Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஒலிம்பிக் 2020.. 10 மீட்டர் ஏர் பிஸ்டல்.. இந்தியாவின் மனு பாக்கர் - சௌரப் சௌத்ரி ஜோடி தோல்வி

டோக்கியோ: 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் மனு பாக்கர் - சௌரப் சௌத்ரி ஜோடி தோல்வி அடைந்து வெளியேறி உள்ளது. முதல் சுற்றில் வென்ற நிலையில் இரண்டாவது சுற்றில் தோல்வி அடைந்து மனு பாக்கர் - சௌரப் சௌத்ரி ஜோடி வெளியேறியது.

ஒலிம்பிக் தொடரில் துப்பாக்கி சுடுதல் பிரிவில் இன்று கலப்பு ஆட்டங்கள் நடைபெற்றன. 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் கலப்பு ஆட்டங்கள் நடைபெற்றன.

இதில் இந்தியா சார்பாக மனு பாக்கர் - சௌரப் சௌத்ரி ஜோடி மற்றும் அபிஷேக் வர்மா - யாஷாஸ்வினி சிங் ஜோடி கலந்து கொண்டு ஆடியது.

தோல்வி

தோல்வி

இதில் முதல் இரண்டு ரவுண்ட் ஆட்டங்கள் இன்று நடைபெற்றன. இதில் முதல் ரவுண்டில் எட்டு இடங்களுக்குள் வரும் அணி இரண்டாவது ரவுண்டுக்கு செல்லும். இரண்டாவது ரவுண்டில் 4 இடங்களுக்குள் வரும் அணி பைனல்ஸ் செல்லும்.

எப்படி

எப்படி

முத்த; ரவுண்டில் ஒரு அணியில் இருவரும் தலா 30 முறை சுட வேண்டும். இரண்டாவது சுற்றில் ஒருவர் தலா 40 முறை சுட வேண்டும். இரண்டாவது சுற்றுக்கு 20 நிமிடடம் மட்டுமே நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் முதல் இரண்டு இடம் வருபவர்கள் பைனலில் தங்கத்திற்காக போட்டியிடுவார்கள்.

தங்கம்

தங்கம்

இந்தியாவின் நம்பிக்கையாக இருந்த மனு பாக்கர் - சௌரப் சௌத்ரி ஜோடி முதல் ஆட்டத்தில் சிறப்பாக ஆடினார்கள். முதல் ரவுண்டில் இரண்டு பேரும் மொத்தமாக 582 புள்ளிகள் எடுத்தனர். இதனால் முதல் இடம் பிடித்து இரண்டாவது சுற்றுக்கு தகுதி பெற்றனர்.

ஆனால்

ஆனால்

ஆனால் இரண்டாவது சுற்றில் இரண்டு பேருமே மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். இரண்டாவது சுற்றில் வெறும் 380 புள்ளிகள் மட்டுமே இவர்கள் பெற்றனர். இதனால் இரண்டாவது சுற்றில் 7ம் இடம் பிடித்து மனு பாக்கர் - சௌரப் சௌத்ரி ஜோடி தோல்வி அடைந்து வெளியேறி உள்ளது.

Story first published: Tuesday, July 27, 2021, 12:50 [IST]
Other articles published on Jul 27, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+