ஒலிம்பிக் பாய்மரப் படகு போட்டி.. நம்பிக்கை தரும் தமிழ்நாட்டின் நேத்ரா.. 16வது இடத்திற்கு முன்னேற்றம்
டோக்கியோ: இன்று ஒலிம்பிக் தொடரில் பாய்மரப் படகுப் போட்டியில் தமிழ்நாடு வீராங்கனை நேத்ரா குமணன் சிறப்பாக ஆடி கவனம் ஈர்த்தார்.
ஒலிம்பிக் பாய்மரப் படகுப் போட்டி தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்தியா சார்பாக நான்கு பேர் விளையாட தேர்வாகி உள்ளனர். நேத்ரா குமணன், விஷ்ணு சரவணன், கேசி கணபதி ஆகிய மூன்று தமிழ்நாடு வீரர், வீராங்கனைகள் இன்று ஆடுகிறார்கள்.
அதேபோல் வருண் தாக்கூர் என்ற இன்னொரு வீரரும் இதில் ஆடுகிறார். ஒலிம்பிக்கிற்கு தேர்வாகும் இந்தியாவின் முதல் பாய்மரப் படகுப் போட்டி வீராங்கனை நேத்ரா குமணன்தான்.

நேத்ரா
இதில் நேத்ரா குமணன் கலந்த கண்ட பாய்மரப் படகுப் போட்டி இன்று நடைபெற்றது. இந்த பாய்மரப் படகுப் போட்டி என்பது laser radial பிரிவாகும். மொத்தம் 10 ரேஸ் இதில் நடக்கும். தினமும் 2 ரேஸ் வீதம் இதில் போட்டிகள் நடக்கும். ஆகஸ்ட் 1ம் தேதி வெற்றியாளரை தேர்வு செய்யும் போட்டி நடக்கும்.

இன்று
இந்த நிலையில் இன்று ஜப்பானின் பியூசாவா பகுதியில் பாய்மரப் படகுப் போட்டி நடைபெற்றது. இதில் தொடக்கத்தில் 40 இடத்தில் இருந்த நேத்ரா பின் வேகமாக முன்னேறினார். மார்க் புள்ளிகளை வேகமாக தொட்டு ஒவ்வொரு சுற்றிலும் முன்னேறிக்கொண்டு வந்தார்.

முடிவு
இதையடுத்து சரியாக முதல் ரேஸ் முடிவில் 33வது இடத்திற்கு முன்னேறினார். அதன்பின் இரண்டாவது ரேஸ் நடைபெற்றது. இதிலும் வேகமாக முன்னேறிய நேத்ரா முதல் 10 இடங்களுக்குள் வந்தார். 4 மற்றும் 5 வைத்து இடத்தில் விளையாடிக்கொண்டு இருந்த நேத்ரா நம்பிக்கை அளித்தார்.

நம்பிக்கை
கடைசியில் லேசாக பின்தங்கிய நேத்ரா குமணன் 16வது இடத்திற்கு பின்தங்கினார். ஆனாலும் இன்று இவரின் ஆட்டம் மிகவும் பாசிட்டிவ்வாக இருந்தது. அடுத்த நான்கு நாட்களுக்கு தினமும் இவர் இரண்டு ரேஸ்களில் கலந்து கொள்வார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications