Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஒலிம்பிக் ஹாக்கி.. வெண்கலம் வென்று சாதித்தது இந்திய ஆண்கள் அணி.. ஜெர்மனிக்கு எதிராக திரில் வெற்றி!

டோக்கியோ: ஒலிம்பிக் ஹாக்கி தொடரில் இன்று ஜெர்மனிக்கு எதிரான போட்டியில் வெற்றிபெற்று இந்திய ஆண்கள் அணி வெண்கலம் வென்றுள்ளது. ஜெர்மனியை இந்திய ஹாக்கி அணி 5:4 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வெற்றிபெற்றுள்ளது.

Recommended Video

India win bronze in men's hockey, beat Germany 5-4 | Tokyo 2020 | Olympics

ஒலிம்பிக் 2020 தொடரின் ஆண்கள் செமி பைனல் ஹாக்கி ஆட்டம் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் நடைபெற்றது. பெல்ஜியம் அணிக்கு எதிரான செமி பைனல் ஆண்கள் போட்டியில் இந்தியா தோல்வி அடைந்து வெளியேறியது.

Olympics 2020: Indian men hockey team wins against Germany and gets the Bronze medal

இந்த ஆட்டம் மிகவும் விறுவிறுப்பாக சென்றது. 5:2 என்ற கோல் கணக்கில் இந்தியா தோல்வி அடைந்து பைனல் செல்லும் வாய்ப்பை இழந்தது. கடைசி வரை இந்திய அணி போராடினாலும் 2 கோல்களுக்கு மேல் அடிக்க முடியாமல் தோல்வி அடைந்து வெளியேறியது.

இந்த நிலையில் செமி பைனலில் தோல்வி அடைந்ததால் வெண்கல பதக்கத்திற்கான போட்டியில் இந்திய ஆண்கள் ஹாக்கி அணி ஆட வேண்டும் என்ற நிலை ஏற்பட்டது. இன்னொரு பக்கம் ஜெர்மனி அணி ஆஸ்திரேலியாவிற்கு எதிராக செமி பைனலில் தோல்வி அடைந்தது. 3: 1 என்ற கோல் கணக்கில் தோல்வி அடைந்தது.

இதனால் செமி பைனலில் வெளியேறிய ஜெர்மனி இன்று இந்தியாவை எதிர்கொள்கிறது. இரண்டு அணிகளுக்கும் இடையிலான ஆட்டம் தற்போது தொடங்கி விறுவிறுப்பாக நடந்துது. இந்த போட்டியில் தொடக்கத்தில் ஜெர்மனி ஆதிக்கம் செலுத்தியது. ஆட்டத்தின் முதல் நிமிடத்திலேயே ஜெர்மனி கோல் போட்டு அதிர்ச்சி கொடுத்தது. அதன்பின் ஜெர்மனிக்கு வரிசையாக முதல் கால் ஆட்டத்தில் நிறைய பெனால்டி கார்னர் வாய்ப்புகளும் கிடைத்தது. முதல் கால் ஆட்டத்தில் ஜெர்மனிதான் முன்னிலை வகித்தது.

இதன்பின் இரண்டாவது கால் ஆட்டத்தில்தான் இந்தியா கொஞ்சம் முன்னிலை பெற தொடங்கியது. இரண்டாவது கால் ஆட்டத்தில் இந்தியா மீண்டு வந்து 16வது நிமிடத்தில் முதல் கோலை போட்டது. இந்தியாவின் சிம்ரான் ஜித் முதல் கோலை இந்தியாவிற்காக போட்டார். அதன்பின் ஆட்டத்தில் விறுவிறுப்பு கூடியது.

ஆட்டத்தின் 22 மற்றும் 24 நிமிடங்களில் ஜெர்மனி 2 கோல் போட்டது. 26வது நிமிடத்தில் இந்தியா மேலும் ஒரு கோல் போட்டது. இதனால் ஆட்டம் இரண்டாம் கால் பாதியில் ஜெர்மனி 3 இந்தியா 2 என்ற நிலையில் இருந்தது. இதன்பின் ஆட்டம் சூடு பிடிக்க இந்தியாவின் ஹர்மன்பிரீத் சிங் மேலும் ஒரு கோல் அடிக்க முதல் பாதியில் ஆட்டம் 3:3 என்று சமன் ஆனது

அதன்பின் வரிசையாக 31 மற்றும் 34வது நிமிடத்தில் இந்தியா இரண்டு கோல்களை போட்டது. இந்தியாவின் சிம்ரான் ஜித், ருபிண்டர் சிங் கோல் போட்டனர். இதனால் ஆட்டத்தில் இந்தியா 5:3 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. ஆனால் கடைசி கால் ஆட்டத்தில் 47வது நிமிடத்தில் பெனால்டி கார்னர் மூலம் ஜெர்மனி 4வது கோல் அடித்தது. அதன்பின் கடைசி 5 நிமிடத்தில் கோல் எதுவும் அடிக்க முடியாமல் ஜெர்மனி அணி திணறியது.

இதனால் மொத்தமாக ஆட்ட நேர முடிவில் ஜெர்மனியை இந்திய ஹாக்கி அணி 5:4 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வெற்றிபெற்றுள்ளது. இதன் மூலம் ஒலிம்பிக் ஹாக்கி தொடரின் செமி பைனலில் வெற்றிபெற்று இந்திய ஆண்கள் அணி வெண்கலம் வென்றுள்ளது

Story first published: Thursday, August 5, 2021, 14:09 [IST]
Other articles published on Aug 5, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+