Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

போட்டி முழுக்க ஆதிக்கம்.. ஸ்பெயினை திணறடித்த இந்திய ஹாக்கி அணி.. 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி

டோக்கியோ: ஸ்பெயினுக்கு எதிரான ஹாக்கி போட்டியில் இன்று இந்தியா 3-0 என்ற கோல் கணக்கில் வென்றது. ருபிண்டர் சிங் இரண்டு கோல் போட்டு அசத்தினார்.

ஒலிம்பிக் ஆண்கள் ஹாக்கி இன்று காலை ஸ்பெயினை இந்தியா எதிர்கொண்டது. இந்த ஒலிம்பிக் தொடரை முதலில் வெற்றியோடுதான் தொடங்கியது. நியூசிலாந்துக்கு எதிராக 3-2 என்ற கோல் கணக்கில் இந்தியா வென்றது.

அதிகம் எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணி ஆஸ்திரேலியாவிற்கு எதிராக மிக மோசமாக ஆடி தோல்வி அடைந்தது.7-1 ஏன்டா கோல் கணக்கில் ஆஸ்திரேலியாவிடம் மிக மோசமான தோல்வியை இந்தியா தழுவியது.

இந்தியா

இந்தியா

இந்த நிலையில்தான் இன்று இந்தியாவிற்கும் ஸ்பெயினுக்கும் இடையிலான ஆட்டம் நடைபெற்றது. தொடக்கத்தில் இருந்தே இந்த ஆட்டம் விறுவிறுப்பாக நடந்தது. முதல் பாதி முழுக்க இந்தியாவே ஆதிக்கம் செலுத்தியது. ஸ்பெயினுக்கு இரண்டு பெனால்டி கார்னர் ஷாட் வாய்ப்பு கிடைத்தும் அந்த அணியால் கோல் அடிக்க முடியவில்லை.

முதல் பாதி

முதல் பாதி

முதல் பாதி ஆட்டத்தில் சிம்ரான்ஜீத் சிங் மற்றும் ருபிண்டர் சிங் ஆகியோர் அடுத்தடுத்து கோல் அடித்தனர். இதனால் முதல் பாதியில் இந்தியா 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. அதன்பின் இரண்டாவது சபாதியிலும் இந்திய அணியே ஆதிக்கம் செலுத்தியது.

வெற்றி

வெற்றி

இரண்டாவது பாதியில் ஸ்பெயின் அணி தொடர்ந்து அடுத்தடுத்து மஞ்சள் கார்ட் வாங்கியதால் ஒரு வீரர் வெளியேறினார். பின் இந்தியாவின் சுமித் சிங் ரெப்ரியுடன் வாக்குவாதம் செய்ததால் இந்திய அணியும் கடைசி 10 நிமிடங்கள் வெறும் 10 வீரர்களுடன் விளையாடும் நிலை ஏற்பட்டது.

தோல்வி

தோல்வி

ஆனால் அதன்பின்பும் இந்திய அணியின் ஆதிக்கம் தொடர்ந்தது. 51வது நிமிடத்தில் இந்தியாவின் ருபிண்டர் மீண்டும் கோல் அடிக்க இந்தியா 3 -0 என்று முன்னிலை பெற்றது. மூன்று முறை பெனால்டி கார்னர் கிடைத்தும் அதை கோலாக மாற்ற முடியாமல் ஸ்பெயின் திணறியது. இதனால் ஆட்ட நேர முடிவில் இந்தியா 3-0 என்ற கோல் கணக்கில் வென்றது. ருபிண்டர் சிங் இரண்டு கோல் போட்டு அசத்தினார்.

Story first published: Tuesday, July 27, 2021, 12:52 [IST]
Other articles published on Jul 27, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+