பாரிஸ்: பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் ஆகஸ்ட் 2ஆம் தேதி இந்திய வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்கும் போட்டிகள் குறித்த விவரங்களை பார்க்கலாம். இதுவரை இந்தியா சார்பாக 3 வெண்கலப் பதக்கங்கள் வெல்லப்பட்டுள்ள சூழலில், 4வது பதக்கத்தை வெல்வதற்கான வாய்ப்புகள் அமைந்துள்ளது.
2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் ஆகஸ்ட் 2ஆம் தேதி இந்திய வீரர்கள் பங்கேற்க உள்ள போட்டிகள்:

9.40 மணி: மகளிருக்கான 5000 மீ தடகளம்: அன்கிதா தியானி, பருல் சவுத்ரி
11.40 மணி : ஆடவருக்கான குண்டு எறிதல் குரூப் போட்டி - தஜிந்தர்பால் சிங் தூர்
12:30 மணி: ஆடவருக்கான கோல்ஃப் - சுபங்கர் சர்மா
12.30 மணி : துப்பாக்கிச்சுடுதல் - மகளிருக்கான 25 மீ பிஸ்டல் தகுதிச்சுற்று - ஈஷா சிங்
1.20 மணி : வில்வித்தை கலப்பு இரட்டையர் பிரிவு: இந்தியா vs இந்தோனேஷியா - திராஜ் பொம்மரதேவரா - அன்கிதா vs ஆரிஃப் - தியானந்தா
1:48 மணி : ஆடவருக்கான துடுப்புப் படகு இறுதிப்போட்டி : பல்ராஜ் பன்வார்
2.12 மணி: ஜூடோ - மகளிருக்கான 78 கிலோ எடைப் பிரிவு காலிறுதிக்கு முந்தைய சுற்றுப்போட்டி - இந்தியாவின் துலிகா மான் vs கியூபாவின் ஓர்டிஸ்
மாலை 4.30 மணி : ஹாக்கி : இந்தியா vs ஆஸ்திரேலியா
மாலை 6.30 மணி : பேட்மிண்டன் ஆடவர் ஒற்றையர் பிரிவுக்கான காலிறுதிப் போட்டி : லக்சயா சென் vs டியான் சென்