பாய்மரப் படகு போட்டி.. லேசாக சறுக்கிய தமிழ்நாட்டின் நேத்ரா.. 38வது இடத்திற்கு பின் தங்கினார்
டோக்கியோ: இன்று ஒலிம்பிக் தொடரில் பாய்மரப் படகுப் போட்டியில் தமிழ்நாடு வீராங்கனை நேத்ரா குமணன் லேசான சரிவை சந்தித்து பின்தங்கினார்.
ஒலிம்பிக் பாய்மரப் படகுப் போட்டி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. பாய்மரப் படகுப் போட்டியின் laser radial பிரிவு ஆட்டங்கள் தற்போது நடந்து வருகிறது.
மொத்தம் 10 ரேஸ் இதில் நடக்கும். தினமும் 2 ரேஸ் வீதம் இதில் போட்டிகள் நடக்கும். இந்தியா சார்பாக நான்கு பேர் விளையாட தேர்வாகி உள்ளனர்.

என்ன ஆட்டம்
laser radial ரேஸ் பிரிவு ஆட்டங்கள் என்பது மிகவும் கடினமான ஆட்டங்கள் ஆகும். நேத்ரா குமணன், விஷ்ணு சரவணன், கேசி கணபதி ஆகிய மூன்று தமிழ்நாடு வீரர், வீராங்கனைகள் இன்று ஆடுகிறார்கள் இதில் நேத்ரா குமணன் கலந்து கொண்ட பாய்மரப் படகுப் போட்டி இன்று நடைபெற்றது.

நேத்ரா குமணன்
பெண்கள் பிரிவில் நேத்ரா குமணன் இதுவரை 6 ரேஸ்களில் கலந்து கொண்டுள்ளார். நேற்று நடந்த மூன்றாவது ரேஸில் நேத்ரா 15வது இடம் பிடித்தார். அதற்கு அடுத்து நடந்த 4வது ரேஸில் மேலும் பின்னடைவை சந்தித்த நேத்ரா 40வது இடம் பிடித்தார். நேற்று திடீரென 40வது இடத்திற்கு இவர் சரிந்தது பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

சரிவு
இந்த நிலையில் இன்று லேசாக சரிவில் இருந்து மீண்டவர் 32வது இடத்திற்கு முன்னேறினார். இதனால் மீண்டும் 20 இடங்களுக்குள் எப்படியாவது நேத்ரா சென்று விடுவார் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மேலும் சரிவை சந்தித்த நேத்ரா 38வது இடத்திற்கு பின் தங்கினார்.

இறுதி போட்டி
இன்னும் இந்த தொடரில் 4 போட்டிகள் மீதம் உள்ளன. அடுத்த இரண்டு போட்டிகள் நாளை நடக்க உள்ளது. இதில் நேத்ரா ஆடுவதை பொறுத்தே அவர் இறுதி போட்டியில் வெற்றிபெறுவது உறுதி செய்யப்படும். ஆகஸ்ட் 1ம் தேதி வெற்றியாளரை தேர்வு செய்யும் போட்டி நடக்கும்.


Click it and Unblock the Notifications