For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உலக ரெக்கார்ட்.. வில்வித்தையின் 2 பிரிவிலும் இவங்கதான் டாப்.. தொடக்கத்திலேயே கலக்கும் தென் கொரியா!

டோக்கியோ: ஒலிம்பிக் 2020 தொடரில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான வில் வித்தையின் இரண்டு பிரிவிலும் தென் கொரிய வீரர்கள், வீராங்கனைகள் சிறப்பாக ஆடி வருகிறார்கள்.

ஒலிம்பிக் தொடரின் துவக்க நாளான இன்று வில்வித்தை பிரிவில் ரேங்கிங் ஆட்டங்கள் நடைபெற்றது. ரேங்கிங் சுற்று என்பது வில்வித்தை போட்டியில் பங்கு பெறும் 128 பேருக்கு (64 வீரர்கள், 64 வீராங்கனைகள்) இடையில் நடக்கும் சுற்றாகும்.

64 வீரர்களும் ரேங்கிங் போட்டியில் 12 சுற்றுகளில் மொத்தம் 72 முறை வில்களை ஏவுவார்கள். இதில் வரும் புள்ளிகள் அடிப்படையில் 64 பேருக்கும் ரேங்க் கொடுக்கப்படும்.

ஏன்

ஏன்

இந்த ரேங்கிங் அடிப்படையில்தான் நேருக்கு நேர் ஆட்டங்கள் தீர்மானிக்கப்படும். ஒரு வீரர் எந்த நாட்டு வீரரை எதிர்கொள்வார் என்று தீர்மானிக்கப்படும். இந்த ரேங்கிங் சுற்றில் முதலில் வரும் நபர் 64வது நபருடன் குழு போட்டியில் (நேருக்கு நேர் மோதல்) மோத வேண்டும். அதேபோல் இரண்டாவது வரும் நபர் 63வது ரேங்க் வரும் நபருடன் மோத வேண்டும். இதேபோல் மற்ற வீரர்களும் தேர்வு செய்யப்படுவார்கள்.

பெண்கள்

பெண்கள்

இந்த ரேங்கிங் போட்டியில் இன்று காலை நடந்த பெண்கள் பிரிவில் தென் கொரியாதான் முதலிடம் பிடித்தது. பெண்கள் பிரிவில் 680 புள்ளிகளுடன் கொரியாவின் ஆன் சான் முதல் இடம் பிடித்தார். இதன் மூலம் இவர் உலக சாதனை படைத்தார். கடைசியாக 1996ல் உக்ரைனின் லீனா ஹெராஷிமென்கா 673 புள்ளிகள் பெற்று இருந்தார். இந்த சாதனையை சான் முறியடித்துள்ளார்.

ஆண்கள்

ஆண்கள்

ஆண்கள் ரேங்கிங் பிரிவிலும் தென் கொரியாவின் கிம் ஜெ டியோக் 688 புள்ளிகளோடு முதலிடம் பிடித்தார். அதேபோல் ஆண்கள் குழு பிரிவிலும் 1191 புள்ளிகளுடன் கொரியா முதலிடம் பிடித்துள்ளது. இது போக பெண்கள் பிரிவில் முதல் மூன்று இடங்களை கொரிய வீரர்களே பிடித்தனர். இரண்டாம் இடம் வந்த ஜாங் மின்னீ 677 புள்ளிகளுடன் பிடித்தார்.

சாதனை

சாதனை

மூன்றாம் இடம் வந்த சியாங் கான் 675 புள்ளிகள் பெற்றார். இவரும் தென் கொரியாவை சேர்ந்தவர். வடகொரியா இந்த ஒலிம்பிக் தொடரை புறக்கணித்துள்ள நிலையில், தென் கொரியாவோ முதல் நாளில் இருந்தே ஒலிம்பிக் போட்டிகளில் கலக்கி வருகிறது,

Story first published: Friday, July 23, 2021, 14:06 [IST]
Other articles published on Jul 23, 2021
English summary
Olympics 2020: South Korea dominates in men and women Individual Archery ranking rounds on the first day.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+