Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஒலிம்பிக்: 25 மீ பெண்கள் பிஸ்டல் துப்பாக்கி சூடு.. முதல் ஸ்டேஜில் மனு பாகர் 5வது, ராகி 25வது இடம்!

டோக்கியோ: ஒலிம்பிக் 25 மீ பெண்கள் பிஸ்டல் துப்பாக்கி சூடு பிரிவின் முதல் சுற்று முடிவில் இந்தியாவின் மனு பாகர் 5வது இடம் பிடித்துள்ளார். இந்தியாவின் ராகி சர்னோபாட் 25வது இடத்தை பிடித்துள்ளார்.

ஒலிம்பிக் 25 மீ பெண்கள் பிஸ்டல் துப்பாக்கி சூடு பிரிவு போட்டிகள் இன்று நடைபெற்றன. இதில் மொத்தம் 60 முறை ஒரு வீராங்கனை சுட வேண்டும். இதை மொத்தம் 2 ஸ்டேஜ்களாக பிரித்து உள்ளனர்.

Olympics 2020: Manu Bhaker gets 5th place and Ragi gets 25th place in 25m Women Shooting

துல்லியமான துப்பாக்கி சுடுதலை சோதிக்கும் முதல் ஸ்டேஜ் இன்று நடைபெற்றது. நாளை வேகமாக துப்பாக்கி சுடுதலை சோதிக்கும் இரண்டாம் ஸ்டேஜ் நடக்கும். இரண்டு ஸ்டேஜ் முடிவில் முதல் எட்டு இடங்களுக்குள் வரும் வீராங்கனைகள் இறுதி சுற்றுக்கு தகுதி பெறுவார்கள்.

முதலில் ஸ்டேஜில் 30 முறையும், இரண்டாவது சுற்றில் 30 முறையும் சுட வேண்டும். இன்று நடந்த முதல் ஸ்டேஜில் இந்தியா சார்பாக கலந்து கொண்ட மனு பாகர் 97, 97, 98 என்று மொத்தம் 292 புள்ளிகளை பெற்றார். இன்று இவரின் ஆவரேஜ் 9.733 புள்ளிகள் ஆகும்.

சிறப்பான ஆட்டம் காரணமாக இன்று மனு பாகர் 5வது இடத்தை பிடித்தார். நாளைய சுற்றில் இவர் எட்டு இடங்களுக்குள் இடம்பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேற அதிக வாய்ப்புள்ளது. இன்னொரு பக்கம் இந்தியாவின் ராகி சர்னோபாட் 96, 97, 94 என்று மொத்தம் 287 புள்ளிகளை மட்டுமே பெற்றார்.

இன்று இவரின் ஆவரேஜ் 9.567 புள்ளிகள் ஆகும். ராகி சர்னோபாட் 25வது இடத்தை பிடித்துள்ளார். நாளை ராபிட் பயரில் எப்படியாவது இவர் எட்டு இடங்களுக்குள் வர வேண்டும்.

Story first published: Thursday, July 29, 2021, 18:54 [IST]
Other articles published on Jul 29, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+