For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

Olympics: 100 மீ ரேஸ்.. 10 நொடிகளுக்குள் பாய்ந்த 8 வீரர்கள்.. ஒலிம்பிக் வரலாற்றில் இதுவே முதல் முறை!

பாரிஸ்: ஒலிம்பிக் தொடரில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் அமெரிக்காவின் நோவா லைல்ஸ் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். உலக சாம்பியனான நோவா லைல்ஸ் ஒலிம்பிக் பதக்கத்தை வென்றதன் மூலமாக உலகின் வேகமான ஓட்டப் பந்தய வீரர் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார்.

முதல் 30 மீட்டர் தூரம் நோவா லைல்ஸ் பின் தங்கினாலும், அடுத்த 70 மீட்டர் தூரத்தில் உச்சக்கட்ட திறமையை வெளிப்படுத்தி நோவா லைல்ஸ் ஓடியதை இன்னும் சில ஆண்டுகள் உலகம் தொடர்ந்து பேசப்பட்டு கொண்டே இருக்கும். 100 மீட்டர் நூரத்தை 9.79 நொடிகளில் ஓடி நோவா லைல்ஸ் தங்கத்தை தட்டிச் சென்றுள்ளார்.

Olympics 2024 Paris Olympics 2024 Noah Lyles 2024 2024

இவருக்கு பின் வந்த கிஷேன் தாம்சனும் 9.79 நொடிகளில் வந்திருந்தாலும், நோவா லைல்ஸ் - தாம்சன் இடையில் 0.784 மைக்ரோ நொடிகள் வித்தியாசம் இருந்துள்ளது. இதன்பின் 3வது இடத்தை அமெரிக்காவின் கெர்லி பிடித்து வெண்கலப் பதக்கத்தை தட்டிச் சென்றுள்ளார். அதுமட்டுமல்லாமல் இந்த 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் மற்றொரு முக்கிய சாதனையும் படைக்கப்பட்டுள்ளது.

என்னவென்றால் 100 மீட்டர் ரேஸில் பங்கேற்ற 8 வீரர்களும் 10 நொடிகளுக்குள் தங்களின் பந்தய தூரத்தை எட்டியுள்ளனர். 4வது இடத்தில் வந்த தென்னாப்பிரிக்காவின் அகானி 9.82 நொடிகளிலும், இத்தாலியின் ஜேகப்ஸ் 9.85 நொடிகளிலும், போட்ஸ்வானாவின் டிபோகோ 9.86 நொடிகளிலும், அமெரிக்காவின் கென்னத் 9.88 நொடிகளிலும், ஜமைக்காவின் செவில் 9.91 நொடிகளிலும் பந்தயத்தை முடித்துள்ளனர்.

ஒலிம்பிக் வரலாற்றில் இப்படி நடப்பது இதுவே முதல்முறையாகும். வெற்றிக்கு, தோல்விக்கும் இடையிலான இடைவெளி என்பது மைக்ரோ நொடிகளால் முடிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் 100 மீட்டர் ஓட்டப்பந்தயம் நடந்ததை விடவும், அதில் வெற்றி பெற்றவர்கள் யார் என்பதை முடிவு செய்வதற்கு நடுவர்கள் அதிக நேரம் எடுத்து கொண்டது ரசிகர்களிடையே உற்சாகமான விவாதமாக மாறியுள்ளது.

Story first published: Monday, August 5, 2024, 12:36 [IST]
Other articles published on Aug 5, 2024
English summary
Olympics 2024: For the first time in history 8 Men have finished the 100 M race within 10 seconds in Olympics
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+