ஒலிம்பிக் 2020 வாள்வீச்சு.. 2வது போட்டியில் தமிழ்நாட்டின் பவானி தேவி தோல்வி.. வெளியேற்றம்
டோக்கியோ: ஒலிம்பிக் 2020 வாள்வீச்சு போட்டியில் தமிழ்நாடு வீராங்கனை பவானி தேவி தோல்வி அடைந்து வெளியேறி உள்ளார். முதல் போட்டியில் வென்ற பவானி இரண்டாவது போட்டியில் தோல்வி அடைந்துள்ளார்.
ஒலிம்பிக் 2020 தொடரின் வாள்வீச்சு போட்டி இன்று நடைபெற்றது. இதில் இந்தியா சார்பாக பவானி தேவி கலந்து கொண்டார்.
இந்தியா சார்பாக ஒலிம்பிக் போட்டியில் வாள்வீச்சு பெண்கள் பிரிவில் கலந்து கொள்ளும் முதல் வீராங்கனை பவானி தேவிதான். இதனால் அவர் மீது அதிக எதிர்பார்ப்பு இருந்தது.

எதிர்பார்ப்பு
ஆனால் அதிர்ச்சி அளிக்கும் வகையில் ஒலிம்பிக் 2020 வாள்வீச்சு போட்டியில் தமிழ்நாடு வீராங்கனை பவானி தேவி வெளியேறி உள்ளார். பிரான்சின் மனோன் ப்ருநட்டிடம் 7-15 என்ற புள்ளிகள் கணக்கில் பவானி தேவி தோல்வி அடைந்தார்.

மோசமான தொடக்கம்
இரண்டாவது சுற்று ஆட்டத்தில் இன்று பவானி மீது அதிக எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் முதல் 11 புள்ளிகளை பிரான்சின் மனோன் ப்ருநட் எடுக்கும் வரை பவானி ஒரு புள்ளி கூட எடுக்கவில்லை. 11 புள்ளிகளை பிரான்சின் மனோன் ப்ருநட் எடுத்த பின்புதான் பவானி முதல் புள்ளியை எடுத்தார்.

வேகம்
அதன்பின் வேகம் காட்டிய பவானி 7 புள்ளிகளை எடுத்தார். ஆனால் பவானிக்கு மேலும் வாய்ப்பு கொடுக்காமல் பிரான்சின் மனோன் ப்ருநட் கடைசியில் 15 புள்ளிகள் எடுத்து வெற்றிபெற்றார். பிரான்சின் மனோன் ப்ருநட்டிடம் 7-15 என்ற புள்ளிகள் கணக்கில் பவானி தோல்வி அடைந்து ஒலிம்பிக்கில் இருந்து வெளியேறி உள்ளார்.

நம்பிக்கை
இன்று காலை துனிஷியா வீராங்கனை நதியா பென் அசிசை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு பவானி முன்னேற்றம் அடைந்தார். அப்போது பவானி மீது அதிக அளவில் நம்பிக்கை எழுந்தது. ஆனால் பிரான்ஸ் வீராங்கனையிடம் தோல்வி அடைந்து பவானி ஏமாற்றம் அளித்துள்ளார்.


Click it and Unblock the Notifications