For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

Olympics 2024 - ஒவ்வொரு ஒலிம்பிக்கிலும் இந்தியா பதக்கப் பட்டியலில் எந்த இடம் பிடித்தது தெரியுமா?

பாரிஸ் : ஒலிம்பிக் வரலாற்றில் இந்திய அணி இதுவரை தங்களுடைய முழு திறனை வெளிப்படுத்தவில்லை என்று தான் சொல்ல வேண்டும். என்ன திறமை இல்லை இந்த திருநாட்டில் என்ற பாடல் வரிக்கு ஏற்பது போல் இந்தியாவில் பல திறமைகள் கொட்டி கிடைக்கின்றது. ஆனால் போதிய வாய்ப்பு பயிற்சி ஆகிய விஷயங்கள் கிடைக்காததால் தான் இந்தியா ஒலிம்பிக்கில் பின்தங்கி இருக்கிறது.

எனினும் இந்திய அணி ஒலிம்பிக்கில் சுமார் 100 ஆண்டுகளாக கலந்து கொண்டு இருக்கிறது. ஒலிம்பிக்கை பொறுத்தவரை பதக்கம் வெல்வதை விட கலந்து கொள்வது மிகவும் முக்கியம் ஆகும். இந்த நிலையில் ஒவ்வொரு ஒலிம்பிக் தொடரிலும் பதக்கப் பட்டியலில் இந்தியா எந்த இடத்தை பிடித்திருக்கிறது என்பதை தற்போது பார்க்கலாம்.

Paris Olympics 2024 2024 Medal tally

1900 ஒலிம்பிக்கில் இந்தியா பதக்கப் பட்டியலில் இரண்டு பதக்கங்களுடன் 17வது இடத்தை பிடித்தது அதன் பிறகு மூன்று ஒலிம்பிக்கில் இந்தியா பங்கு பெறாமல் 1920, 1924 ஆகிய ஒலிம்பிக்கில் எந்த பதக்கமும் வெல்லவில்லை. 1928 ஒலிம்பிக்கில் ஒரு பதக்கத்துடன் இந்தியா 23வது இடத்தை பிடித்தது. 1932 ஒலிம்பிக்கில் இந்தியா ஒரு பதக்கத்துடன் 19-வது இடத்தை பிடித்தது.

1936 இந்தியா ஒரு பதக்கத்துடன் 20-வது இடத்திலும், 1948 இல் இந்தியா ஒரு பதக்கத்துடன் 22-வது இடத்தில் பிடித்தது. இதன்பிறகு 1952 ல் நடைபெற்ற ஒலிம்பிக்கில் இந்தியா இரண்டு பதக்கங்களுடன் 26வது இடத்தை பிடித்தது. 1956 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக்கில் இந்தியா ஒரு பதக்கம் வென்று 24 ஆம் இடத்தை பிடித்தது. 1960 இல் நடைபெற்ற ஒலிம்பிக்கில் இந்தியா ஒரு பதக்கம் என்று 32வது இடத்தை பிடித்தது.

1964ஆம் ஆண்டு நடைபெற்ற டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியா ஒரு பதக்கத்துடன் 24-ஆம் இடத்தை நிறைவு செய்தது .1968 ஒலிம்பிக்கில் இந்தியா ஒரு பதக்கத்துடன் 42வது இடத்திலும், 1972 ஒலிம்பிக்கில் ஒரு பதக்கத்துடன் 43வது இடத்தையும் இந்தியா பிடித்தது. அதன் பிறகு 1976 ஒலிம்பிக்கில் பதக்கத்தை இந்தியா வெல்ல முடியவில்லை. எனினும் 1980 மாஸ்கோவில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் இந்தியா ஒரு தங்கம் வென்று 23 வது இடத்தை பிடித்தது. 1984, 88, 92 ஆகிய மூன்று ஒலிம்பிக்கிலும் இந்தியா பதக்கத்தை வெல்லவில்லை.

இதனை அடுத்து 1996 ஆம் ஆண்டு இந்தியா ஒரு பதக்கம் வென்று 71 வது இடத்தை பிடித்தது. இதேபோன்று 2000ம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் ஒரு பதக்கம் வென்று 71 வது இடத்தையும் நிறைவு செய்தது. 2004 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் ஒரு பதக்கத்துடன் 65 ஆவது இடத்திலும்,2000ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் மூன்று பதக்கத்துடன் 50வது இடத்திலும் இந்தியா நிறைவு செய்தது.

2012 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக்கில் ஆறு பதக்கத்துடன் 55வது இடத்திலும், 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக்கில் இரண்டு பதக்கத்துடன் 67-வது இடத்திலும் 2020 ஆம் ஆண்டு டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் 7 பதக்கத்துடன் 48வது இடத்திலும் இந்தியா பிடித்தது. இந்தியா இதுவரை முதல் 10 இடங்களுக்குள் பதக்கப்பட்டியலில் இதுவரை செல்லவில்லை. எனவே இந்த ஒலிம்பிக்கில் முதல் முறையாக அது நடைபெறும் என எதிர்பார்க்கலாம்.

Story first published: Wednesday, July 24, 2024, 10:01 [IST]
Other articles published on Jul 24, 2024
English summary
Olympics 2024 - India Position in Medal tally in Every olympics Full details are here - ஒவ்வொரு ஒலிம்பிக்கிலும் இந்தியா பதக்கப் பட்டியலில் எந்த இடம் பிடித்தது தெரியுமா?
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+