Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

"சென்னை பையன்".. ஒலிம்பிக் டேபிள் டென்னிஸில் விறுவிறு ஆட்டம்.. போராடி தோற்ற சத்யன் ஞானசேகரன்!

டோக்கியோ: ஒலிம்பிக் தொடரில் இன்று நடந்த டேபிள் டென்னிஸ் ஆட்டத்தில் தமிழ்நாடு வீரர் சத்யன் ஞானசேகரன் தோல்வி அடைந்தார்.

ஒலிம்பிக் 2020 தொடரில் இன்றைய நாள் ஆட்டத்தில் கிட்டத்தட்ட வீரர்கள், வீராங்கனைகள் பலரும் சொதப்பினார்கள். துப்பாக்கி சுடுதல், டென்னிஸ் என்று வரிசையாக இன்று இந்திய வீரர்கள் மோசமாக ஆடினார்கள். டென்னிஸ் இரட்டையர் மகளிர் ஆட்டத்தில் சானியா மற்றும் ரெய்னா ஜோடி மோசமாக ஆடி வெளியேறியது.

ஆனால் இன்னொரு பக்கம் பேட்மிண்டனில் இந்தியாவின் பிவி சிந்து சிறப்பாக ஆடி, இஸ்ரேல் நாட்டு வீராங்கனையை எளிதாக வீழ்த்தினார்.

டேபிள் டென்னிஸ்

டேபிள் டென்னிஸ்

இந்த நிலையில் டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்தியா சார்பாக தமிழ்நாடு வீரர் சத்யன் ஞானசேகரன் கலந்து கொண்டார். இவர் ஹாங்காங் வீரர் லாம் சியூ ஹாங்கிடம் தற்போது மோதினார். இந்தியாவில் தற்போது நம்பர் 1 வீரர் சத்யன்தான். சென்னையை சேர்ந்த இவர் கடந்த சில வருடங்களாக இந்தியாவில் டேபிள் டென்னிஸில் கோலோச்சி வருகிறார்.

சிறப்பான ஆட்டம்

சிறப்பான ஆட்டம்

இன்றும் தொடக்கத்தில் இருந்து சத்யனுக்கும் ஹாங்காங் வீரருக்கும் இடையில் ஆட்டம் விறுவிறுப்பாக சென்றது. தொடக்கத்தில், சத்யன் 7-11 என்ற செட்டை இழந்தார். ஆனால் அதற்கு அடுத்த வரிசையாக 11 - 7, 11 -4, 11 -5 என்று மூன்று செட்களை கைப்பற்றினார். இதனால் ஆட்டம் விறுவிறுப்பாக சென்றது.

கடைசி செட்

கடைசி செட்

கடைசி செட்டில் சத்யன் வெற்றிபெற்றால் மேட்ச் டை ஆகும். இதனால் சத்யனுக்கு கம்பேக் கொடுக்க வாய்ப்பு கிடைக்கும். கண்டிப்பாக சத்யன் வெற்றிபெறுவார் என்று நம்பிக்கை இருந்தது.

ஆனால் என்ன

ஆனால் என்ன

ஆனால் அதன்பின் திடீரென சறுக்கிய சத்யன் வரிசையாக 9 -11, 10-12, 6-11 என்ற மூன்று செட்களை மீண்டும் இழந்தார். பின்னர் டை பிரேக்கர் சுற்றில் 4-3 என்ற கணக்கில் சத்யனை வீழ்த்தி ஹாங்காங் வீரர் லாம் சியூ ஹாங் வெற்றிபெற்றார். இதனால் ஒலிம்பிக் தொடரில் இருந்து சத்யன் வெளியேறினார்.

Story first published: Sunday, July 25, 2021, 17:20 [IST]
Other articles published on Jul 25, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+