ஒலிம்பிக் 2020.. ஸ்கீட் ஷூட்டிங்கிலும் பெருத்த ஏமாற்றம்.. இந்திய வீரர்கள் மை ராஜ் & அங்கத் தோல்வி!
டோக்கியோ: ஒலிம்பிக் 2020 தொடரில் இந்தியா சார்பாக ஆடிய மை ராஜ் மற்றும் அங்கத் இருவரும் ஸ்கீட் ஷூட்டிங் போட்டியில் தோல்வி அடைந்து வெளியேறினார்கள்.
இந்திய அணி ஒலிம்பிக் தொடரில் பல்வேறு போட்டிகளில் மோசமாக சொதப்பி வரும் நிலையில் துப்பாக்கி சுடுதலில் ஒரு வகையான ஸ்கீட் துப்பாக்கி சுடுதல் பிரிவில் மட்டும் அதிக நம்பிக்கை அளித்தது. மற்ற துப்பாக்கி சுடுதல் பிரிவுகளில் இந்திய அணி வெற்றிபெறவில்லை.
இதனால் ஸ்கீட் துப்பாக்கி சுடுதல் பிரிவிலாவது இந்தியா வெற்றிபெறுமா என்று எதிர்பார்ப்பு நிலவி வந்தது.

ஸ்கீட் துப்பாக்கி
ஸ்கீட் துப்பாக்கி சுடுதலில் மிக அதிகபட்ச துல்லியம் தேவை. இதில் இந்தியா சார்பாக கலந்து கொள்ள தேர்வான அங்கத் வீர் சிங் பஜ்வா ஏற்கனவே ஆசிய கோப்பை போட்டிகளில் தங்க பதக்கம் வாங்கி இருந்தார். உலகக் கோப்பையிலும் இரண்டு தங்க பதக்கம் வாங்கினார்.

வெற்றி
இதனால் ஒலிம்பிக்கில் ஸ்கீட் துப்பாக்கி சுடுதலில் அங்கத் சிறப்பாக ஆடுவார் என்றே எதிர்பார்க்கப்பட்டது. தொடக்க சுற்றுகளில் நன்றாக ஆடிய அங்கத் அடுத்தடுத்த சுற்றுகளில் லேசாக சொதப்பினார். இன்னொரு இந்திய வீரான் மைராஜ் அஹமது கானும் மோசமாக ஆடி அதிர்ச்சி கொடுத்தார்.

தோல்வி
இன்று நடந்த அரையிறுதி போட்டியில் முதல் 6 இடங்களுக்குள் வருபவர்கள் மட்டுமே இறுதிப்போட்டிக்கு தேர்வாவர்கள் என்ற நிலையில் அங்கத் 18 இடம் மட்டும் பிடித்து வெளியேறினார். 24, 25, 24, 23, 24 என்று மொத்தம் 120 புள்ளிகள் பெற்று தோல்வி அடைந்தார்.

மைராஜ் அஹமது கான்
அதேபோல் மைராஜ் அஹமது கான் 25வது இடம் பிடித்து இறுதிப்போட்டிக்கு தகுதி பெறாமல் வெளியேறினார். இவர் 25, 24, 22, 23, 23 என்று மொத்தம் 117 புள்ளிகள் பெற்று தோல்வி அடைந்தார். முதல் 6 இடங்களுக்குள் வராத காரணத்தால் இரண்டு இந்திய வீரர்களும் ஒலிம்பிக் ஸ்கீட் ஷூட்டிங் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறவில்லை. பிரான்ஸ், இத்தாலி, பின்லாந்து, அமெரிக்கா, குவைத், டென்மார்க் ஆகிய நாடுகள் மட்டுமே இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.


Click it and Unblock the Notifications