For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

காதல், அன்பு, வெகுளி, கண்ணீர், விடுதலை.. உணர்வுகளால் நிறைந்த ஒலிம்பிக்ஸ் 2024.. தரமான 5 சம்பவங்கள்!

பாரிஸ்: பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் சர்வதேச அளவில் ஏராளமான போட்டிகளில் பங்கேற்ற ஆயிரக்கணக்கான வீரர்கள், வீராங்கனைகள் மறக்க முடியாத உணர்வுகளை ரசிகர்களுக்கு கடத்தியுள்ளனர். அதில் மிகச்சிறந்த 5 சம்பவங்கள் குறித்து பார்க்கலாம்.

ஒலிம்பிக் தொடரின் ஜிம்னாஸ்டிக் விளையாட்டில் சீனாவைச் சேர்ந்த 18 வயதாகும் யாகின் சோ வெள்ளிப் பதக்கம் வென்று சாதித்தார். இந்த பதக்கத்தை அரங்கேறி பெற்ற போது, தங்கம் மற்றும் வெண்கலப் பதக்கத்தை வென்ற இத்தாலி வீராங்கனைகள் இருவரும் தங்களின் பதக்கத்தை கடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அதனை பார்த்த சீனாவின் யாகின் சோ, தானும் பதக்கத்தை கடிக்க வேண்டும் போல் என்று நினைத்து பதக்கத்தை கடித்தார். வெகுளியுடன் யாகின் சோ பதக்கத்தை கடித்தது சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகியது.

Olympics 2024 Paris Olympics 2024 Vinesh Phogat 2024 2024

தொடர்ந்து மகளிர் பேட்மிண்டன் கலப்பு இரட்டையர் பிரிவில் ஹுவாங் யா கியோங் தங்கப் பதக்கம் வென்றார். இவர் பதக்கத்தை கைப்பற்றிய பின் மகிழ்ச்சியுடன் நடந்து வந்த போது, அவரின் நண்பரும், டோக்கிய ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற வீரருமான லியூ யுச்சென் பூங்கொத்து ஒன்றை கொடுத்து மோதிரத்துடன் காதலை வெளிப்படுத்தினார். ரசிகர்களுக்கு முன் சற்றும் எதிர்பார்க்காத ஹுவாங் யா கியோங் ஆனந்த கண்ணீருடன் காதலை ஏற்றுக் கொண்ட தருணம் உலகம் முழுவதும் ட்ரெண்டாகியது.

Olympics 2024 Paris Olympics 2024 Vinesh Phogat 2024 2024

பின்னர் நெதர்லாந்து வீராங்கனை ஷரோன் வான் 10 கிமீ ஒலிம்பிக் மாரத்தான் நீச்சல் போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்தார். அப்போது மிகவும் எமோஷனலாக இருந்த ஷரோன், இந்த ஒலிம்பிக் தொடரில் பெற்ற வெற்றியை 2 மாதங்களுக்கு முன் மறைந்த தனது செல்ல நாய்-க்கு அர்ப்பணிப்பதாக அறிவித்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. நாய் நினைவாக அவரது கைகளில் டாட்டூ ஒன்றை காட்டியதும் உலகம் முழுவதும் அவரை பிரபலமாக்கியது.

Olympics 2024 Paris Olympics 2024 Vinesh Phogat 2024 2024

அதேபோல் துப்பாக்கிச் சுடுதல் 10 மீ ஏர் பிஸ்டல் கலப்பு இரட்டையர் பிரிவுக்கான போட்டியில் துருக்கி அணி வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றியது. துருக்கி வீரர் யூசுப் டிகெக் துப்பாக்கிச் சுடுதலில் கவனத்தை சிதறடிக்காமல் இருப்பதற்கு பயன்படுத்தும் எந்த டெக்னாலஜியையும் பயன்படுத்தாமல், வெறும் கண்ணாடியுடன் கைகளை தனது பேண்ட் பாக்கெட்டில் விட்டுக் கொண்டு அசத்தலாக செயல்பட்டார். யூசுப் டிகெக்கின் செயல்பாடுகள் மூலமாக பல்வேறு மீம்களும் உருவாகி பட்டையை கிளப்பியது.

Olympics 2024 Paris Olympics 2024 Vinesh Phogat 2024 2024

அதேபோல் அகதியில் அணியில் இடம்பெற்றிருந்த ஆஃப்கானிஸ்தானைச் சேர்ந்த மனிஷா தலாஷ் பிரேக் டான்ஸ் பிரிவில் பங்கேற்றார். இவர் தனது நடனத்தின் மூலம் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியதோடு, அரசியல் மூலம் அதிர்வுகளையும் ஏற்படுத்தினார். காலிறுதிக்கு முந்தைய சுற்றின் போது மனிஷா தலாஷ், Free Afghan women என்ற வாசகம் இடம்பெற்ற அங்கியையும் வீடியோ முன் காட்டினார். இது உலகம் முழுவதும் ஆஃப்கானிஸ்தானில் உள்ள மகளிரின் உரிமைகள் மற்றும் சுதந்திரம் குறித்த விவாதத்தை ஏற்படுத்தியது.

Story first published: Thursday, August 15, 2024, 18:28 [IST]
Other articles published on Aug 15, 2024
English summary
Olympics 2024: 5 Best Emotional and Controversy Moments of Olympics 2024 at Paris
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+