Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஒலிம்பிக் கோல்ப் 2020.. விறுவிறுப்பாக நடந்து வந்த ஆட்டம் திடீரென மழையால் பாதிப்பு.. ஒத்திவைப்பு!

டோக்கியோ: விறுவிறுப்பாக நடந்து வந்த ஒலிம்பிக் கோல்ப் ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டுள்ளது.

ஒலிம்பிக் கோல் ஆட்டங்கள் இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ளது. மொத்தம் 4 ரவுண்டு போட்டிகள் இந்த ஒலிம்பிக் கோல்ப் ஆட்டத்தில் நடக்கும். இதில் மூன்று ரவுண்ட் ஆட்டங்கள் முடிந்த நிலையில் பெண்கள் ஆட்டத்தின் கடைசி ரவுண்ட் போட்டிகள் இன்று நடந்தது.

Olympics 2020: Last few holes of Gold round four has been stopped due to rain

ஒரு ரவுண்டுக்கு 18 குழிகளில் பந்துகளை போட வேண்டும். மொத்தமாக 72 குழிகளில் பந்துகளை நிரப்பும் ஆட்டம் ஆகும் இது. இன்று

கடைசி ரவுண்டு போட்டிகள் நடந்து வந்த நிலையில் ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டது. மழை, புயல் காற்று காரணமாக ஆட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. மழை தொடர்ந்து பெய்வதால் ஆட்டம் நாளைக்கு ஒத்திவைக்கப்படும்.

ஜப்பான் வானிலை மோசமாக இருப்பதால் நாளையும் கூட ஆட்டம் பாதிக்கப்பட வாய்ப்புகள் உள்ளது. மொத்தமாக நான்கு சுற்றுகள் முடிவில் 72 குழிகள் ஆடப்பட்டு இருக்க வேண்டும். ஆனால் இன்னும் சில வீராங்கனைகள் 2 குழிகளை ஆட வேண்டும். இன்று மழை விடும் பட்சத்தில் போட்டி தொடங்கும் இல்லையென்றால் நாளை ஆட்டம் நடக்கும்.

நாளை ஒருவேளை ஆட்டம் பாதிக்கப்பட்டால் போட்டி 54 குழிகள் கொண்ட ஆட்டமாக மாற்றப்படும். அதாவது இதுவரை நடந்த சுற்றுகளை வைத்து போட்டியின் வெற்றியாளர் தீர்மானிக்கப்படுவார். இதை வைத்து முடிவுகள் தீர்மானிக்கப்பட்டால் இந்தியாவின் அதிதிக்கு வெள்ளி அல்லது வெண்கல பதக்கம் கிடைக்கும்.

தற்போது வரை நடந்துள்ள சுற்றுகள் அடிப்படையில் மதிப்பெண்கள் பின்வருமாறு

அமெரிக்காவின் நெல்லி -17 நெகட்டிவ் புள்ளிகள் பெற்று முதலிடத்தில் உள்ளார்

ஜப்பானின் மோனே -16 நெகட்டிவ் புள்ளிகள் பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளார்

இந்தியாவின் அதிதி அசோக் -15 நெகட்டிவ் புள்ளிகள் பெற்று மூன்றாம் இடத்தில் உள்ளார்

இவர்கள் மூன்று பேருமே இன்னும் 2 குழிகளில் ஆட வேண்டும் என்பதால் அதிதி வெண்கலம் அல்லது வெள்ளி வாங்க அதிக வாய்ப்புகள் உள்ளன.

Story first published: Saturday, August 7, 2021, 12:41 [IST]
Other articles published on Aug 7, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+