For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பாக்சிங்கில் பைனல்ஸ் வாய்ப்பை இழந்த இந்தியாவின் லோவ்லினா.. செமியில் தோல்வி.. வெண்கலம் வென்று சாதனை

டோக்கியோ: ஒலிம்பிக் பெண்கள் பாக்சிங் 69 கிலோ பிரிவு போட்டியில் இந்தியாவின் லோவ்லினா தோல்வி அடைந்து அதிர்ச்சியில் உள்ளார். செமி பைனலில் துருக்கி வீராங்கனை புஸேனஸ் சுர்மனேலியிடம் 5:0 என்ற புள்ளி கணக்கில் லோவ்லினா வீழ்ந்தார். செமி பைனலில் தோல்வி அடைந்த நிலையில் இவர் வெண்கலம் வென்றார்.

லோவ்லினா வெண்கலம் வென்ற நிலையில் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை மூன்றாக உயர்ந்துள்ளது. இரண்டு வெண்கலம், ஒரு வெள்ளி பதக்கங்களை இந்தியா வாங்கி உள்ளது. ஒலிம்பிக் பெண்கள் பாக்சிங் 69 கிலோ பிரிவு போட்டியில் இந்தியாவின் லோவ்லினா தொடக்கத்தில் இருந்தே சிறப்பாக ஆடி வந்தார். இதுதான் அவரின் முதல் ஒலிம்பிக் போட்டியாகும். ஆனாலும் அதற்கான சுவடே இன்றி மிகவும் சிறப்பாக ஆடி வந்தார்.

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் சிம்ரன்ஜித், மேரி கோம் ஆகிய இரண்டு பேரும் தோல்வியை சந்தித்த நிலையில் லோவ்லினா போர்கோஹைன் மட்டும் ஒரு பக்கம் அதிரடியாக ஆடி நம்பிக்கை அளித்தார். ஆனால் இன்று அவரும் தோல்வியை தழுவி உள்ளார்.

அசாம்

அசாம்

லோவ்லினா போர்கோஹைன் அசாம் மாநிலத்தை சேர்ந்தவர். இவர் 2018, 2019 உலக பெண்கள் பாக்சிங்கில் வெண்கல பதக்கம் வென்றார். இதன் மூலம் முதல்முறையாக ஒலிம்பிக்கிற்கும் தகுதி பெற்றது குறிப்பிடத்தக்கது.லோவ்லினா போர்கோஹைன் தனது முதல் போட்டியையே ஒலிம்பிக்கில் வெற்றியோடுதான் தொடங்கினார். முதல் போட்டியில் ஜெர்மனி வீராங்கனை நதின் அபேட்ஸை எதிர்கொண்டார்.

லோவ்லினா

லோவ்லினா

இதில் நதின் அபேட்ஸை எளிதாக வீழ்த்தி 3-2 என்ற புள்ளி கணக்கில் லோவ்லினா வெற்றிபெற்றார். இந்த போட்டியிலேயே லோவ்லினா ஆட்டம் பெரிய அளவில் கவனம் பெற்றது. அட்டாக்கிங் ஸ்டைல், ஆரம்பத்திலேயே ஆதிக்கம் செலுத்துவது, வேகமாக மூவ்மெண்ட் என்று லோவ்லினா ஆட்டம் கவனத்தை ஈர்த்ததோடு, இந்தியாவிற்கும் பெரிய அளவில் நம்பிக்கை அளித்தது.

காலிறுதி

காலிறுதி

இதையடுத்து காலிறுதிக்கு தகுதி பெற்றவர் சீன தைபே வீராங்கனை சின் தைனை இன்று எதிர்கொண்டார். இந்த காலிறுதி ஆட்டத்திலும் இவரின் பாக்சிங் முழுக்க அதகளமாக இருந்தது. போட்டி முழுக்க ஆதிக்கம் செலுத்திய லோவ்லிநா சீன தைபே வீராங்கனை சின் தைனை 4:1 என்ற கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றார்.

ஆதிக்கம்

ஆதிக்கம்

இந்த வெற்றி மூலம் அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்ற லோவ்லினா இன்று அரையிறுதியில் துருக்கி வீராங்கனை புஸேனஸ் சுர்மனேலியை எதிர்கொண்டார். இந்த போட்டியிலும் லோவ்லினாதான் ஆதிக்கம் செலுத்த முயன்றார். ஆனால் துருக்கி வீராங்கனை புஸேனஸ் சுர்மனேலி தொடக்கத்திலேயே ஆட்டத்தை கட்டுக்குள் கொண்டு வந்தார். முதல் சுற்றை மிக எளிதாக சுர்மனேலி கைப்பற்றினார்.

 கைப்பற்றினார்

கைப்பற்றினார்

லோவ்லினாவிற்கு எதிரான முதல் சுற்றை 50:45 புள்ளி கணக்கில் சுர்மனேலி கைப்பற்றினார். இதில் அனைத்து ஜட்ஜ்களிடம் இருந்தும் சுர்மனேலி தலா 10 புள்ளிகளை பெற்றார். இதையடுத்து 2வது சுற்றையும் மிக எளிதாக சுர்மனேலி கைப்பற்றினார். லோவ்லினாவிற்கு எதிரான இந்த சுற்றை 50:45 புள்ளி கணக்கில் சுர்மனேலி வென்றார். இதிலும் அனைத்து ஜட்ஜ்களிடம் இருந்தும் சுர்மனேலி தலா 10 புள்ளிகளை பெற்றார்.

 புள்ளி வெற்றி

புள்ளி வெற்றி

லோவ்லினா அனைத்து ஜட்ஜ்களிடம் இருந்தும் தலா 9 புள்ளிகளை மட்டுமே பெற்றார். இந்த 2வது சுற்றிலேயே சுர்மனேலி வெற்றி உறுதியாகிவிட்டது. பின்னர் மூன்றாவது சுற்றிலும் லோவ்லினாவிற்கு எதிரான முதல் சுற்றை 50:45 புள்ளி கணக்கில் சுர்மனேலி கைப்பற்றினார். இதிலும் அனைத்து ஜட்ஜ்களிடம் இருந்தும் சுர்மனேலி தலா 10 புள்ளிகளை பெற்றார்.

துருக்கி

துருக்கி

இதனால் மொத்தமாக துருக்கி வீராங்கனை புஸேனஸ் சுர்மனேலியை 5:0 என்ற புள்ளி கணக்கில் லோவ்லினாவை வீழ்த்தி வெற்றி பெற்றார். இதன் மூலம் ஒலிம்பிக் பெண்கள் பாக்சிங் 69 கிலோ பிரிவு போட்டியில் இந்தியாவின் லோவ்லினா செமி பைனல் போட்டியில் வென்று இறுதி போட்டிக்கு செல்லும் வாய்ப்பை இழந்தார். செமியில் தோல்வி அடைந்த நிலையில் லோவ்லினா வெண்கலம் வென்றார்.

Story first published: Wednesday, August 4, 2021, 17:18 [IST]
Other articles published on Aug 4, 2021
English summary
Olympics 2020: Indian boxer Lovlina Borgohain loses semi-finals and fails to enters finals .
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+