Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பாய்மரப் படகு போட்டி.. அசத்தும் "தமிழர்" விஷ்ணு சரவணன்.. 3வது ரேஸின் முடிவில் 24வது இடம்!

டோக்கியோ: இன்று ஒலிம்பிக் தொடரில் பாய்மரப் படகுப் போட்டியில் தமிழரான விஷ்ணு சரவணன் சிறப்பாக ஆடி வருகிறார்.

Olympics 2020: Vishnu Saravanan takes 20th place after 2 race in sailing

ஒலிம்பிக் பாய்மரப் படகுப் போட்டி இரண்டு நாட்களாக தீவிரமாக நடந்து வருகிறது. தமிழ்நாட்டு வீரர்கள் இதில் பலர் தேர்வாகி உள்ளனர். நேத்ரா குமணன், விஷ்ணு சரவணன், கேசி கணபதி ஆகிய மூன்று தமிழ்நாடு வீரர், வீராங்கனைகள் இன்று ஆடுகிறார்கள்.

இதில் விஷ்ணு சரவணன் ராணுவ வீரர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் மகாராஷ்டிராவில் வசிப்பதால் மகாராஷ்டிரா கணக்கில் ஒலிம்பிக்கில் வருகிறார்.

பாய்மரப் படகுப் போட்டியின் laser radial பிரிவு போட்டிகள் தற்போது நடந்து வருகிறது. மொத்தம் 10 ரேஸ் இதில் நடக்கும். தினமும் 2 ரேஸ் வீதம் இதில் போட்டிகள் நடக்கும். ஆகஸ்ட் 1ம் தேதி வெற்றியாளரை தேர்வு செய்யும் போட்டி நடக்கும்.

நேற்று விஷ்ணு சரவணன் கலந்து கொண்ட முதல் ரேஸ் நடந்தது .முதல் ரேஸ் முடிவில் 14வது இடத்தில் விஷ்ணு சரவணன் இருந்தார். நேற்றே இரண்டாவது ரேஸ் நடத்தப்பட வேண்டும். ஆனால் இரண்டாவது ரேஸ் வானிலை காரணமாக நடத்தப்படவில்லை.

இந்த நிலையில் இன்று இரண்டு மற்றும் மூன்றாவது ரேஸ் நடத்தப்பட்டது. மார்க் புள்ளிகளை யார் வேகமாக தொட்டு ஒவ்வொரு சுற்றிலும் முன்னேறுகிறார்கள் என்பதை பொறுத்து இதில் மதிப்பெண் வழங்கப்படும். இன்று இரண்டாவது ரேஸில் சரவணன் 15, 17 என்று மாறி மாறி இடங்களை பெற்று வந்தார்.

கடைசியாக இரண்டாவது ரேஸின் முடிவில் விஷ்ணு சரவணன் 20வது இடம் பிடித்தார். அதன்பின் சில நிமிடங்களில் நடந்த மூன்றாவது ரேஸில் லேசாக பின்தங்கிய சரவணன் கடைசியாக 24வது இடம் பிடித்தார். நாளை மேலும் இரண்டு ரேஸ்கள் நடக்க உள்ளது குறிப்பிடத்தக்கது. நேற்று பெண்களுக்கான பாய்மர படகு போட்டியில் தமிழ்நாட்டு வீராங்கனை நேத்ரா குமணன் 16வது இடத்தை பிடித்தது குறிப்பிடத்தக்கது.

Story first published: Monday, July 26, 2021, 13:13 [IST]
Other articles published on Jul 26, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+