For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஒலிம்பிக் மகளிர் ஹாக்கி.. 3 தோல்விக்கு பின் மீண்டு வந்த இந்திய அணி.. அயர்லாந்துக்கு எதிராக வெற்றி

டோக்கியோ: ஒலிம்பிக் 2020 பெண்கள் ஹாக்கி போட்டியில் அயர்லாந்துக்கு எதிராக இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. 1-0 கோல் கணக்கில் அயர்லாந்தை வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றுள்ளது.

Recommended Video

Indian Team வெற்றி! Cricketல் இல்ல, Hockeyயில் Japanஐ வீழ்த்தியது | OneIndia Tamil

ஒலிம்பிக் 2020 தொடரில் இந்தியா பெண்கள் ஹாக்கி அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளது. நெதர்லாந்திற்கு எதிரான முதல் லீக் ஆட்டத்தில் இந்திய மகளிர் ஹாக்கி அணி 5-1 என்ற கோல் கணக்கில் படுதோல்வி அடைந்தது.

அதன்பின் ஜெர்மனிக்கு எதிரான போட்டியிலும் இந்திய மகளிர் அணி தோல்வி அடைந்தது. 2-0 என்ற கோல் கணக்கில் ஜெர்மனியிடம் வீழ்ந்தது.

தோல்வி

தோல்வி

இரண்டு தோல்வி அடைந்த நிலையில் மூன்றாவது போட்டியில் வெல்ல வேண்டிய கட்டாயத்தில் இருந்தது. ஆனால் கிரேட் பிரிட்டனுக்கு எதிரான மூன்றாவது ஹாக்கி போட்டியிலும் இந்திய மகளிர் அணி தோல்வி அடைந்தது. கிரேட் பிரிட்டன் அணி 4-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

தொடர் சறுக்கல்

தொடர் சறுக்கல்

ஒலிம்பிக் 2020 தொடரில் இந்திய மகளிர் ஹாக்கி அணி இன்னும் இரண்டு போட்டிகளில் ஆட உள்ளது. இன்று அயர்லாந்து, அதன்பின் நாளை தென்னாப்பிரிக்காவுடன் ஆட வேண்டும். இந்த இரண்டும் போட்டியிலும் வென்றால் மட்டுமே அடுத்த சுற்றுக்கு செல்வதை பற்றி யோசிக்க முடியும் என்ற நிலை நிலவியது.

எதிர்கொண்டது

எதிர்கொண்டது

இந்த லீக் போட்டியில் 6 அணிகள் கொண்ட குழுவில் 4 இடங்களுக்குள் வரும் அணிகள் அடுத்த சுற்றுக்கு செல்லும். தற்போது இந்தியா 5வது இடத்தில் உள்ளது. இன்று கண்டிப்பாக வென்றாக வேண்டிய கட்டாயத்தில் அயர்லாந்து அணியை இந்திய மகளிர் ஹாக்கி அணி எதிர்கொண்டது. மழை காரணமாக ஆட்டம் 1 மணி நேரம் தாமதமாக தொடங்கியது.

கோல்

கோல்

முதல் 56 நிமிடங்கள் வரை இந்திய பெண்கள் அணியும், அயர்லாந்து அணியும் ஒரு கோல் கூட அடிக்கவில்லை. கடைசியில் இந்திய வீராங்கனை நவ்நீத் 57வது நிமிடத்தில் கோல் அடித்தார். இதனால் 1-0 கோல் கணக்கில் அயர்லாந்தை வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றுள்ளது. நாளை நடக்க உள்ள தென்னாப்பிரிக்காவுடனான ஆட்டத்தில் வெல்ல வேண்டிய கட்டாயத்தில் தற்போது இந்திய பெண்கள் அணி உள்ளது.

Story first published: Friday, July 30, 2021, 16:09 [IST]
Other articles published on Jul 30, 2021
English summary
Olympics 2020: Indian women hockey team to face Ireland today after three consecutive loses.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+