ஒலிம்பிக் - ஐயோ போச்சே! போல் வால்ட் பிரிவில் நடந்த காமெடி.. கலகல வீடியோ
பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் போல் வால்ட் பிரிவில் வீரர் ஒருவர் குச்சியை ஊண்டி கம்பியை தாண்டும் போது எதிர்பாராத விதமாக வந்த திசையிலே கீழே விழுந்த வீடியோ வா இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
ஒலிம்பிக்கில் தெக்கத்தலான் என்ற ஒரு விளையாட்டு இருக்கிறது. அதாவது பத்து விளையாட்டு பிரிவுகளை சேர்த்து ,அதில் யார் அதிக புள்ளிகள் பெறுவார்களோ அவர்கள்தான் வெற்றியாளர்கள் என அறிவிக்கப்படுவார்கள். இதில் 100 மீட்டர் ஓட்டம்,ஈட்டி எறிதல், போல் வால்ட், உயரம் தாண்டுதல் என பத்து விளையாட்டு பிரிவுகள் இருக்கும்.

இந்த பத்து பிரிவுகளில் வீரர் வீராங்கனைகள் பங்கேற்று அதில் யார் அதிகப் புள்ளிகளை பெறுவார்களோ, அவர்கள் வெற்றியாளர்கள் என அறிவிக்கப்படுவார்கள். இந்த போட்டி சுமார் இரண்டு நாட்கள் வரை நடைபெறும். இந்த நிலையில் தெக்கத்தலான் போட்டியில் போல் வால்ட் பிரிவில் ஒரு காமெடி சம்பவம் நடைபெற்றிருக்கிறது.
எஸ்டோனியா நாட்டைச் சேர்ந்த கெரல் தில்கா என்ற வீரர் குச்சியை வைத்து தாண்டும் போது எதிர்பாராத விதமாக வந்த திசையில் கீழே விழுந்தார். பொதுவாக இப்படி சம்பவங்கள் நடைபெறவே நடைபெறாது. ஆனால் கெரல் தில்கா தவறான கோணத்தில் கணித்து ஓடி வந்து குச்சியை ஊண்டியதால் அவரால் கம்பியை தாண்டாமல் வந்த திசையிலே கீழே விழுந்து விட்டார்.
எனினும் இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரல் ஆகி வருகிறது. தெக்கத்தலான் விளையாட்டில் மொத்தம் 20 வீரர்கள் பங்கேற்றனர். இதில் கெரல் தில்கா 11-வது இடத்தை பிடித்து பதக்கம் வெல்லும் வாய்ப்பை இழந்தார். இதனிடையே போல் வால்ட் பிரிவில் ஒரு புதிய சூப்பர் ஸ்டார் உருவெடுத்திருக்கிறார். ஸ்வீடனைச் சென்ற துப்லாண்டிஸ் என்ற வீரர் 6.25 மீட்டர் உயரம் தாண்டி தங்கப்பதக்கத்தை இரண்டாவது முறையாக கைப்பற்றி இருக்கிறார். அது மட்டும் இல்லாமல் இது உலக அளவில் புதிய சாதனையாக கருதப்படுகிறது .


Click it and Unblock the Notifications