Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மல்யுத்தத்தின் 50 கிலோ பெண்கள் ஆட்டம்.. 3:1 என்ற புள்ளி கணக்கில்.. இந்தியாவின் சீமா பிஸ்லா தோல்வி

டோக்கியோ: மல்யுத்தத்தின் பெண்கள் 50kg ஆட்டம் 1/8 பைனல் ஆட்டத்தில் இந்தியாவின் சீமா பிஸ்லா தோல்வி அடைந்து வெளியேறி உள்ளார்.

2020 ஒலிம்பிக் தொடரில் இந்தியா மல்யுத்த போட்டிகளில் பெரிதாக கவனம் ஈர்க்கவில்லை. இதில் இந்தியா சார்பாக நேற்று ஆண்கள் 57 கிலோ ஆட்ட பிரிவில் ரவி குமார் தஹியா பைனலில் தோல்வி அடைந்தாலும் வெள்ளி வென்று சாதனை படைத்தார்.

ஆனால் இந்திய வீரர், வீராங்கனைகள் வேறு யாரும் மல்யுத்தத்தில் சிறப்பாக ஆடவில்லை. நேற்று பெண்கள் 53 கிலோ மல்யுத்த ஆட்டத்தின் காலிறுதி போட்டியில் இந்தியாவின் வினேஷ் போகட் தோல்வி அடைந்து வெளியேறினார்.

எப்படி

எப்படி

இதேபோல் 57kg பிரிவு- 1/8 ரெப்சேஜ் ஆட்டத்தில் இந்தியாவின் அன்ஷு மாலிக் தோல்வி அடைந்து ஒலிம்பிக்கில் இருந்து இன்று வெளியேறினார். இந்த நிலையில்தான் இன்று 50kg ஆட்டம் 1/8 பைனல் ஆட்டத்தில் இந்தியாவின் சீமா பிஸ்லா அடைந்தார்.

தோல்வி

தோல்வி

துனிஷியாவின் சாராவை இந்த போட்டியில் சீமா எதிர்கொண்டார். இதில் தொடக்கத்தில் இருந்தே சாரா ஆதிக்கம் செலுத்தினார். முதல் ரவுண்டில் சாரா 1 1 புள்ளிகளை பெற்றார். முதல் சுற்றில் சீமா புள்ளி எதையும் பெறவில்லை. இரண்டாவது சுற்றில் சீமா, சாரா தலா ஒரு புள்ளிகளை பெற்றனர்.

சாரா

சாரா

இதனால் சாராவிடம் 3:1 என்ற புள்ளிகள் கணக்கில் இந்தியாவின் சீமா பிஸ்லா தோல்வி அடைந்து வெளியேறி உள்ளார். சாரா ஒருவேளை பைனல் சென்றால் சீமாவிற்கு ரெப்சேஜ் முறையில் வெண்கல பதக்க போட்டியில் ஆடும் வாய்ப்பு கிடைக்கும். சாராவின் அடுத்தடுத்த போட்டிகளை வைத்தே இது உறுதி செய்யப்படும்.

இன்று மீதம் உள்ள போட்டிகள்

இன்று மீதம் உள்ள போட்டிகள்

இன்று மல்யுத்தத்தில் மேலும் சில போட்டிகள் நடக்க உள்ளது. மல்யுத்தம ஆண்கள் 65kg ஆட்டம் 1/8 பைனல் - பஜ்ரங் புனியான் ஆட்டம் சற்று நேரத்தில் நடக்கவுள்ளது. இதில் அவர் தேர்வு ஆனால் காலிறுதி போட்டியில் இன்று காலை ஆடுவார்.

Story first published: Friday, August 6, 2021, 9:28 [IST]
Other articles published on Aug 6, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+