Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஒலிம்பிக் மகளிர் ஹாக்கி.. கிரேட் பிரிட்டனிடம் வீழ்ந்தது இந்திய அணி.. தொடர்ந்து 3வது தோல்வி!

டோக்கியோ: ஒலிம்பிக் 2020 தொடரில் இன்று கிரேட் பிரிட்டனுக்கு எதிரான ஹாக்கி போட்டியில் இந்திய மகளிர் அணி தோல்வி அடைந்தது. கிரேட் பிரிட்டன் அணி 4-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

ஒலிம்பிக் 2020 தொடரை இந்திய மகளிர் ஹாக்கி அணி தோல்வியோடுதான் தொடங்கியது. நெதர்லாந்திற்கு எதிரான முதல் லீக் ஆட்டத்தில் இந்திய மகளிர் ஹாக்கி அணி 5-1 என்ற கோல் கணக்கில் படுதோல்வி அடைந்தது.

அதன்பின் ஜெர்மனிக்கு எதிரான போட்டியிலும் இந்திய மகளிர் அணி தோல்வி அடைந்தது. 2-0 என்ற கோல் கணக்கில் தோல்வி அடைந்தது.

ஆதிக்கம்

ஆதிக்கம்

இந்த நிலையில் இன்று கண்டிப்பாக வென்றாக வேண்டிய கட்டாயத்தில் கிரேட் பிரிட்டன் அணியை இந்திய மகளிர் ஹாக்கி அணி எதிர்கொண்டது. இதில் தொடக்கத்தில் இருந்தே பிரிட்டன் அணி ஆதிக்கம் செலுத்தியது. பிரிட்டனின் ஹன்னா மார்ட்டின் முதல் கோல் அடித்து லீட் கொடுத்தார்.

லீட்

லீட்

இதன்பின் மீண்டும் ஹன்னா மார்ட்டின் இரண்டாவது கோல் அடிக்கவே இந்திய அணி பெரும் பின்னடைவை சந்தித்தது. இந்திய அணி இன்று சிறப்பான பாஸ்களை செய்தாலும், அதை கோலாக மாற்றுவதில் சிரமப்பட்டது. இந்திய அணி திணறி வந்த நிலையில் ஷர்மிளா தேவி முதல் கோல் அடித்து இந்தியாவை மீட்டார்.

ஆனால்

ஆனால்

ஆனால் அடுத்த சில நிமிடங்களில் பிரிட்டனின் ஷானோன் மூன்றாவது கோல் அடித்தார். இதன்பின் இந்திய அணி வீராங்கனைகள் பலமுறை கோல் அடிக்க முயன்றும் சரியான வாய்ப்பு கிட்டவில்லை. இரண்டாம் பாதி ஆட்டத்திலும் தொடர்ந்து பிரிட்டன் அணி ஆதிக்கம் செலுத்தியது.

இரண்டாம் பாதி

இரண்டாம் பாதி

இரண்டாம் பாதியின் இறுதியில் பிரிட்டனின் கிரேஸ் மேலும் ஒரு கோல் அடித்தார். இதனால் பிரிட்டன் அணி 4 கோல் அடித்து முன்னிலை பெற்றது. ஆட்ட நேர முடிவில் இந்தியாவை வீழ்த்தி கிரேட் பிரிட்டன் அணி 4-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. தொடர்ந்து மூன்று போட்டிகளில் தோல்வி அடைந்து இந்திய மகளிர் அணி அதிர்ச்சி அளித்துள்ளது.

Story first published: Wednesday, July 28, 2021, 12:41 [IST]
Other articles published on Jul 28, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+