For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

"கொரோனா முன்கள பணியாளர்களுக்கு சமர்ப்பணம்".. ஹாக்கியில் வெண்கலம்.. கேப்டன் மன்பிரீத் உருக்கம்

டோக்கியோ: ஒலிம்பிக் 2020 ஹாக்கியில் வாங்கிய வெண்கல பதக்கத்தை இந்தியாவின் கொரோனா கட்டுப்பாட்டு முன்கள பணியாளர்களுக்கு சமர்ப்பணம் செய்வதாக இந்திய அணியின் கேப்டன் மன்பிரீத் சிங் தெரிவித்துள்ளார்.

இந்திய ஹாக்கி வரலாற்றில் இன்று மிக முக்கியமான நாள். 41 ஆண்டுகளுக்கு பின் இந்தியா ஒலிம்பிக்கில் இன்று பதக்கம் வாங்கி உள்ளது. இன்று ஜெர்மனிக்கு எதிராக கடைசி நொடி வரை திரில்லாக சென்ற ஆட்டத்தில் இந்தியா வென்றது.

ஜெர்மனியிடம் 5:4 என்ற கோல் கணக்கில் வென்று இந்தியா வெண்கலம் வென்றுள்ளது. கடைசியாக 1980 மாஸ்கோ ஒலிம்பிக்கில் இந்தியா ஆண்கள் ஹாக்கியில் தங்கம் வென்றது. அதன்பின் இப்போதுதான் மீண்டும் பதக்கம் வெல்கிறது.

சிம்ரான்ஜீத்

சிம்ரான்ஜீத்

இந்த போட்டியில் இந்தியாவிற்காக சிம்ரான்ஜீத் சிங் 17 மற்றும் 34வது நிமிடத்தில் கோல் அடித்தார். ஹர்திக் சிங் 27வது நிமிடத்தில் கோல் அடித்தார். ஹர்மன்பிரீத் சிங் 29வது நிமிடத்தில் கோல் அடித்தார். ருபிண்டர் பால் சிங் 31வது நிமிடத்தில் கோல் அடித்தார். இதில் இந்தியாவின் வெற்றிக்கு சிம்ரான்ஜீத் சிங் மற்றும் கீப்பர் ஸ்ரீஜேஷ் முக்கியமான காரணமாக இருந்தனர்.

சிம்ரான்ஜீத்

சிம்ரான்ஜீத்

இன்னொரு பக்கம் சிம்ரான்ஜீத் சிம்ரான்ஜீத் அணியில் திமோர் ஓர்ஸ் 2வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். நிக்லாஸ் வெல்லன் 24வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். பெனெடிக் 25வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். லூகாஸ் 48 நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். இந்த போட்டியில் வெற்றிக்கு பின் இந்திய வீரர்கள் மைதானத்திலேயே கண்ணீர்விட்டு அழுதனர்.

கண்ணீர் விட்டனர்

கண்ணீர் விட்டனர்

41 வருடங்களுக்கு பின் மெடல் வாங்கிய உற்சாகத்தில் ஒருவரை ஒருவர் ஆரத்தழுவி கண்ணீர்விட்டனர். முக்கியமாக இன்று கிட்டத்தட்ட 10 பெனால்டி கார்னர் மற்றும் கோல்களை சேவ் செய்த இந்திய அணியின் கீப்பர் ஸ்ரீஜேஷ் போட்டிக்கு பின்பாக கோல் போஸ்ட் மேல் ஏறி நின்று தனது சந்தோசத்தை வெளிப்படுத்தினார். அதன்பின் தரையில் படுத்து நிம்மதியாக சிரித்துக் கொண்டு இருந்தார்.

பேட்டி

பேட்டி

இந்த போட்டி வெற்றிக்கும் பின் பேட்டி அளித்த இந்திய அணியின் கேப்டன் மன்பிரீத் சிங், இந்த வெற்றி எங்களுக்கும் மிகுந்த மகிழ்ச்சியை கொடுக்கிறது. எங்களுடைய வெற்றியை இந்தியாவின் முன்கள பணியாளர்களுக்கு, மருத்துவர்களுக்கு, கொரோனாவை எதிர்த்து போராடும் ஒவ்வொரு நபருக்கும் சமர்ப்பணம் செய்கிறோம்.

 மன்பிரீத் சிங்

மன்பிரீத் சிங்

என்ன சொல்வது என்றே எனக்கு தெரியவில்லை. நான் மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறேன். இது ஒரு சிறந்த அனுபவம். நாங்கள் இந்த மெடலுக்கு தகுதியானவர்கள் என்று நினைக்கிறேன். கடந்த 15 மாதங்கள் நாங்கள் மிக கடுமையாக உழைத்தோம். மிக கடுமையாக பயிற்சி செய்தோம். பெங்களூரில் பயிற்சி மேற்கொண்டோம். பெங்களூர் பயிற்சி எங்களுக்கு புதிய நம்பிக்கையை கொடுத்தது.

வீரர்கள்

வீரர்கள்

அணியில் எல்லா வீரர்களும் கடுமையாக வெற்றிக்காக உழைத்தனர். இந்தியாவில் ஹாக்கியை பலர் மறுத்துவிட்டனர். பலர் எங்களுக்கு ஆதரவு கொடுக்கவில்லை. நாங்கள் வெற்றிபெற மாட்டோம் என்று நினைத்தனர். எங்கள் மீது அவர்களுக்கு நம்பிக்கை இல்லை. இன்று நாங்கள் மெடல் வாங்கிவிட்டோம். இனி அவர்கள் எங்களை நம்பலாம். நாங்கள் அவர்களின் நம்பிக்கையை பூர்த்தி செய்வோம்.

பாதிப்பு

பாதிப்பு

எங்களில் சிலருக்கு கொரோனா பாதிப்பு கூட ஏற்பட்டது. ஆனால் அனைத்திற்கும் இடையில் நாங்கள் பயிற்சி மேற்கொண்டோம். எங்களை எதிர்த்து ஆடிய ஜெர்மனி வீரர்களும் சிறப்பாக ஆடினார்கள். அவர்களுக்கு நிறைய பெனால்டி கார்னர் கிடைத்தது. கடைசி 6 நொடிகள் இருந்த போது கூட இந்த வாய்ப்பு அவர்களுக்கு வந்தது. அதை மிகவும் கஷ்டப்பட்டு போராடி நாங்கள் காப்பாற்றினோம்.

பெண்கள்

பெண்கள்

எங்களுக்கு இந்திய பெண்கள் அணி குறித்து நன்றாக தெரியும். அதில் பல திறமையான வீராங்கனைகள் உள்ளனர். அவர்களால் கண்டிப்பாக இந்தியாவிற்காக பதக்கம் வெல்ல முடியும். அவர்களும் இந்தியாவிற்காக இந்த முறை வெண்கல பதக்கத்தை கண்டிப்பாக வெல்வார்கள். அவர்களுக்கு எங்கள் வாழ்த்துக்கள்.

பதக்கம்

பதக்கம்

இந்த பதக்கம் எங்களுக்கு பெரிய உத்வேகத்தை கொடுக்கும். எங்களுக்கு மேலும் நம்பிக்கை இந்த பதக்கம் கொடுக்கும். பல காலங்களுக்கு பிறகு இந்தியா இப்படி ஒரு பதக்கத்தை வாங்குகிறது. கடைசி வரை நம்பிக்கையை இழக்காமல் நாம் போராடினோம். அதற்கான பலனை அனுபவித்து இருக்கிறோம், என்று அணியின் கேப்டன் மன்பிரீத் சிங் தெரிவித்துள்ளார்.

Story first published: Thursday, August 5, 2021, 18:42 [IST]
Other articles published on Aug 5, 2021
English summary
Olympics 2020: Indian hockey mens team captain dedicates the bronze to Covid 19 warriors, doctors an frontline workers.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+