For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பைனல் வாய்ப்பை இழந்த இந்தியா.. ஆண்கள் ஹாக்கி செமியில்.. 5:2 கோல் கணக்கில் பெல்ஜியத்திடம் வீழ்ந்தது!

டோக்கியோ: பெல்ஜியம் அணிக்கு எதிரான ஹாக்கி செமி பைனல் ஆண்கள் போட்டியில் இந்தியா தோல்வி அடைந்து அதிர்ச்சி அளித்துள்ளது. 5:2 என்ற கோல் கணக்கில் இந்தியா தோல்வி அடைந்து பைனல் செல்லும் வாய்ப்பை இழந்தது.

Recommended Video

ஒட்டுமொத்த India-வை திரும்பி பார்க்க வைத்த வீரர்கள்.. தோல்வியிலும் ஜெயித்த Indian Hockey

ஒலிம்பிக் 2020 ஹாக்கி ஆண்கள் போட்டியின் செமி பைனல் ஆட்டங்கள் இன்று நடைபெற்றன. இந்த செமி பைனல் போட்டிக்கு இந்திய ஆண்கள் ஹாக்கி அணி 49 ஆண்டுகளுக்கு பின் தேர்வாகி உள்ளது. லீக் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் மட்டுமே இந்தியா தோல்வி அடைந்தது.

நெதர்லாந்து உள்ளிட்ட மற்ற முக்கியமான அணிகள் அனைத்தையும் வீழ்த்தி இந்தியா செமி பைனல் போட்டிக்கு தகுதி பெற்றது. இதனால் இன்று இந்தியா பெல்ஜியம் இடையிலான செமி பைனல் ஆட்டம் மிகவும் விறுவிறுப்பாக சென்றது.

கோல்

கோல்

ஆட்டத்தின் 2வது நிமிடத்திலேயே பெல்ஜியம் அணி ஒரு கோல் அடித்தது. தொடக்கத்திலேயே இதனால் பெல்ஜியம் முன்னிலை பெற்றது. ஆனால் ஆட்டத்தின் 7வது நிமிடத்தில் இந்தியாவின் ஹர்மன்பிரீத் கோல் அடித்தார்.

பின்னர்

பின்னர்

8வது நிமிடத்தில் இந்தியாவின் மன்தீப் சிங் இரண்டாவது கோல் அடித்தார். இதனால் இந்தியா ஆட்டத்தில் ஆதிக்கம் செலுத்தி முன்னிலை பெற்றது. அடுத்த 10 நிமிடங்கள் இந்தியாதான் போட்டியில் ஆதிக்கம் செலுத்தியது. பெல்ஜியம் அணி கோல் அடிக்க மிக தீவிரமாக முயன்றது .

சமன்

சமன்

21வது நிமிடத்தில் பெல்ஜியம் அணி மீண்டும் இன்னொரு கோல் அடிக்க ஆட்டம் 2:2 என்ற கணக்கில் சமன் ஆனது. பின்னர் முதல் பாதி ஆட்டம் முழுக்க இரண்டு அணிகளும் கூடுதலாக கோல் எதுவும் அடிக்கவில்லை. 2வது பாதி கடைசி ஒரு நிமிடத்தில் பெனால்டி கார்னர் முறையில் கோல் அடிக்க வாய்ப்பு கிடைத்தது, ஆனால் இந்திய அணி இதை சரியாக பயன்படுத்திக் கொள்ளாமல் தவற விட்டது.

மூன்றாம் கால்

மூன்றாம் கால்

இதையடுத்து ஆட்டத்தின் 48வது நிமிடத்தில் பெல்ஜியம் பெனால்டி கார்னரில் இன்னொரு கோல் அடித்தது. கடைசி 15 நிமிடங்களே இருந்த நிலையில் பெல்ஜியம் இன்னொரு கோல் அடித்தது பெரிய திருப்பத்தை கொடுத்தது. இன்னொரு பக்கம் 52வது நிமிடத்தில் பெல்ஜியம் அணிக்கும் மேலும் கோல் அடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

பெனால்டி கார்னர்

பெனால்டி கார்னர்

மீண்டும் பெல்ஜியம் அணிக்கு பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தது. இதில் மேலும் ஒரு கோல் போட்ட பெல்ஜியம் அணி 4:2 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது. அதன்பின் மீதம் இருந்த நிமிடங்களில் இந்திய அணியால் கோல் அடிக்க முடியவில்லை. ஆனால் மீண்டும் இன்னொரு பெனால்டி கார்னர் வாய்ப்பை பயன்படுத்திக் கொண்ட பெல்ஜியம் 5வது கோல் அடித்தது.

தோல்வி

தோல்வி

தொடர்ந்து பெல்ஜியம் அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது இந்திய அணிக்கு எதிராக திரும்பியது. பெல்ஜியம் அணிக்கு இது கோல் போடும் வாய்ப்புகளை அதிகம் கொடுத்தது. இதனால் பெல்ஜியம் அணிக்கு எதிரான ஹாக்கி செமி பைனல் ஆண்கள் போட்டியில் இந்தியா தோல்வி அடைந்து வெளியேறியது. 5:2 என்ற கோல் கணக்கில் இந்தியா தோல்வி அடைந்து பைனல் செல்லும் வாய்ப்பை இழந்தது.

49 வருடம்

49 வருடம்

49 வருடங்களுக்கு பின் இந்தியா ஆண்கள் ஒலிம்பிக் ஹாக்கி போட்டியில் செமி பைனலுக்கு சென்றது. இன்று தோல்வி அடைந்து வெளியேறினாலும் இந்திய வீரர்களின் ஆட்டம் குறை சொல்ல முடியாத அளவிற்கு சிறப்பாக இருந்தது. இந்தியா மட்டும் இன்று கூடுதலாக பெனால்டி கார்னர் வாய்ப்புகளை பெல்ஜியத்திற்கு கொடுக்காமல் இருந்திருந்தால் கண்டிப்பாக இந்தியா வென்று இருக்கும்.

பெல்ஜியம்

பெல்ஜியம்

இந்த போட்டியில் தோல்வி அடைந்து இருந்தாலும் இந்திய ஆண்கள் ஹாக்கி அணிக்கு இன்னும் வெண்கலம் வெல்லும் வாய்ப்பு உள்ளது. பெல்ஜியம் அணி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. ஒலிம்பிக் ஹாக்கி தொடரின் செமி பைனலில் தோல்வி அடைந்ததால் வெண்கல பதக்கத்திற்கான போட்டியில் இந்திய ஆண்கள் ஹாக்கி அணி ஆகஸ்ட் 5ம் தேதி ஆட வேண்டும். இதில் ஜெர்மனி அல்லது ஆஸ்திரேலியாவை இந்திய அணி எதிர்கொள்ளும்.

யாரை எதிர்கொள்ளும்

யாரை எதிர்கொள்ளும்

நாளை நடக்கும் இன்னொரு செமி பைனல் போட்டியை வைத்தே இது தீர்மானிக்கப்படும். போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றிபெற அதிக வாய்ப்பு உள்ளது. இதனால் பெரும்பாலும் பெல்ஜியம் vs ஆஸ்திரேலியா அல்லது பெல்ஜியம் vs ஜெர்மனி என்று ஆண்கள் ஹாக்கி இறுதி போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே மீதம் உள்ள ஒரு அணியை இந்தியா எதிர்கொள்ள போகிறது.

பெண்கள்

பெண்கள்

இந்திய ஆண்கள் அணி ஒரு பக்கம் தோல்வி அடைந்தாலும் இன்னொரு பக்கம் பெண்கள் ஹாக்கி அணிக்கான போட்டி உள்ளது. இது செமி பைனல் போட்டியாகும். இதில் வலிமையான அர்ஜென்டினாவை இந்திய பெண்கள் அணி எதிர்கொள்ள உள்ளது. இதில் வெற்றிபெறும் பட்சத்தில் இந்திய பெண்கள் அணி பைனல் செல்லும். இதற்கு முன் இப்படி ஒரு வெற்றியை இந்திய பெண்கள் அணி பெற்றதே இல்லை.

 பெண்கள் அணி

பெண்கள் அணி

மூன்று போட்டிகளில் வரிசையாக தோல்வி அடைந்துவிட்டு, அதன்பின் அயர்லாந்து, தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்திய பெண்கள் அணி காலிறுதி வந்தது. அதன்பின் தற்போது ஆஸ்திரேலியாவை வீழ்த்திவிட்டு அரையிறுதிக்கு இந்திய பெண்கள் அணி தகுதி பெற்றுள்ளது. ஆண்கள் அணி தோல்வி அடைந்த நிலையில் பெண்கள் அணியின் ஆட்டம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

Story first published: Tuesday, August 3, 2021, 12:14 [IST]
Other articles published on Aug 3, 2021
English summary
Olympics 2020: Indian men hockey team loses to Belgium in Semi Final and loses the chance make it into final.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+