For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஒரே நேரத்தில்.. ஹாக்கி செமியில் இந்திய ஆண்கள் & பெண்கள் அணி.. முக்கியத்துவம் வாய்ந்த வெற்றி.. ஏன்?

டோக்கியோ: ஒலிம்பிக் 2020 தொடரில் இந்திய ஹாக்கி ஆண்கள் மற்றும் பெண்கள் அணி செமி பைனலுக்கு சென்றது மிக முக்கியமான விஷயமாக பார்க்கப்படுகிறது. பல்வேறு காரணங்களுக்காக இந்த வெற்றி விளையாட்டு ரசிகர்கள் இடையே கொண்டாடப்பட்டு வருகிறது.

Recommended Video

Tokyo Olympics : Who Is PR Sreejesh | Indian Men's Hockey Team

ஒலிம்பிக் 2020 இந்திய ஹாக்கி படை புதிய சகாப்தம் படைத்துள்ளது. ஹாக்கி ஆண்கள் மற்றும் பெண்கள் என்று இரண்டு பிரிவிலும் இந்தியா அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. இதற்கு முன் ஒலிம்பிக் வரலாற்றில் இதுபோல நடந்தது கிடையாது.

இரண்டு அணிகளும் நிகழ்த்தி இருக்கும் இந்த சாதனை சாதாரணமானது கிடையாது. முக்கியமாக ஹாக்கி போட்டியில் ஆஸ்திரேலியா, நெதர்லாந்து போன்ற அணிகள் கோலோச்சும் காலத்தில் இந்தியாவின் இந்த வெற்றி மிக சிறப்பான ஒன்று.

ஏன் முக்கியம்

ஏன் முக்கியம்

இதில் ஆண்கள் ஹாக்கி அணி செமி பைனல் செல்வது என்பது இரண்டு காரணங்களுக்காக முக்கியத்துவம் பெறுகிறது. முதல் விஷயம் 49 வருடங்களுக்கு பின் இப்படி செமி பைனல் போட்டிக்கு இந்திய ஆண்கள் படை தகுதி பெற்றுள்ளது. கடைசியாக 1972 ஒலிம்பிக் செமி பைனலில் இந்தியா ஆடியது. அதன்பின் இப்போதுதான் இந்தியா செமி பைனல் சென்றுள்ளது.

தங்கம்

தங்கம்

இடையில் ரஷ்யாவில் 1980ல் ஒலிம்பிக் நடைபெற்றது. இதில் இந்திய ஹாக்கி அணி தங்கம் வென்றது. ஆனால் அப்போது குழு போட்டிகளில் எடுக்கப்பட்ட புள்ளிகளை வைத்தே நேரடியாக தங்கத்திற்கான போட்டி நடந்தது. அதோடு ரஷ்யாவின் ஆப்கானிஸ்தான் ஆக்கிரமிப்பு காரணமாக இந்த தொடரை ஆஸ்திரேலியா, அமெரிக்கா உள்ளிட்ட அணிகள் புறக்கணித்தது.

வெறும் 6 அணிகள்

வெறும் 6 அணிகள்

வெறும் 6 அணிகள் மட்டுமே ஆடிய தொடரில் இந்தியா வென்றது. ஆனால் இந்த வருடம் நடக்கும் ஹாக்கி மிகவும் கடினமானது, போட்டி நிறைந்தது. அதோடு ஆஸ்திரேலியா போன்ற அணிகள் மிக சிறப்பாக பார்மில் இருக்கும் போது இந்தியா இப்படி ஒரு வெற்றியை நிகழ்த்தி இருக்கிறது. 40 வருடங்களுக்கு பின் இந்திய ஆண்கள் அணியின் இந்த ஹாக்கி வெற்றி மிக முக்கியமான ஒன்றாக அமைந்துள்ளது. ஜாம்பவான்கள் கோலோச்சும் காலத்தில் இந்தியா இந்த வெற்றியை பதிவு செய்துள்ளது.

பெண்கள் அணி

பெண்கள் அணி

இன்னொரு பக்கம் பெண்கள் அணி முதல்முறை காலிறுதி போட்டிக்கு தகுதி பெற்று தற்போது அரையிறுதிக்கும் சென்றுள்ளது. இதற்கு முன் இப்படி ஒரு வெற்றியை இந்திய பெண்கள் அணி பெற்றதே இல்லை. மூன்று போட்டிகளில் வரிசையாக தோல்வி அடைத்துவிட்டு, அதன்பின் அயர்லாந்து, தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்திய பெண்கள் அணி காலிறுதி வந்தது.

கோப்பை

கோப்பை

அதன்பின் தற்போது ஆஸ்திரேலியாவை வீழ்த்திவிட்டு அரையிறுதிக்கு இந்திய பெண்கள் அணி தகுதி பெற்றுள்ளது. இரண்டு அணிகளும் இப்படி ஒன்றாக செமி பைனல் சென்றது இல்லை. அதிலும் ஆஸ்திரேலியாவை இந்தியா வீழ்த்தும் என்பதால் கனவில் கூட நினைக்க முடியாத ஒன்று.

நம்பிக்கை

நம்பிக்கை

முக்கியமாக இவர்கள் மீது பெரிதாக இந்திய ரசிகர்களே நம்பிக்கை வைக்காத நிலையில்தான் இரண்டு அணிகளும் வெற்றியை பதிவு செய்துள்ளன. இதன் காரணமாகவே ஒலிம்பிக் ஹாக்கி வரலாற்றில் இந்தியாவிற்கு இது முக்கியமான வருடமாகவும், இந்த வெற்றி மிக முக்கியமானதாகவும் பார்க்கப்படுகிறது!

Story first published: Monday, August 2, 2021, 16:31 [IST]
Other articles published on Aug 2, 2021
English summary
Olympics 2020: Why is Indian men and women hockey team qualification to semi final games is important?
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+