ஒலிம்பிக் ஹாக்கி.. இந்திய மகளிர் அணி வரலாற்று சாதனை.. ஆஸி.யை வீழ்த்தி செமி பைனலுக்கு தகுதி பெற்றது!
டோக்கியோ: ஒலிம்பிக் ஹாக்கி பெண்கள் காலிறுதி போட்டியில் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக இந்திய அணி சிறப்பாக ஆடி வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் இந்திய பெண்கள் அணி செமி பைனலுக்கு தகுதி பெற்றுள்ளது. 1-0 என்ற கோல் கணக்கில் ஆஸி.யை வீழ்த்தி செமி பைனலுக்கு தகுதி பெற்றது.
Recommended Video
ஒலிம்பிக் 2020 தொடரில் நேற்று இந்திய ஆண்கள் அணி கிரேட் பிரிட்டனை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி செமி பைனலுக்கு தகுதி பெற்றது. 49 வருடங்களுக்கு பின் இந்திய ஆண்கள் அணி ஒலிம்பிக்கில் செமி பைனலுக்கு தகுதி பெற்று சாதனை படைத்துள்ளது.
இந்த நிலையில் இன்று பெண்கள் ஹாக்கி போட்டியின் காலிறுதி ஆட்டம் நடைபெற்றது. இந்த தொடரின் தொடக்கத்தில் இந்தியா பெண்கள் ஹாக்கி அணி மோசமாக ஆடி வந்தது. நெதர்லாந்திற்கு எதிரான முதல் லீக் ஆட்டத்தில் இந்திய மகளிர் ஹாக்கி அணி 5-1 என்ற கோல் கணக்கில் படுதோல்வி அடைந்தது.

தொடர்
அதன்பின் ஜெர்மனிக்கு எதிரான போட்டியிலும் இந்திய மகளிர் அணி தோல்வி அடைந்தது. 2-0 என்ற கோல் கணக்கில் ஜெர்மனியிடம் வீழ்ந்தது. அதன்பின் அதிர்ச்சி அளிக்கும் வகையில் கிரேட் பிரிட்டனுக்கு எதிரான மூன்றாவது ஹாக்கி போட்டியிலும் இந்திய மகளிர் அணி தோல்வி அடைந்தது. கிரேட் பிரிட்டன் அணி 4-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

கட்டாயம்
3 தோல்வி அடைந்த நிலையில் நான்காவது மற்றும் ஐந்தாவது போட்டியில் வெல்ல வேண்டிய கட்டாயத்தில் இருந்தது. அதேபோல் சொல்லிவைத்தபடி அயர்லாந்துக்கு எதிரான நான்காவது போட்டியிலும், தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான ஐந்தாவது போட்டியிலும் இந்தியா வென்றது. இரண்டு கடினமான போட்டிகளிலும் வென்று இந்திய பெண்கள் அணி முதல் முறை காலிறுதிக்கு ஒலிம்பிக் போட்டியில் தகுதி பெற்றது.

முதல் முறை
இந்த நிலையில் வலுவான ஆஸ்திரேலிய அணியை இன்று காலிறுதியில் இந்தியா எதிர்கொண்டது. இதில் தொடக்கத்தில் இருந்தே இந்திய மகளிர் அணி ஆஸ்திரேலியாவிற்கு எதிராக ஆதிக்கம் செலுத்தியது. 22வது நிமிடத்தில் இந்தியாவின் குர்ஜித் முதல் கோல் அடித்து அசத்தினார். ஆஸ்திரேலியாவிற்கு எதிராக இந்திய அணி 1-0 என்ற கோல் கணக்கில் முதல் பாதியில் முன்னிலை வகித்தது.

வெற்றி
அதன்பின் கடைசி வரை ஆஸ்திரேலிய அணி கோல் எதுவும் அடிக்கவில்லை. ஆஸி.யை வீழ்த்தி இந்திய மகளிர் அணி முதல்முறையாக செமி பைனலுக்கு தகுதி பெற்றது. 1-0 என்ற கோல் கணக்கில் ஆஸி.யை வீழ்த்தி செமி பைனலுக்கு தகுதி பெற்றது.


Click it and Unblock the Notifications