Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஒலிம்பிக்.. துப்பாக்கி சுடுதல் பிரிவிலும் ஏமாற்றம்.. இறுதி சுற்றுக்கு தகுதி பெறாத மனு, யாஷாஸ்வினி!

டோக்கியோ: ஒலிம்பிக் தொடரின் துப்பாக்கி சுடுதல் பிரிவில் இன்று இந்தியாவின் மனு பாகர், யாஷாஸ்வினி தேஸ்வால் இரண்டு பேருமே பெண்கள் 10 மீ பிஸ்டல் பிரிவில் தோல்வி அடைந்தனர். இரண்டு பேருமே இறுதிசுற்றுக்கு தகுதி பெறவில்லை.

ஒலிம்பிக் 2020 தொடரில் நேற்றைய நாள் இந்தியாவிற்கு மிகவும் மோசமாக் அமைந்தது இருந்தது. நேற்று எடை தூக்குதல் போட்டியில் இந்தியாவின் மீராபாய் சானு வெள்ளிப்பதக்கம் வென்றார். ஆனால் மற்ற போட்டிகளில் இந்திய தரப்பு மிகவும் மோசமாக சொதப்பியது.

முக்கியமாக நேற்று துப்பாக்கி சுடுதல் போட்டிகளில் இந்திய வீரர்கள் பெரிய அளவில் ஏமாற்றம் அளித்தனர். இந்தியா சார்பாக மொத்தம் 15 பேர் ஒலிம்பிக்கில் பல்வேறு துப்பாக்கி சுடுதல் பிரிவு போட்டிகளுக்கு தேர்வாகி உள்ளனர்.

இன்று

இன்று

இதில் இன்று திவ்யான்ஸ் சிங், மைராஜ் அஹமது கான், தீபக் குமார், அங்காத் வீர் சிங் ஆகிய வீரர் வீராங்கனைகள் பல்வேறு பிரிவுகளில் மோத உள்ளனர். 10 மீட்டர் ரைபல் பிரிவில் இந்தியாவில் திவ்யனேஷ் சிங் பன்வார், தீபக் குமார் ஆட உள்ளனர். இந்தியா சார்பாக பெண்கள் பிரிவில் மனு பாகர் மற்றும் யாஷாஸ்வினி சிங் தேஸ்வால் 10 மீ பிஸ்டல் துப்பாக்கி சுடும் பிரிவில் இன்று ஆடினார்கள்.

துப்பாக்கி

துப்பாக்கி

இதில் பெண்கள் பிஸ்டல் பிரிவில் மொத்தம் 580 புள்ளிகளை குறைந்தபட்சம் எடுக்க வேண்டும். இதில் முதல் எட்டு இடங்களுக்குள் வரும் வீராங்கனைகள் அடுத்த சுற்றுக்கு தகுதி பெறுவார்கள். இன்று இந்த பிரிவில் மொத்தம் 53 வீராங்கனைகள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஒலிம்பிக் தொடரின் துப்பாக்கி சுடுதல் பிரிவில் இன்று இந்தியாவின் மனு பாகர், யாஅஷ்வினி தேஸ்வால் இரண்டு பேருமே பெண்கள் 10 மீ பிஸ்டல் பிரிவில் தோல்வி அடைந்தனர்.

பெண்கள்

பெண்கள்

இரண்டு பேருமே இறுதிசுற்றுக்கு தகுதி பெறவில்லை. இதில் மனு நல்ல தொடக்கம் கொடுத்தாலும் வெறும் 575 புள்ளிகள் மட்டுமே பெற்றார். இவர் 12வது இடம் மட்டுமே பிடித்தார். யாஷாஸ்வினி 574 புள்ளிகள் பெற்று 13வது இடம் பிடித்தார்.

ஆண்கள் பிரிவு

ஆண்கள் பிரிவு

இனி ஆண்கள் பிரிவில் தகுதி சுற்று நடைபெறும். ஆண்கள் பிரிவு ஏர் ரைபல் பிரிவிலும் இதே விதிமுறைதான். ஆனால் அதில் 630 புள்ளிகள் எடுக்க வேண்டும். இன்று இதில் 47 பேர் கலந்து கொள்கிறார்கள். இது போக இன்று இந்தியா சார்பாக ஷாட்கன் பிரிரிவில் மைராஜ் அஹமது கான், அங்காட் வீர் சிங் பாஜ்வா ஆகியோர் கலந்து கலந்து கொள்கிறார்கள். இதில் முதல் 4 சுற்றில் டாப் எட்டு இடங்களுக்குள் வருபவர்கள் அடுத்த சுற்றுக்கு தகுதி பெறுவார்கள்.

நேற்று

நேற்று

நேற்று துப்பாக்கி சுடுதல் பிரிவில் இந்தியா சார்பில் கலந்து கொண்ட யாரும் சரியாக ஆடவில்லை. சோரப் சவுத்திரி இறுதி சுற்றுக்கு தேர்வானாலும் எந்த பதக்கமும் வெல்லவில்லை. அதேபோல் மற்ற துப்பாக்கி சுடுதல் பிரிவில் கலந்து கொண்ட அபிஷேக் சர்மா, இளவேனில் வாலறிவன், அபூர்வி சந்தேலா ஆகியோரும் இறுதி போட்டிக்கு தகுதி பெறவில்லை.

Story first published: Sunday, July 25, 2021, 9:26 [IST]
Other articles published on Jul 25, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+