For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஒலிம்பிக்- ஆணாக இருந்து மகளிர், ஆடவர் என இரு பிரிவிலும் பதக்கம்.. பிரிட்டன் வீரர் வரலாற்று சாதனை

பாரிஸ் : பாரிஸ் ஒலிம்பிக்கில் மகளிர் குத்துச்சண்டை பிரிவில் அல்ஜெரீய வீராங்கனை இமான் கலிப் பதக்கம் வெல்லும் வாய்ப்பை உறுதி செய்து இருக்கிறார். இந்த நிலையில் அவர் பெண்ணே கிடையாது என்றும் ஆண் டிஎன்ஏ இருக்கும் நபர் என்றும் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.

ஆனால் அவர் பெண்ணாக பிறந்தவர் என்றும் பெண்ணாகவே வளர்ந்து இருக்கிறார் என்றும் பெண் உறுப்புகள் அவருக்கு இருக்கிறது என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் பிரிட்டன் வீரர் ஒருவர் ஆணாக இருந்தும் ஆண்கள் பிரிவிலும் மகளிர் பிரிவிலும் என இரண்டு ஒலிம்பிக்கில் பதக்கம் வென்று சாதனை படைத்திருக்கிறார்.

Olympics 2024 henry fieldmen iman khelif biological men 2024

ஒரு ஆண் எப்படி மகளிர் பிரிவில் விளையாடலாம் என பலரும் கேள்வி எழுப்பியுள்ள நிலையில். இவர் ஆணாகவே இருந்து ஆடவர் பிரிவிலும், மகளிர் பிரிவிலும் பதக்கம் வென்றுள்ளார். அது எப்படி என்று தற்போது பார்க்கலாம். பிரிட்டனை சேர்ந்த படகு பந்தய வீரர் ஹென்றி பீல்ட்மேன், மகளிர் பிரிவில் படகு ஓட்டும் பந்தயத்தில் பங்கேற்று வெண்கல பதக்கம் வென்று இருக்கிறார்.

இதே ஹென்றி பீல்மேன் ஆடவர் பிரிவிலும் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற டோக்கியோ ஒலிம்பிக் போட்டியிலும் பங்கேற்று வெண்கலம் வென்று இருக்கிறார்.இது எப்படி சாத்தியம் என்று உங்களுக்கு சந்தேகம் வரலாம். அதாவது படகு பந்தயத்தில் பல்வேறு பிரிவுகள் இருக்கிறது. இதில் மகளிருக்கான பிரிவில் ஒரே படகில் எட்டு பேர் அமர்ந்து பந்தயத்தில் ஈடுபடும் ஒரு போட்டி இருக்கிறது.

olympics 2024 henry fieldmen iman khelif biological men 2024


இந்த எட்டு பேரை வழிநடத்த ஒரு நபர் நியமிக்கப்படுவார். அவரை ஆங்கிலத்தில் காக்ஸ் என்று கூறுவார்கள். கடந்த 2016 ஆம் ஆண்டு ரியோ ஒலிம்பிக்கில் இவ்வாறு காக்ஸ் ஆக பயன்படுத்தப்படும் நபர்கள் எந்த பாலினத்தை சேர்ந்தவராக கூட இருக்கலாம் என்று விதி மாற்றப்பட்டது. அதன்படி ஹென்றி ஃபீல்ட்மேன் இன்று மகளிர் பிரிவில் களமிறங்கி வெண்கலம் வென்று இருக்கிறார். இதன் மூலம் ஆணாக இருந்து இரண்டு பிரிவிலும் பதக்கம் வென்ற முதல் வீரர் என்ற சாதனையை ஃபீல்ட்மேன் படைத்திருக்கிறார்.

Story first published: Sunday, August 4, 2024, 17:43 [IST]
Other articles published on Aug 4, 2024
English summary
olympics 2024 - Britain Rower Henry Fieldman won medal in women Rowing race ஒலிம்பிக்- ஆணாக இருந்து மகளிர், ஆடவர் என இரு பிரிவிலும் பதக்கம்.. பிரிட்டன் வீரர் வரலாற்று சாதனை
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+