டோக்கியோ: மல்யுத்தம் ஆண்கள் 65kg ஆட்டம் காலிறுதி ஆட்டத்தில் பஜ்ரங் புனியா காலிறுதி போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளார்.
2021 ஒலிம்பிக் ஆட்டத்தில் இந்திய மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா சிறப்பாக ஆடி வருகிறார். இன்று காலை நடந்த ஒலிம்பிக் மல்யுத்தம் ஆண்கள் 65kg ஆட்டம் 1/8 பைனல் ஆட்டத்தில் பஜ்ரங் புனியா வெற்றிபெற்றார். இந்த போட்டியில் கிரகஸ்தான் வீரர் ஏர்னேசரை பஜ்ரங் புனியா எதிர்கொண்டார்.

3:3 என்ற புள்ளி கணக்கில் ஆட்டம் டிரா ஆன நிலையில் கடைசியில் டேக் டவுன் புள்ளிகள் அடிப்படையில் வெற்றிபெற்றார். இந்த நிலையில் அரைமணி நேர இடைவெளியில் பஜ்ரங் புனியா காலிறுதி போட்டியில் கலந்து கொண்டார்.
இதில் ஈரான் வீரர் மோர்டேசாவை எதிர்கொண்டார். இதில் தொடக்கத்தில் மோர்டேசாதான் ஆதிக்கம் செலுத்தினார். முதல் சுற்றில் மோர்டேசா 1 புள்ளிகளை பெற்றார். பஜ்ரங் புனியா இதில் புள்ளிகள் எதையும் பெறவில்லை.
ஆனால் கடைசி சுற்றில் பஜ்ரங் புனியா 2 புள்ளிகளை பெற்றார். இதன் மூலம் 2:1 என்ற புள்ளிகள் கணக்கில் வென்று பஜ்ரங் புனியா செமி பைனலுக்கு தகுதி பெற்றுள்ளார். செமி பைனல் போட்டி இன்று பிற்பகல் 2.52 மணிக்கு நடக்க உள்ளது.
ஹசர்பைஜான் நாட்டின் ஹாஜியை இதில் பஜ்ரங் புனியா எதிர்கொள்ள இருக்கிறார்.