Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

செமியில் தோல்வி அடைந்தாலும்.. ஹாக்கி ஆண்கள் அணி வெண்கலம் வெல்லும் வாய்ப்பு.. அடுத்த மேட்ச் யாருடன்?

டோக்கியோ: ஒலிம்பிக் ஹாக்கி தொடரின் செமி பைனலில் தோல்வி அடைந்ததால் வெண்கல பதக்கத்திற்கான போட்டியில் இந்திய ஆண்கள் ஹாக்கி அணி ஆகஸ்ட் 5ம் தேதி ஆட வேண்டும்.

Recommended Video

ஒட்டுமொத்த India-வை திரும்பி பார்க்க வைத்த வீரர்கள்.. தோல்வியிலும் ஜெயித்த Indian Hockey

ஒலிம்பிக் 2020 தொடரின் ஆண்கள் செமி பைனல் ஹாக்கி ஆட்டம் இன்று நடைபெற்றது. இதில் பெல்ஜியம் அணிக்கு எதிரான ஹாக்கி செமி பைனல் ஆண்கள் போட்டியில் இந்தியா தோல்வி அடைந்து வெளியேறி உள்ளது.

5:2 என்ற கோல் கணக்கில் இந்தியா தோல்வி அடைந்து பைனல் செல்லும் வாய்ப்பை இழந்தது. கடைசி வரை இந்திய அணி போராடினாலும் 2 கோல்களுக்கு மேல் அடிக்க முடியாமல் தோல்வி அடைந்து வெளியேறியது.

செமி

செமி

இந்த நிலையில் செமி பைனலில் தோல்வி அடைந்ததால் வெண்கல பதக்கத்திற்கான போட்டியில் இந்திய ஆண்கள் ஹாக்கி அணி ஆட வேண்டும். ஆகஸ்ட் 5ம் தேதி இந்தியா வெண்கல பதக்கத்திற்கான போட்டியில் ஆட உள்ளது. இதில் இந்திய அணி எதிர்கொள்ள போகும் அணி எது என்று இன்னும் உறுதி செய்யப்படவில்லை.

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியா அல்லது ஜெர்மனியை இதில் இந்தியா எதிர்கொள்ளும். ஆஸி vs ஜெர்மனி இடையிலான செமி பைனல் போட்டி நாளை நடக்க உள்ளது. இதில் தோல்வி அடையும் அணி இந்தியாவை எதிர்கொள்ளும்.

தோல்வி

தோல்வி

இந்த போட்டி கண்டிப்பாக விறுவிறுப்பாக இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால் ஜெர்மனி ஆஸ்திரேலியா இரண்டும் மிகவும் வலுவான அணிகள். அதிலும் ஆஸ்திரேலியாவிடம்தான் இந்தியா லீக் ஆட்டத்தில் தோல்வி அடைந்தது. 7:1 என்ற கோல் கணக்கில் இந்தியா தோல்வி அடைந்தது.

கடினம்

கடினம்

இதனால் ஒருவேளை வெண்கல பதக்கத்திற்கான ஆட்டத்தில் இந்தியா ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டால் அது மிகவும் கடினமான ஆட்டமாக இருக்கும். குழு ஆட்டத்தில் இந்தியாவின் குழுவில் ஜெர்மனி இடம்பெறவில்லை. இதனால் செமி பைனல் வரை ஜெர்மனியை இந்தியா எதிர்கொள்ளவே இல்லை.

விறுவிறுப்பு

விறுவிறுப்பு

ஒருவேளை நாளை ஜெர்மனி தோல்வி அடைந்தால் வெண்கல பதக்கத்திற்கான ஆட்டத்தில் ஜெர்மனியை முதல்முறையாக இந்தியா எதிர்கொள்ள வேண்டி இருக்கும். இதனால் இந்தியாவின் வெண்கல பதக்கத்திற்கான ஆட்டம் கண்டிப்பாக மிகவும் சவாலானதாக இருக்கும்.

பெல்ஜியம்

பெல்ஜியம்

தற்போது பெல்ஜியம் அணி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. நாளை நடக்கும் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றிபெற அதிக வாய்ப்பு உள்ளது. இதனால் பெரும்பாலும் பெல்ஜியம் vs ஆஸ்திரேலியா அல்லது பெல்ஜியம் vs ஜெர்மனி என்று ஆண்கள் ஹாக்கி இறுதி போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Tuesday, August 3, 2021, 11:10 [IST]
Other articles published on Aug 3, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+