Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பாரிஸை சுற்றி பார்க்கவா வந்தீங்க.. நீச்சல் வீராங்கனையை வீட்டுக்கு அனுப்பிய பராகுவே.. வெளிவந்த உண்மை!

பாரிஸ்: பராகுவே நீச்சல் வீராங்கனை லுவானா அலான்சோ ஒழுங்கீன நடவடிக்கை காரணமாகவே வீட்டுக்கு அனுப்பப்பட்டது தெரிய வந்துள்ளது. ஒலிம்பிக் தொடரில் 20 வயதாகும் நிச்சல் வீராங்கனை லுவானா அலான்சோ பராகுவே நாட்டிற்காக மகளிருக்கான 100 மீ பட்டர்ஃபிளை நீச்சல் போட்டியில் கலந்து கொண்டார்.

இந்த போட்டியில் அரையிறுதி வாய்ப்பை 0.24 வினாடிகளில் லுவானா அலான்சோ தவறைவிட்டார். இதன் மூலமாக அவரின் ஒலிம்பிக் பயணம் முடிவுக்கு வந்தது. போட்டிகள் முடிவடைந்தாலும், வீரர்கள் ஒலிம்பிக் தொடர் முடியும் வரை ஒலிம்பிக் கிராமத்தில் தங்குவதற்கு அனுமதியளிக்கப்பட்டது.

Olympics 2024 Paris Olympics 2024 2024 2024

ஆனால் லுவானா அலான்சோவின் அழகு மற்ற வீரர்களின் கவனத்தை திருப்புவதாக இருப்பதால், அவரை நாட்டிற்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியது. இதனால் பராகுவே நாட்டின் விளையாட்டு வீரர்கள் மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. இந்த நிலையில் லுவானா அலான்சோ வீட்டிற்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டதற்கான உண்மை காரணம் வெளி வந்துள்ளது.

லுவானா அலான்சோ நீச்சல் போட்டியில் இருந்து வெளியேறிய நிலையில், உடனடியாக ஓய்வை அறிவித்தார். ஓய்வை அறிவித்ததால், அவர் ஒலிம்பிக் கிராமத்தில் இருந்து வெளியேற அனுமதியளிக்கப்பட்டது. இதன் காரணமாக அவர் பாரிஸின் பல்வேறு பகுதிகளிலும் சுற்றித் திரிந்ததோடு, டிஸ்னிலாண்ட் உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்களில் நேரத்தை செலவிட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

Olympics 2024 Paris Olympics 2024 2024 2024

அதேபோல் பராகுவே நிர்வாகத்தால் அவர் வெளியேற்றப்படவில்லை என்றும், தானாவே வெளியேறியதாகவும் லுவானா அலான்சோவே கூறியிருக்கிறார். அதுமட்டுமல்லாமல் அவர் அமெரிக்காவில் டாலஸில் அரசியல் தொடர்புடைய படிப்பினை படித்து வருகிறார். இதனால் லுவானா அலான்சோவின் ஓய்வு அறிவிப்பு ஒலிம்பிக் தொடருக்கு முன்பாகவே திட்டமிட்ட ஒன்று என்றும் தெரிய வந்துள்ளது.

வருங்காலத்தில் அமெரிக்காவுக்காக நீச்சல் போட்டிகளில் லுவானா அலான்சோ பங்கேற்க திட்டமிட்டு வருவதாகவும் தகவ கிடைத்துள்ளது. இதன் மூலமாக அலான்சோவின் அழகு காரணமாக வீரர்களின் கவனம் சிதறியதாக வெளியான தகவல் உண்மையல்ல என்பது நிரூபணமாகியுள்ளது.

Story first published: Friday, August 9, 2024, 11:54 [IST]
Other articles published on Aug 9, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+