Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

5 நொடியால் மாறிய ஆட்டம்.. ஒலிம்பிக் மல்யுத்தத்தில் இந்தியாவின் சோனம் மாலிக் தோல்வி.. என்ன நடந்தது?

டோக்கியோ: ஒலிம்பிக் மல்யுத்தத்தில் இந்தியாவின் சோனம் மாலிக் 62 கிலோ எடை பிரிவு ஆட்டத்தில் தோல்வி அடைந்து வெளியேறினார்.

மங்கோலியாவின் போலார்டுயா குரல்கேவிடம் சோனம் மாலிக் தோல்வி அடைந்து வெளியேற்றினார். ஒலிம்பிக் 2020 போட்டிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் இன்று மல்யுத்த பெண்கள் பிரிவு காலிறுதி ஆட்டம் நடைபெற்றது.

இதில் மங்கோலியாவின் போலார்டுயா குரல்கேவை இந்தியாவின் சோனம் மாலிக் எதிர்கொண்டார்.

முன்னிலை

முன்னிலை

இந்த போட்டியில் தொடக்கத்தில் சோனம் மாலிக்தான் முன்னிலை வகித்தார். ஆரம்பத்திலேயே 2 புள்ளிகள் பெற்று சோனம் மாலிக் முன்னிலை வகித்தார். ஆனால் மங்கோலியாவின் போலார்டுயா குரல்கே கடைசி கட்டத்தில் வேகம் எடுத்து வரிசையாக அடுத்தடுத்து இரண்டு புள்ளிகளை பெற்றார்.

வீழ்த்தினார்

வீழ்த்தினார்

முக்கியமாக கடைசி 2 நிமிடம் இருக்கும்போது மங்கோலியாவின் போலார்டுயா சோனம் மாலிக்கை வீழ்த்தி 5 நொடிகள் தரையில் படுக்க வைத்தார். இதன் மூலம் போலார்டுயா டேக் டவுன் புள்ளிகளை பெற்றார். ஒரு வீரர் அல்லது வீராங்கனையை தரையில் வீழ்த்தி சில நொடிகள் படுக்க வைப்பதை டேக் டவுன் புள்ளிகள் என்று கூறுவார்கள்.

டிரா

டிரா

இந்த டேக் டவுன் புள்ளிகள் பொதுவாக ஆட்டம் டிரா ஆகும் பட்சத்தில் வெற்றியாளரை தீர்மானிக்க உதவும். அதன்படி இன்று கடைசி நொடி வரை இரண்டு பேருமே தலா 2 புள்ளிகளுடன் இருந்தனர். இதனால் ஆட்டம் டிரா ஆனது. ஆனால் போலார்டுயா டேக் டவுன் புள்ளிகளை வைத்து இருந்தார். இதனால் அவர் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார்

வெற்றியாளர்

வெற்றியாளர்

5 நொடிகள் சோனம் மாலிக் கீழே கிடந்ததுதான் ஆட்டத்தை மாற்றியது. இதனால் செமி பைனலுக்கு செல்லும் வாய்ப்பை சோனம் மாலிக் இழந்தார். ஆனால் ஒருவேளை போலார்டுயா பைனலுக்கு சென்றால் ரெப்சேஞ்ச் முறையில் சோனம் மாலிக்கிற்கு வெண்கல பதக்கத்திற்கான ஆட்டம் ஆடும் வாய்ப்பு கிடைக்கும்.

ரெப்சேஞ்ச்

ரெப்சேஞ்ச்

சோனம் மாலிக்கை எதிர்கொண்ட போலார்டுயா பைனல் செல்லும் பட்சத்தில் மட்டுமே சோனம் மாலிக்கிற்கு இங்கே வெண்கல பதக்க போட்டி ஆடுவதற்கான வாய்ப்பு கிடைக்கும். பைனல் செல்லும் நபரோடு காலிறுதியில் மோதியவருக்கு கொடுக்கப்படும் கூடுதல் வாய்ப்பாகும் இது. இதை ஒலிம்பிக்கில் ரெப்சேஞ்ச் முறை என்று அழைப்பார்கள்.

Story first published: Tuesday, August 3, 2021, 11:14 [IST]
Other articles published on Aug 3, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+