For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஒலிம்பிக் - தெருவில் இழுத்து வரப்பட்ட வினேஷ் போகட்.. காலில் அறுவை சிகிச்சை.. தடைகளை உடைத்து சாதனை

Vinesh Phogat: பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் மல்யுத்தம் 50 கிலோ எடை பிரிவில் இந்திய வீராங்கனை வினேஷ் போகட் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று மாபெரும் சாதனையை படைத்திருக்கிறார். 29 வயது வீராங்கனை வினேஷ் போகட் தன் வாழ்க்கையில் பல்வேறு தடைகளை தகர்த்து எறிந்து இருக்கிறார்.

ஹரியானாவை சேர்ந்த வினேஷ் போகட் ஆசிய விளையாட்டுப் போட்டிகள், காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் தங்கப்பதக்கம் வென்ற முதல் இந்திய மல்யுத்த வீராங்கனை என்ற சாதனை படைத்திருக்கிறார்.

Olympics 2024 vinesh phogat Wrestling 2024


மேலும் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் பதக்கங்கள் வென்ற முதல் வீராங்கனை என்ற பெருமையும் வினேஷ் போகட்டுக்கு சேரும். இப்படி நாட்டுக்காக பல சாதனைகளை படைத்த வினேஷ் போகட் கடந்த 2023 ஆம் ஆண்டு இந்திய மல்யுத்த சமயநலத்தின் தலைவராக இருந்த தற்போதைய பாஜக எம்பி பிரிஜ் புஷ்ன் சிங்குக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் தீவிரமாக கலந்து கொண்டார்.

மல்யுத்த போட்டிக்கு வரும் வீராங்கனைகளை பிரிஜ் பூஷன் அத்துமீறி நடப்பதாக கூறி வீராங்கனைகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் இது குறித்து எந்த ஒரு நடவடிக்கையும் போலீசார் எடுக்காததால் வினேஷ் போகட் சுமார் ஒரு மாதம் வரை போராட்டத்தை தீவிர படுத்தினார். தாம் வாங்கிய பதக்கங்களை கங்கை ஆற்றில் கரைக்கும் அளவுக்கு வினேஷ் போகட் சென்றார்.

Olympics 2024 vinesh phogat Wrestling 2024


போராட்டத்தில் ஈடுபட்ட வினேஷ் போகட்டை அப்புறப்படுத்த போலீசார் அவரை இழுத்துச் சென்றனர். மேலும் பாஜக ஆதரவாளர்கள் பலரும் வினேஷ் போகட்டுக்கு எதிராக கருத்துக்களை தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் வினேஷ் போகட் காலில் காயம் ஏற்பட்டது. இதற்கான அறுவை சிகிச்சை இதே ஆகஸ்ட் மாதம் 2023 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்டது.

அதன் பிறகு வினேஷ் போகட் ஒலிம்பிக் போட்டியில் தகுதி பெற்றார். தன்னுடைய முதல் சுற்றுப்போட்டியில் இதுவரை சர்வதேச போட்டியில் 82க்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் எந்த ஒரு தோல்வியும் தழுவாத ஜப்பான் வீராங்கனை சுசாக்கியே எதிர்கொண்டார். யாருமே எதிர்பாராத வகையில் மூன்றுக்கு இரண்டு என்ற கணக்கில் வெற்றி பெற்று வினேஷ் போகட் அடுத்த அடுத்தடுத்த சுற்றில் வென்று தற்போது இறுதிப் போட்டிக்கு வந்திருக்கிறார்.

இதன் மூலம் மல்யுத்த ஒலிம்பிக் போட்டியில் இறுதிப் போட்டிக்கு வந்த முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமை அவருக்கு கிடைத்திருக்கிறது. தன் வாழ்வில் பல தடைகள் மன அழுத்தம் போன்ற பல பிரச்சனைகளையும் உடைத்து எறிந்து தற்போது வினேஷ் போகட் பதக்கத்தை உறுதி செய்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Tuesday, August 6, 2024, 23:59 [IST]
Other articles published on Aug 6, 2024
English summary
Olympics 2024 - How Vinesh Phogat breaks the obstacles and achieved in olympics ஒலிம்பிக் - தெருவில் இழுத்து வரப்பட்ட வினேஷ் போகட்.. காலில் அறுவை சிகிச்சை.. தடைகளை உடைத்து சாதனை
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+