Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தங்கம் வென்ற இமான் கலீஃப்.. ஒலிம்பிக் பதக்கத்தை கைப்பற்றிய முதல் அல்ஜீரியா பெண்.. தரமான பதிலடி!

பாரிஸ்: ஒலிம்பிக் மகளிர் குத்துச்சண்டை 66 கிலோ எடைப் பிரிவில் அல்ஜீரியா வீராங்கனை இமான் கலீஃப் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். சில வாரங்களுக்கு முன் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இத்தாலி வீராங்கனை ஏஞ்சலா கரிணியை எதிர்த்து இமான் கலீஃப் மோதினார். இந்தப் போட்டி தொடங்கிய 46 வினாடிகளிலேயே இத்தாலி வீராங்கனை கரிணி போட்டியை நிறுத்தினார்.

இமான் கலீஃப் ஒரு பெண் கிடையாது, அவருடன் சண்டையிட முடியாது என்றும் பகிரங்கமாக குற்றம்சாட்டினார். இதனால் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இதன் காரணமாக இமான் கலீஃப்-க்கு எதிராக பல்வேறு தரப்பினரும் கருத்து கூற தொடங்கினர். இதனிடையே இமான் கலீஃப் சில முறை பாலின சர்ச்சையில் சிக்கியுள்ளதும் தெரிய வந்தது.

olympics 2024 Algeria 2024

இருந்தாலும் ஒலிம்பிக் நிர்வாகம் உரிய அனுமதி கொடுத்ததால், இமான் கலீஃப் போட்டிகளில் பங்கேற்பதற்கு எந்த தடையும் இல்லை. இதனைத் தொடர்ந்து அரையிறுதி சுற்றில் அபாரமாக விளையாடி பதக்கத்தை உறுதி செய்த அவர், இறுதிப்போட்டியில் சீன வீராங்கனை யாங் லியூவை எதிர்கொண்டார்.

தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தி வந்த இமான் கலீஃப், 5-0 என்ற புள்ளிகள் கணக்கில் தங்கப் பதக்கத்தை கைப்பற்றி சாதனை படைத்துள்ளார். இதன் மூலமாக ஒலிம்பிக் தொடரில் தங்கப்பதக்கம் வென்ற முதல் அல்ஜீரியா வீராங்கனை என்ற சாதனையை இமான் கலீஃப் படைத்து விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

சில நாட்களுக்கு முன் இமான் கலீஃப் "பெண் அல்ல ஆண்" என்று கடுமையான விமர்சனங்களை சந்தித்தார். அமெரிக்காவின் தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள் என்று பல்வேறு நாடுகளிலும் இமான் கலீஃப்-க்கு எதிர்ப்புகள் கிளம்பின. அத்தனை எதிர்ப்புகள் இருந்த போதும் மனதளவில் சோர்வடையாமல் இமான் கலீஃப் தங்கம் வென்றிருப்பது ரசிகர்களிடையே பாராட்டுகளை பெற்று வருகிறது.

Story first published: Saturday, August 10, 2024, 11:12 [IST]
Other articles published on Aug 10, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+