ஆண்கள் வில்வித்தை பிரிவில் 64 வீரர்களுக்கு இடையிலான நேருக்கு நேர் ஆட்டம் இன்று நடைபெற்றது.

இதில் முதலில் நடந்த ரேங்கிங் சுற்று போட்டியில் 652 புள்ளிகளோடு தருண்தீப் ராய் 37வது இடம் பிடித்தார்.

கேம்

கேம்

இதனால் விதிப்படி இவர் ரேங்கிங் போட்டியில் 27வது இடம் பிடித்த உக்ரைன் வீரர் ஹன்பினை எதிர்கொள்ள வேண்டும். இது நேருக்கு நேர் ஆட்டம் ஆகும். இதில் மொத்தம் 5 சுற்றுகள் நடக்கும். ஒரு சுற்றில் 3 முறை அம்புகளை ஏவ வேண்டும்.

புள்ளி

புள்ளி

ஒவ்வொரு சுற்றிலும் அதிக புள்ளிகள் எடுக்கும் வீரருக்கு 2 புள்ளிகள் இறுதியாக வழங்கப்படும். 5 சுற்றுகள் முடிவில் அதிக புள்ளிகள் இருக்கும் நபர் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்படுவார். டிரா ஆகும் பட்சத்தில் ஷூட் அவுட் ஒன்று நடத்தப்பட்டு வெற்றியாளர் தேர்வு செய்யப்படுவார்.

முதல் ரவுண்ட்

முதல் ரவுண்ட்

இந்த போட்டியில் இன்று உக்ரைன் வீரர் ஹன்பினை இந்திய வீரர் தருண்தீப் ராய் எதிர்கொண்டார். இதில் முதல் ரவுண்டில் இரண்டு பேருமே சம புள்ளிகளை பெற்றால் இரண்டு பேருக்கும் ஒரு புள்ளி வழங்கப்பட்டது. இரண்டாவது சுற்றில் உக்ரைன் வீரர் ஹன்பின் 2 புள்ளிகளை பெற்றார்.

மூன்றாவது ரவுண்டு

மூன்றாவது ரவுண்டு

பின்னர் மூன்றாவது சுற்றில் மீண்டும் இரண்டு வீரர்களும் சமமாக ஒரு புள்ளிகளை பெற்றனர். ஆனால் அதன்பின் நான்கு மற்றும் ஐந்தாவது சுற்றில் வரிசையாக 2 புள்ளிகள் என்று மொத்தமாக 4 புள்ளிகளை தருண்தீப் பெற்றார். இதனால் உக்ரைன் வீரர் ஹன்பினை 6-4 என்ற கணக்கில் வீழ்த்தி இந்தியாவின் தருண்தீப் வெற்றி பெற்றார். அடுத்த 1/16 சுற்றுக்கு தருண்தீப் தற்போது தகுதி பெற்றுள்ளார்.

Story first published: Wednesday, July 28, 2021, 12:41 [IST]
Other articles published on Jul 28, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+