For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

எனக்கு 3 ஆண்டுகளாக வேலை இல்லை.. யாராவது பணி கொடுங்க.. பதக்கம் வென்ற மனு பாக்கரின் பயிற்சியாளர் சோகம்

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக வந்திருக்கும் கௌதம் கம்பீருக்கு ஆண்டுக்கு 12 கோடி ரூபாய் சம்பளம் கிடைக்கிறது என்ற தகவல் வெளியாகி உள்ளது. இந்திய கிரிக்கெட் அணிக்கு மட்டுமல்லாமல் ஐபிஎல் தொடரில் ஏதாவது ஒரு அணியின் பயிற்சியாளராக பணிபுரிந்தாலே அவர்களுடைய வாழ்க்கை வசதி அடைந்துவிடும்.

தன் வாழ்நாள் முழுவதும் பிறகு வேறு எந்த பணிக்கும் செல்லாமல் ஓய்வில் இருக்கலாம். அந்த அளவுக்கு கிரிக்கெட்டில் பணம் பயிற்சியாளர்களுக்கு தற்போது கொட்டி கிடைக்கும். இந்த நிலையில் ஒலிம்பிக்கில் துப்பாக்கி சுடுதல் பிரிவில் மனு பார்க்கர் இரண்டு பதக்கம் வென்று சாதனை படைத்திருக்கிறார்.

Olympics 2024 manu bhaker bronze shooting mixed 2024

இதன் மூலம் 124 ஆண்டு கால இந்திய ஒலிம்பிக் வரலாற்றில் ஒரே தொடரில் இரண்டு பதக்கம் வென்ற வீராங்கனை என்ற சாதனையை அவர் படைத்திருக்கிறார். மனு பாக்கர் இந்த சாதனையை படைத்ததில் மிகவும் முக்கிய பங்கு அவருடைய பயிற்சியாளர் ஜஸ்பல் ராணாவுக்கு சேரும்.

ஜஸ்பல் ராணாவின் கீழ் மனு பாக்கர் தொடர்ந்து பல பதக்கங்களை வென்ற நிலையில் டோக்கியோ ஒலிம்பிக் தொடருக்கு முன்பு இருவருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர். வெறும் கையோடு தூக்கி ஒலிம்பிக்கில் திரும்பினார். இந்த நிலையில் மீண்டும் தமக்கு உதவுமாறு மனுபாக்கர் கேட்டுக் கொண்டதால் ஜஸ்பல் ராணா அவருக்கு துணை நின்றார்.

இந்த நிலையில் மனு பாக்கர் இரண்டு பதக்கங்களை வென்ற பிறகும் தமக்கு மூன்று ஆண்டுகளாக வேலை இல்லை என்ற சோகத்தை கூறியிருக்கிறார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், டோக்கியோ ஒலிம்பிக்கில் நான் மனு பாக்கருடன் பணியாற்றவில்லை. ஆனால் மனுபாக்கர் அப்போது தோல்வி அடைந்ததற்கு அனைவரும் என் மீது கோபப்பட்டார்கள்.

என்னை வில்லன் போல் சித்தரித்தார்கள். தற்போது மனு பாக்கர் வெற்றியடைந்த பிறகு அனைவரும் என் நேர்காணலுக்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள். அதில் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால் இந்த மூன்று ஆண்டுகளாக என் வாழ்க்கையில் நான் பல விஷயங்களை இழந்தனேன். அதையெல்லாம் இவர்கள் மீட்டு தருவார்களா?

நான் பெரிய ஆள் எல்லாம் கிடையாது. மனு பாக்கர் எனக்கு பயிற்சி அளியுங்கள் என்று என்னிடம் உதவி கேட்டார். இந்திய தேசிய துப்பாக்கி சுடுதல் சம்மேளனத்தில் இருந்து எனக்கு யாரும் எந்த சம்பளமும் வழங்குவது கிடையாது. கடந்த மூன்று ஆண்டுகளாக நான் வேலை இல்லாமல் இருக்கின்றேன்.

எனக்கு யாரும் எந்த உதவியும் வழங்கவில்லை. தற்போது நான் மனு பாக்கருக்காக சந்தோஷமாக இருக்கின்றேன். அவரால் என்ன முடியும் என்பதை தற்போது இந்த உலகத்திற்கு காட்டிவிட்டார். அவருடைய முழு திறமையை வெளிக்கொண்டு வர உதவியாக தான் நான் இருந்தேன். தற்போது நான் இந்தியா செல்ல இருக்கின்றேன். என்னுடைய வாழ்க்கையில் புதியதாக தொடங்க விரும்புகின்றேன்.

ஆனால் முதலில் எனக்கு வேலை வேண்டும். நான் பணம் சம்பாதிக்க வேண்டும். மனு பாக்கர், தற்போது ஒரு நட்சத்திரமாக மாறிவிட்டார். ஆனால் நான் இன்றும் வேலை இல்லாத பயிற்சியாளராக தான் இருக்கின்றேன். விரைவில் எனக்காக யாராவது பணி கொடுங்கள். நான் மூன்று ஆண்டுகளாக மிகவும் கஷ்டப்பட்டேன்.

இதைப்பற்றி நான் யாரிடமும் பேசக்கூடாது என்று தான் நினைத்தேன். முதலில் நான் இந்தியா சென்றவுடன் எனக்கு வேலையை தேட ஆரம்பிக்க போகிறேன். மனு பாக்கருடன் செல்வதற்கு எனக்கு பயிற்சியாளர் அந்தஸ்து வாங்கி கொடுத்து பி.டி உஷாவுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ஆனால் இங்கு வந்து நான் பல பிரச்சனைகளை சந்தித்தேன் என்பது மாற்றுக் கருத்து கிடையாது என ஜஸ்பல் ரானா கூறியுள்ளார்.

Story first published: Tuesday, July 30, 2024, 18:38 [IST]
Other articles published on Jul 30, 2024
English summary
Olympics 2024 - Manu Bhaker coach Jaspal Rana says He is Jobless for 3 Years எனக்கு 3 ஆண்டுகளாக வேலை இல்லை.. யாராவது பணி கொடுங்க.. பதக்கம் வென்ற மனு பாக்கரின் பயிற்சியாளர் சோகம்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+