Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பயிற்சியாளர் பொறுப்பில் நீடிக்க மாட்டேன்.. இந்திய பெண்கள் ஹாக்கி கோச் சோயர்ட் மாரின் திடீர் முடிவு!

டோக்கியோ: இந்திய பெண்கள் ஹாக்கி அணியின் பயிற்சியாளர் பொறுப்பில் நீடிக்க போவதில்லை என்று சோயர்ட் மாரின் அறிவித்துள்ளார்.

ஒலிம்பிக் 2020 பெண்கள் ஹாக்கி தொடரில் வெண்கல பதக்கத்திற்கான ஆட்டத்தில் இந்தியா தோல்வி அடைந்துள்ளது. கிரேட் பிரிட்டனுக்கு எதிராக 4:3 கோல் கணக்கில் இந்தியா தோல்வி அடைந்துள்ளது.

2020 ஒலிம்பிக்கில் இந்திய பெண்கள் ஹாக்கி அணி மிக சிறப்பாக ஆடி உள்ளது. ஒலிம்பிக் வரலாற்றில் முதல் முறையாக இந்த வருடம்தான் இந்திய பெண்கள் ஹாக்கி அணி செமி பைனலுக்கு சென்றது. இந்த முறை பதக்கம் எதையும் வெல்லவில்லை என்றாலும் மிக சிறப்பாக ஆட்டத்தை பெண்கள் அணி வெளிப்படுத்தியது.

பயிற்சி

பயிற்சி

இந்திய பெண்கள் அணியின் இந்த வளர்ச்சிக்கு பயிற்சியாளர் சோயர்ட் மாரின் மிக முக்கிய காரணம். ஹாலந்து நாட்டை சேர்ந்த இவர் கொடுத்த புது விதமான பயிற்சி காரணமாகவே இந்திய பெண்கள் அணி புதிய உயரம் தொட்டது. அதுவரை சர்வதேச தரத்தில் பயிற்சி கிடைக்காமல் கஷ்டப்பட்டு வந்த இந்த பெண்கள் அணிக்கு சோயர்ட் மாரின்தான் புதிய ரத்தம் பாய்ச்சியது.

நீடிக்க மாட்டேன்

நீடிக்க மாட்டேன்

இந்த நிலையில் இந்திய பெண்கள் ஹாக்கி அணியின் பயிற்சியாளர் பொறுப்பில் நீடிக்க போவதில்லை என்று சோயர்ட் மாரின் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில், இந்திய பெண்கள் ஹாக்கி அணியின் கோச் காண்டிராக்ட் முடிந்துவிட்டது. இதை நான் நீடிக்க போவதில்லை. பதவியில் நீடிக்க மாட்டேன்.

பேட்டி

பேட்டி

இதுதான் என்னுடைய கடைசி சீரிஸ், இதுதான் என்னுடைய கடைசி தொடர். 4 வருடமாக நான் இங்கே இருந்துவிட்டேன். இனியும் இதில் நீடிக்க நினைக்கவில்லை. இந்திய பெண்கள் அணி எதிர்காலத்தில் வெற்றிகளை கண்டிப்பாக குவிக்கும். என்னுடைய குடும்பத்தோடு இந்திய அணியின் போட்டிகளை பார்ப்பேன்.

கடைசி சீரிஸ்

கடைசி சீரிஸ்

வாழ்க்கையில் எனக்கு ஒரு விஷயம் முக்கியம். அது என் குடும்பம். நான் அவர்களை பிரிந்து நீண்ட நாட்கள் இருந்துவிட்டேன். இனி அவர்களுடன் நேரம் செலவிட விரும்புகிறேன். இந்தியாவில் இருந்த காலத்திற்கும், பயிற்சியாளராக இருந்த காலத்திற்கும் நான் மிகுந்த நன்றியோடு இருக்கிறேன். இந்திய வீராங்கனைகள் மிகவும் திறமை வாய்ந்தவர்கள்.

குடும்பம்

குடும்பம்

இன்னொரு பயிற்சியாளருக்கு கீழ் இவர்கள் நன்றாக ஆடுவார்கள் என்று நம்புகிறேன். இந்திய வீராங்கனைகள் எல்லோருக்கும் என்னுடடிய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்று சோயர்ட் மாரின் கூறியுள்ளார். இந்தியா பெண்கள் அணியின் மிக சிறந்த கோச்களில் ஒருவரான சோயர்ட் மாரின் இப்படி திடீரென கோச் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Story first published: Friday, August 6, 2021, 21:00 [IST]
Other articles published on Aug 6, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+