Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஒலிம்பிக் 2020 வில்வித்தை குழு போட்டி.. காலிறுதியில் தென் கொரியாவிடம் வீழ்ந்தது இந்திய அணி!

டோக்கியோ: ஒலிம்பிக் 2020 தொடரில் வில்வித்தை பிரிவில் இந்திய ஆண்கள் குழு காலிறுதி சுற்றில் தென் கொரியாவிடம் தோல்வி அடைந்து வெளியேறியது.

அட்டானு தாஸ், பிரவின் ஜாதவ், தருண்தீப் ராய் குழு அடுத்த சுற்றுக்கு முன்னேறாமல் தோல்வி அடைந்தனர்..2020 ஒலிம்பிக் தொடரில் இந்திய அணிகள், வீரர்கள் அடுத்தடுத்து சொதப்பி வருகிறார்கள். இன்று ஒரே நாளில் பேட்மிண்டன், வாள்வீச்சு, துப்பாக்கி சூடு, ஸ்கீட் சூடு என்று வரிசையாக ஒவ்வொரு போட்டியிலும் இந்தியா தோல்வி அடைந்து வருகிறது.

நேற்று இந்தியா எந்த பதக்கமும் வாங்காத நிலையில் இன்றும் இதுவரை பதக்கம் எதுவும் வாங்கவில்லை.

வில்வித்தை

வில்வித்தை

இன்று வில்வித்தை பிரிவில் இந்திய ஆண்கள் குழு கலந்து கொண்டது. அட்டானு தாஸ், பிரவின் ஜாதவ், தருண்தீப் ராய் 16 அணிகள் சுற்றில் கலந்து கொண்டு வென்றனர். கஜகஸ்தான் அணியை இந்திய வில்வித்தை ஆண்கள் படை காலையில் நடந்த ஆட்டத்தில் வீழ்த்தியது.

எப்படி

எப்படி

6-2 என்ற புள்ளி கணக்கில் கஜகஸ்தான் அணியை வீழ்த்தி இந்தியா காலிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றது. காலிறுதியில் தென் கொரியா அணியுடன் இந்தியா மோதியது. தென் கொரியா அணி இந்த ஒலிம்பிக்கில் வில்வித்தையில் மிகவும் வலிமையான அணியாக உள்ளது. காலிறுதி ஆட்டம் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் காலிறுதியில் தென் கொரியாவிடம் இந்திய அணி தோல்வி அடைந்தது.

இந்தியா

இந்தியா

இந்த போட்டியில் தென் கொரியாவின் வலுவான கிம் ஜி டியோக், கி வுஜின், ஒ ஜின்ஏக் ஆகியோரை இந்திய அணி எதிர்கொண்டது. 59, 59., 56 மதிப்பெண்களை பெற்று மொத்தமாக மூன்று சுற்று முடிவில் 6 புள்ளிகளை தென் கொரியா அணி பெற்றது. தென் கொரியாவின் மூன்று வீரர்களும் சிறப்பாக இதில் அம்பு எய்தி இருந்தார்கள்.

தோல்வி

தோல்வி

ஆனால் இந்திய வீரர்கள் அட்டானு தாஸ், பிரவின் ஜாதவ், தருண்தீப் ராய் மொத்தமாக 54, 57, 54 மதிப்பெண்களை மட்டும் பெற்றனர். இதனால் இந்திய அணி மொத்தமாக மூன்று சுற்று முடிவில் ஒரு புள்ளி கூட பெறவில்லை. இதன் காரணமாக இந்திய அணி தென் கொரியாவிடம் 6-0 என்ற கணக்கில் தோல்வி அடைந்தது.

Story first published: Monday, July 26, 2021, 16:01 [IST]
Other articles published on Jul 26, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+