Olympics 2024 : பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் துப்பாக்கிச் சுடுதல் பிரிவில் இந்திய வீரர் ஸ்வப்னில் குசாலே வெண்கல பதக்கம் வென்று இருக்கிறார். இது இந்தியா வெல்லும் மூன்றாவது பதக்கமாகும். இதுவரை இந்த தொடரில் இந்தியா பெற்ற மூன்று பதக்கமும் துப்பாக்கி சுடுதலில் இருந்து கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
50 மீட்டர் ரைப்பில் 3 பொசிஷன் பிரிவில் ஸ்வப்னில் தகுதி சுற்றில் ஏழாவது இடத்தை பிடித்திருந்தார். இதன் மூலம் அவர் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார்.த்ரீ பொசிஷன் என்பது மூன்று விதமான நிலையில் இருந்து இலக்கை நோக்கி துப்பாக்கி சூடும் போட்டியாகும்.

படுத்து சுடுவது, ஒரு முட்டியில் அமர்ந்து சுடுவது, எழுந்து நின்று சுடுவது என்ற மூன்று நிலையில் போட்டி பிரிவுகள் நடத்தப்படும். இதில் முதலில் ஆறாவது இடத்தில் இருந்த ஸ்வப்னில் அடுத்தடுத்து புள்ளிகளை பெற்று முன்னேற்றம் கண்டார். ஒரு நிலையில் மூன்றாவது இடத்திற்கு சென்ற வகுப்பில் தொடர்ந்து பத்து புள்ளி இரண்டு புள்ளிகளுக்கு மேல் இலக்கை நோக்கி துப்பாக்கி சுட்டு புள்ளிகளை பெற்றார்.
இதன் மூலம் ஸ்வப்னில் குசாலே வெண்கல பதக்கம் கிடைத்திருக்கிறது. இதன் மூலம் இந்திய அணி மூன்று பதக்கங்களை துப்பாக்கி சுடுதல் பிரிவில் இருந்து மட்டுமே பெற்றிருக்கிறது. 29 வயதான ஸ்வப்னில் சிங் மகாராஷ்டிரா மாநிலம் கோலாப்பூர் பகுதியை சேர்ந்தவர். கடந்த 2015 ஆம் ஆண்டு இவருக்கு இந்திய ரயில்வே துறையில் டிக்கெட் பரிசோதராக பணி கிடைத்தது.
தோனியை போலவே டிக்கெட் பரிசோதராகவும், துப்பாக்கி சுடுதல் பிரிவிலும் பயிற்சி பெற்ற வந்த ஸ்வப்னில் குசேலவுக்கு தோனி தான் மிகவும் பிடித்த நபர். பல ஆண்டுகளாக துப்பாக்கி சுடுதல் பிரிவில் பயிற்சி பெற்று கொண்ட ஸ்வாப்னில் தற்போது ஒலிம்பிக்கில் வெண்கல பதக்கம் வென்று சாதனை படைத்திருக்கிறார். மனு பாக்கர் வென்ற இரண்டு வெண்கல பதக்கம் தமக்கு உத்வேகத்தை கொடுத்ததாகவும் ஸ்வாப்னில் கூறியிருக்கிறார்.