Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

முதல் நாளிலேயே 25 வருட ரெக்கார்ட் பிரேக்.. வில்வித்தை ரேங்கிங் சுற்றில் கலக்கிய.. கொரியா ஆன் சான்!

டோக்கியோ: இன்று நடந்த ரேங்கிங் சுற்று போட்டியில் மொத்தம் 680 புள்ளிகளுடன் கொரியாவின் ஆன் சான் முதல் இடம் பிடித்தார். 25 வருட சாதனையை இன்று அவர் முறியடித்தார்.

2020 ஒலிம்பிக் தொடரின் வில்வித்தை பிரிவில் பெண்களுக்கான ரேங்கிங் சுற்றுகள் இன்று நடைபெற்றன. மொத்தம் 12 சுற்றுகள் தொடரில் நடைபெற்றது. இந்த ரேங்கிங் சுற்றின் முடிவில் இந்தியாவின் தீபிகா குமாரி 9வது இடம் பிடித்தார்.

மொத்தமாக 12 சுற்று முடிவில் 663 புள்ளிகளை பெற்று 9வது இடத்தை பிடித்தார். இந்த ரேங்கிங் சுற்றில் 616 புள்ளிகள் பெற்ற பூட்டானின் கர்மா என்ற வீராங்கனையுடன் குழு சுற்றில் தீபிகா குமாரி மோதுவார்.

முதல் இடம்

முதல் இடம்

இன்று நடந்த ரேங்கிங் சுற்று போட்டியில் மொத்தம் 680 புள்ளிகளுடன் கொரியாவின் ஆன் சான் முதல் இடம் பிடித்தார். இதன் மூலம் ரேங்கிங் சுற்று போட்டியில் வில்வித்தையில் அதிக புள்ளிகள் பெற்ற வீராங்கனை என்ற சாதனையை ஆன் சான் படைத்துள்ளார். 25 வருட சாதனையை முதல் நாளிலேயே ஆன் சான் பிரேக் செய்துள்ளார்.

சாதனை

சாதனை

கடைசியாக 1996ல் உக்ரைனின் லீனா ஹெராஷிமென்கா 673 புள்ளிகள் பெற்று இருந்தார். இதுதான் இதுவரை உலக சாதனையாக இருந்தது. தற்போது அந்த சாதனையை தற்போது ஆன்சன் முறியடித்துள்ளார். இதன் மூலம் இன்று நடந்த ரேங்கிங் சுற்றில் ஆன் சான் முதலிடம் பிடித்தார்.

வியப்பு

வியப்பு

அதோடு இன்று இன்னொரு சுவாரசியமான விஷயமும் நடைபெற்றது. இன்னும் மூன்று வீராங்கனைகள் இந்த சாதனையை முறியடித்தனர். முதல் மூன்று இடங்களை கொரிய வீரர்களே பிடித்தனர். ஆம் இரண்டாம் இடம் வந்த ஜாங் மின்னீ 677, மூன்றாம் இடம் வந்த சியாங் கான் 675, நான்காம் இடம் வந்த அலிஜான்ரா வேலனிக்கா 674 என்று உக்ரைனின் லீனா ஹெராஷிமென்கா ரெக்கார்டை முறியடித்தனர்.

ரெக்கார்ட்

ரெக்கார்ட்

முதல் நாள், முதல் போட்டியிலேயே ஒலிம்பிக்கில் இன்று ரெக்கார்ட் பிரேக் செய்யப்பட்டு உள்ளது. வீராங்கனைகளின் துல்லியம் அதிகரித்து இருப்பதும், அதிக புள்ளிகளை எளிதாக வெல்ல தொடங்கி இருப்பதும் இதன் மூலம் உறுதியாகி உள்ளது. இந்த முறை ஒலிம்பிக்கில் இதனால் புதிய பல சாதனைகள் படைக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Friday, July 23, 2021, 10:52 [IST]
Other articles published on Jul 23, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+