Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

முதல் ஒலிம்பிக்கிலேயே அதகளம்.. பாக்சிங்கில் காலிறுதிக்கு தகுதி பெற்ற இந்தியாவின் லோவ்லினா.. சூப்பர்!

டோக்கியோ: ஒலிம்பிக் பாக்சிங் போட்டியில் இன்று இந்திய வீராங்கனை லோவ்லினா போர்கோஹைன் காலிறுதிக்கு தகுதி பெற்றார்

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்திய வீராங்கனை லோவ்லினா போர்கோஹைன் ஜெர்மனி வீராங்கனை நதின் அபேட்ஸை எதிர்கொண்டார். இதுதான் லோவ்லினா போர்கோஹைனுக்கு முதல் தொடர் ஆகும்.

இதில் போட்டியின் தொடக்கத்தில் இருந்தே லோவ்லினா போர்கோஹைன் ஆதிக்கம் செலுத்தினார்.

 முதல் சுற்று

முதல் சுற்று

முதல் சுற்று முடிவில் 48-47 என்று லோவ்லினா முன்னிலை வகித்தார். இதில் மொத்தம் மூன்று 10 புள்ளிகளை அவர் பெற்றார். அதன்பின் இரண்டாவது சுற்றில் மீண்டும் 48-47 என்று லோவ்லினா முன்னிலை வகித்தார். இதில் மொத்தம் மூன்று 10 புள்ளிகளை அவர் பெற்றார்.

கடைசி சுற்று

கடைசி சுற்று

பின் கடைசி சுற்றிலும் 48-47 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் லோவ்லினா முன்னிலை வகித்தார். இதில் லோவ்லினா மொத்தமாக மூன்று 10 புள்ளிகளை அவர் பெற்றார். இதையடுத்து மொத்தமாக ஜெர்மனி வீராங்கனை நதின் அபேட்ஸை வீழ்த்தி 3-2 என்ற புள்ளி கணக்கில் லோவ்லினா வெற்றிபெற்றார்.

ஒலிம்பிக்

ஒலிம்பிக்

ஒலிம்பிக் பாக்சிங் தொடரின் 69 கிலோ பிரிவில் இதன் மூலம் லோவ்லினா போர்கோஹைன் காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார். லோவ்லினா போர்கோஹைன் அசாம் மாநிலத்தை சேர்ந்தவர். இவர் 2018, 2019 உலக பெண்கள் பாக்சிங்கில் வெண்கல பதக்கம் வென்றார். இதன் மூலம் முதல்முறையாக ஒலிம்பிக்கிற்கும் தகுதி பெற்றது குறிப்பிடத்தக்கது.

 மேரி கோம்

மேரி கோம்

ஒரு பக்கம் லோவ்லினா போர்கோஹைன் வென்ற நிலையில் இன்னொரு பக்கம் ஒலிம்பிக் 2020 குத்து சண்டையில் இந்தியாவின் மேரி கோம் டொமினிகாவின் மிக்கேலினாவை கடந்த ஞாயிற்றுக்கிழமை வீழ்த்தி வெற்றிபெற்றார். மூன்று சுற்றுகள் முடிவில் மேரி கோம் 4-1 என்ற கணக்கில் வெற்றிபெற்றார். இதனால் 16 பேர் கொண்ட அடுத்த சுற்றுக்கு மேரி கோம் தகுதி பெற்றுள்ளார்.

Story first published: Tuesday, July 27, 2021, 12:53 [IST]
Other articles published on Jul 27, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+